தைராய்டும் அதன் விளைவுகளும்
15 Jul,2018
தைராய்டு என்பது இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தாக்கும் ஒரு நோயாக மாறிவிட்டது. கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினையே தைராய்டு எனப்படுகிறது. சுமார் மூன்று கோடி மக்கள் உலகம் முழுவதும் தைரொய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
தைராய்டு சுரப்பியானது உடலுக்கு தேவையான ஆற்றல், உடல் வெப்பநிலை மற்றும் மற்ற ஹார்மோன்கள் சுரப்பில் பெரும்பங்கு வகிக்கின்றது. எனவே தைராய்டு சுரப்பியில் ஏர்[ஏற்படும் பாதிப்பு நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையே பாதிக்கக்கூடும். தைராய்டு சுரப்பியின் வகைகள் அதன் அறிகுறிகள் மற்றும் அது ஏற்பட காரணங்கள் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டின் வகைகள்
தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்கள் சுரப்பதை பொருத்து ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டுஇரண்டு வகைப்படுகிறது. அது மட்டுமின்றி பாபில்லரி, பாலிகுலர், அனப்லாஸ்டிக் மற்றும் மெடுல்லரி போன்ற வகைகளும் உள்ளது.
அறிகுறிகள்
1 கழுத்தில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவது
2 உடல் எடையில் மாற்றம்
3 மூச்சு விடுவதில் சிரமம்
4 குரலில் மாற்றம்
5 இருதயத் துடிப்பு அதிகரிப்பு
6 உயர் இரத்த அழுத்தம்
7 நரம்புத்தளர்ச்சி
8 ஒழுங்கற்ற மாதவிடாய்
காரணங்கள்
தைராய்டு ஏற்பட பல காரணங்கள் கூறப்பட்டாலும், சில காரணங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்கள் கூறும் காரணங்களானது:
1 அயோடின் சத்து குறைபாடு
தினசரி நாம் சாப்பிடும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பதும் தைராய்டு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகிறது.
2 பரம்பரை வழியில்
தைராய்டு தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவருக்கு இருப்பினும் குழந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது. இது பரம்பரையாக ஏற்பட கூடிய ஒன்றாகும்.
3 தொற்று நோய்கள்
உடலில் ஏற்படும் சில வகை தொற்று நோய்களும் தைராய்டை ஏற்படுத்த கூடியவை என்பது குறிப்பிட தக்கது.
வயது அடிப்படையில்
0 முதல் 6 வயது
பிறக்கும் போதே உலகளவில் 4000 குழந்தைகள் தைராய்டால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. கருவில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்க தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன் சரியான அளவில் சென்றாக வேண்டும். தைராக்சின் பற்றாக்குறை ஏற்படும்போது குழந்தைக்கு தைராய்டு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்காது. குறிப்பிட்ட வயதிற்கு பின்தான் அவர்களின் நடை, பேச்சு போன்றவற்றில் மாற்றங்கள் தெரிய தொடங்கும்.
6 முதல் பருவ வயது வரை
6 முதல் பருவ வயது வரை உள்ளவர்களுக்கு தைராக்சின் குறைபாட்டால் நியாபக மறதி மற்றும் புத்திக்கூர்மையில் மந்தம் ஏற்படும். குறிப்பாக கற்றல் தொடர்பான பிரச்சினைகள், நினைவாற்றல் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆண்கள்
தைராய்டு பெண்களை மட்டுமே அதிகம் பாதிக்கும் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. நோய் என்பது யாருக்கு வேண்டமானாலும் வரலாம். ஆண்களும் பெருமளவில் தைராய்டால் பாதிக்கப்பட்டுதான் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் புகை பிடித்தல், அயோடின் சத்துக் குறைவு போன்றவையாகும். இதனால் ஆண்மைக்குறைவு, புற்றுநோய், ஏன் மரணம் ஏற்படும் அபாயம் கூட உள்ளது.
பெண்கள்
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் அதிகளவில் தைராய்டால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி சிறு வயது பெண்களுக்கும் தைராய்டு பாதிப்பு அதிக உள்ளது இதனால் அவர்கள் பருவமடைவது பாதிக்கப்படுகிறது மேலும் ஒழுங்கற்ற மாதவிலக்கு, கருத்தரிப்பதில் பிரச்சினை, கர்ப்பகால கோளாறுகள் என தைராய்டு நோயால் பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும், கர்ப்பகாலத்திலும் அதற்கு பிறகும் பெண்கள் தைராய்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு
40 வயதிற்கு மேல் ஹார்மோன்கள் சுரப்பு சீராக இருப்பதில்லை. எனவே இந்த சமயத்தில் தைராய்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
விளைவுகள்
தைராயடை ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிட வேண்டும் இல்லையெனில் அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் நம் உடலின் ஒட்டுமொத்த செயல்முறையையும் கட்டுப்படுத்துவதில் தைராய்டு சுரப்பியின் பங்கு மிகமுக்கியமானது. எனவே தைராய்டிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது அது மனக்குழப்பம், அதிக இரத்த அழுத்தம், அதிக இதய துடிப்பு, தொடர்ச்சியான காய்ச்சல் என சிறிய மாற்றங்களில் தொடங்கி மஞ்சள் காமாலை, கோமா போன்ற பல மோசமான விளைவுகளை கூட ஏற்படுத்திவிடும்