தொடர்ந்து பலநாட்கள் சோகமாக இருப்பதுகைவிடப்பட்டது போன்ற அல்லது எதிர்மறையான மனநிலைகள்பதற்றம் மற்றும் தன்மீது மதிப்பற்ற நிலைதவிப்பு, குற்ற உணர்ச்சி மற்றும் / அல்லது தன்மீது மதிப்பற்றது போன்ற
உணர்வுகள்அதிகமாகச் சாப்பிடுதல் அல்லது பசியின்மைதற்கொலை பற்றிய எண்ணங்கள் அல்லது முயற்சிகள்மகிழ்ச்சிகரமான காரியங்களில் ஆர்வம் இல்லாமைதெம்பு குறைவு மற்றும் சோர்வுஅதிக தூக்கம் அல்லது தூக்கமின்மைதீராத தலைவலி, செரிமானக் கோளாறுகள் அல்லது வலி

ஆண்களில் மன இறுக்கத்திற்கான அறிகுறிகள் (Symptoms of Depression in Men)
மன இறுக்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் பாதிக்கிறது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே உள்ளன.
மன இறுக்கம் இருக்கும்போது, ஆண்கள் எளிதில் எரிச்சலடையலாம், பதற்றமாக இருக்கலாம் அல்லது முரட்டுத்தனமாக இருக்கலாம் சமூகத்திலிருந்து ஒதுங்கிச் செல்லும் மனோபாவம் அவர்களுக்கு இருக்கலாம்.
நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கும், சிறிய தனிக்குடும்பமாக இருப்பவர்களுக்கும், உணர்வுரீதியான ஆதரவு இல்லாத காரணத்தால் மன இறுக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. மருத்துவரீதியான பிரச்சனைகளும் வயது முதிர்வும் மன இறுக்கம் ஏற்படுவதற்கான அபயாத்தை மேலும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு வாழ்வார்கள், அவர்களுக்கு மன இறுக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை மருத்துவரால் எளிதில் கண்டுகொள்ள முடியாமல் போகலாம். வயது அதிகமான ஆண்களுக்கு, நீரிழிவுநோய், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், சுகவீனத்திலிருந்து முற்றிலுமாக குணமாகாமை, பணி ஒய்வு, நண்பர்கள் மற்றும்/அல்லது உறவினர்களை இழப்பது போன்ற காரணங்களால் மன இறுக்கம் ஏற்படலாம்.
பெண்களில் மன இறுக்கத்திற்கான அறிகுறிகள் (Symptoms of Depression in Women)
ஆண்களை விட பெண்களுக்கு மன இறுக்கத்தின் அறிகுறிகள் அடிக்கடித் தோன்றுகின்றன. இந்தியாவில், எல்லா வயது பெண்களுக்கும் மன இறுக்கம் பொதுவாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு மன இறுக்கம் ஏற்பட உயிரியல், மரபியல், ஹார்மோன், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த காரணிகள் காரணமாக இருக்கலாம்.
பெண்கள் தமது இனப்பெருக்கத்தின் பல்வேறு கட்டங்களில் பின்வருபவற்றால் பாதிக்கப்படலாம்:
மாதவிடாய்க்கு முந்தைய துன்பக் கோளாறு (ப்ரீமென்ஸ்ட்ருவல் டிஸ்ஃபோரிக் டிசார்டர் (PMDD))கர்ப்ப காலத்தில் மன இறுக்கம்குழந்தைப் பேறுக்குப் பிறகான மன இறுக்க நிலைமைகள்மாதவிடாய் நிற்பது சார்ந்த மன இறுக்கம்
வீட்டில் எதிர்கொள்ளும் வன்முறை, சமூகத்தில் நல்ல நிலை இல்லாமை, பாதிப்புகளுக்கு உள்ளாதல், உளவியல் கோளாறு உள்ளது என்று சமூகத்தால் முத்திரை குத்தப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மன இறுக்கம் ஏற்படலாம்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் மன இறுக்கத்தின் அறிகுறிகள் (Symptoms of Depression in Children and Adolescents)
குழந்தையின் நடத்தை பிரச்சனைக்குரியதாகவும் சமூகத்தில், குடும்பத்தில் அல்லது பள்ளியில் சகஜமான வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதாகவும் இருந்தால், மன இறுக்கம் என்பது சிக்கலாகலாம். இளம் வயதினரில், 2 வாரங்களுக்கும் மேல் மன இறுக்கம் நீடித்தால், அவர்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவர்கள் சதவீதம் 21. 5 முதல் 71,25% வரையுள்ளது. இளம் வயதினரில், 2 வாரங்களுக்கும் மேல் மன இறுக்கம் நீடித்தால், அவர்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதப்படுகிறது. இளம் வயதினரில் ஏற்படும் மன இறுக்கம் என்பது அச்சுறுத்தலான மனக் கோளாறாகும், எப்போதும் சோகமாக இருப்பது, தினசரி செயல்பாடுகளில் ஆர்வமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மன இறுக்கமானது இளம் வயதினரின் உணர்வுகள், நடத்தை, செயல்பாடு, உணர்வு சார்ந்த மற்றும் உடல் சார்ந்த அம்சங்களைப் பாதிக்கிறது. மன இறுக்கத்தின் அறிகுறிகள் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் வேறுபடுகின்றன.
மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரியில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்: கல்வியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம், மற்றவர்களைப் போல தாமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம், சமூக ஊடகத்தில் கேலிக்கு உள்ளாக்கப்படுவது, போட்டி போன்ற இவை அனைத்துமே மாணவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படக் காரணமாகலாம்.
இளைஞர்கள், குறிப்பாக இள வயதிலிருந்து பெரியவர்கள் எனும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் வயதில் உள்ளவர்கள், தமது வாழ்வின் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருப்பதால், இவர்களும் மன இறுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வது, எந்தத் துறையில் வேலை செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்வது, முழுதும் பெற்றோரைச் சார்ந்து இருந்த நிலையில் இருந்து சற்று சுயமாக பொறுப்பெடுத்துக்கொள்ளும் நிலைக்கு மாறுவது போன்றவை இந்த காலகட்டத்தில் இளம் வயதினர் எதிர்கொள்ளும் சவால்களாகும்.
மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும். கல்லூரி அல்லது பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள், யாரையும் சாராமல் தனியாக வாழக் கற்றுக்கொள்ளுதல், குடும்பத்தைப் பிரிந்து தனியாக இருப்பது, புதிய உறவுகளைப் பெறுவது, சீரற்ற தூக்கம் போன்ற காரணங்களால் மாணவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படலாம். கல்வியில் தரம் குறைதல், போதைப் பழக்கம் மற்றும் அவ்வப்போது (பள்ளி கல்லூரிக்கு) வராமல் போவது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களை (மொபைல், கணினி போன்றவை) அதிகமாகப் பயன்படுத்துவதும் மன இறுக்கத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
மாணவர்களுக்கு மன இறுக்கம் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டால், தற்கொலை போன்ற ஆபத்தான விளைவுகளைச் சிறப்பாகச் சமாளிக்கலாம், தடுக்கலாம். இந்தியாவில் தற்கொலை முயற்சி செய்பவர்களில் அதிகமானவர்கள் 30 வயதுக்குக் கீழே உள்ள மாணவர்கள், திருமணமாகாத ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என தெரியவந்துள்ளது,