நுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்
05 Jun,2018
புற்றுநோய் தாக்கத்தை படிப்படியாக தான் அறிய முடியும். ஆனால் நுரையீரல் புற்றுநோயை அதன் அறிகுறி தெரியும் முன்பே ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
அதுகுறித்து சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதில் ரத்தத்தில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறுகள் மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய முடியும் என நிரூபித்துள்ளனர். ஒரு துளி ரத்தத்தின் மூலம் பரிசோதனை நடத்தி கண்டுபிடிக்க முடியும் என நிபுணர் ஜியோப்ரே ஆர்.அஸ்னார்டு தெரிவித்துள்ளார்.
டி.என்.ஏ.வில் உள்ள செல்களின் அடிப்படையில் நுரையீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 141 நகரங்களில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேரிடம் ரத்த பரிசோதனை நடத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.