இன்சுலின் சுரப்பு குறைவதுதான் சர்க்கரைநோய்க்கு முக்கியக் காரணம், உடல்பருமன், மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல், தவறான உணவுப் பழக்கங்களெல்லாம் இதற்கு அடித்தளம்.
3,000 கலோரிகள் கொண்ட உணவைச் சாப்பிட்டால், அதற்குரிய வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால், சர்க்கரைநோய் வரும். இப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டது, உட்கார்ந்த இடத்திலேயே வேலை என ஆகிவிட்டது. போதுமான உடலுழைப்பின்மை இந்த நோய்க்கு வழிவகுத்துவிட்டது
இன்றைக்கு விவசாயத்தில் அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளை போதுமான பாதுகாப்பு கவசம் இல்லாமல், விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்.
பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது, அது அவர்களின்மீது படுகிறது. அந்த ரசாயனம், பீட்டா செல்களைப் பாதிப்பதால் சர்க்கரைநோய்க்கு ஆளாகிறார்கள்.
இது, கண்பார்வையிழத்தல், வலிப்பு, மாரடைப்பு என பல தொற்றா நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த நோய் பாதிப்பில் மிக மோசமானது காலில் ஏற்படக்கூடிய புண்கள்.
சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கால் பாதங்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல இல்லாமல் ‘வரும் முன் காப்போம்’ என்று பாதங்களைப் பாதுகாக்க முயல வேண்டும்.
செய்ய வேண்டியவைஸ
வெளியே போகும்போது செருப்பில்லாமல் நடக்கக் கூடாது. கைக்கண்ணாடியைக் கொண்டு பாதங்களைத் தினமும், நன்கு கவனிக்க வேண்டும்.
பாதத்தில் புண், பாதம் கறுப்பு நிறத்தில் மாறுதல், தடிமனான தோல் போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும்.
கால் ரத்த ஓட்டப் பாதிப்பால், கால் அழுகிப் போகும் நிலைமைகூட ஏற்படலாம். இந்த நிலைமை ஏற்பட்டால், குறிப்பிட்ட கால் மற்றும் விரல்களை அகற்ற நேரிடும். இது மிகவும் வேதனையான உண்மை. ஆரம்பத்திலேயே நமது பாதங்களை பராமரித்து வந்தால், இதுபோன்ற விளைவுகளைத் தடுத்துவிடலாம்.
தினமும் குளிக்கும்போது பாதங்களை நன்றாகச் சோப்பு போட்டு, சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்த, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும்.
ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தக் கூடாது.
நவீன சிகிச்சைகள்ஸ
இப்போது சர்க்கரைநோயால் கால் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டாலும் கால் அகற்றுவதைத் தடுக்க, நுண்ணுயிர் கிருமிக் கட்டுப்பாடு (Infection Control), காயம், காயம் பரவுதல் கட்டுப்பாடு, சர்க்கரை அளவு கட்டுப்பாடு (Metabolic Control), ரத்த ஓட்ட கட்டுப்பாடு (Vascular Control), கால் அழுத்த மாற்றுக் கட்டுப்பாடு (Mechanical Control) போன்ற சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
சர்க்கரை நோய் நிபுணர் ராஜேந்திரன்
இந்தச் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள, பாதிக்கப்பட்டவரின் ஒத்துழைப்பு அதிகம் தேவை. அதேபோல, டிரெஸ்ஸிங் (Dressing) செய்யும் மருத்துவருக்கும் பொறுமை அவசியம். அப்படிச் செய்யும்போது கால்களையோ, விரல்களையோ இழந்துவிடாமல் காப்பாற்றிவிடலாம். சில புண்கள் ஆறுவதற்கு ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது