உங்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள்

02 May,2018
 

 


மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம்.
 
இரட்டையர்களான கில்லியன் மற்றும் ஜாக்கி ஆகியோரில் ஒருவர் மற்றொருவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பிரிட்டனின் இரட்டையர்கள் ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.
அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கிய காரணம் என நம்புகிறார் அவர்.
''ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உடலில் உள்ள நூறு ட்ரில்லியன் நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை'' என அவர் தெரிவித்தார்.
இவரிடமிருந்து மலத்தை மாதிரியாக பெற்று அவர் ஆராய்ந்தார். அதில் இருவரில் மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில இனங்களே வாழ்கின்றன.
'' பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையை கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்திலிருக்காது'' என்கிறார் பேராசிரியர் ஸ்பெக்டர். இதே மாதிரியான பாங்கை அவர் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப்பேராசிரியர்.
ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட டயட் கடைபிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும்.
எந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது ?
முழு தானியங்கள்
பெர்ரி உள்ளிட்ட பழங்கள், பேரிக்காய்
ப்ரொக்கோலி மற்றும் கேரட் போன்ற காய்கறிகள்
பீன்ஸ்
பருப்பு வகைகள்
கொட்டைகள்
2. மரபணு
மக்களில் சிலர் விடாமுயற்சியுடன் டயட்டை தொடருகிறார்கள் மேலும் உடற்பயிற்சியும் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை அதேவேளையில் சிலர் வெகு சில உடற்பயிற்சிகள் செய்து, விரும்பிய உணவையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே. அது ஏன்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடல் எடை விவகாரத்தில் 40 -70% சதவீதம் சந்ததி வாயிலாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது என நம்புகின்றனர்.
'' மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையது என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை வர வைக்க போதுமானதாக இருக்கலாம்'' என்கிறார் பேராசிரியர் சதாஃ ப் ஃபரூக்கி
 
குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வை பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ன விரும்புகிறார்? என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்? என்பதில் மரபணுக்கள் பங்காற்றுகின்றன. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம் மேலும் எப்படி நமது உடல் கொழுப்பை கையாளுகிறது என்பன போன்றவற்றிலும் மரபணுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் MC4R மரபணுவும் முக்கியமான ஒன்று.
இந்த MC4R மரபணுவை பொறுத்தவரையில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
'' நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை ஏறுவதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களை செய்துகொள்ள உதவலாம்'' என்கிறார் பேராசிரியர் ஃபரூக்கி.
3. நேரமும் உணவும்
ஒரு பழமொழி உண்டு.'' காலையில் அரசனை போல உண்ண வேண்டும். இளவரசனை போல மதிய உணவை முடிக்க வேண்டும், ஆண்டியை போல இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்'' . இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.
உடல்பருமனுக்கான சிறப்பு மருத்துவர் ஜேம்ஸ் ப்ரவுன் கூறுகையில்
'' எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலைச் செய்கிறோம் என்பதால் அல்ல நமது உடல் கடிகாரமே இதற்கு காரணம்'' என்கிறார்.
'' பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாள்வதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் ப்ரவுன்.
இக்காரணத்தின் பொருட்டு ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பதே நீங்கள் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.
கடந்த ஒரு தசாப்தத்தில், பிரிட்டனில் சராசரி இரவு உணவுக்கான நேரம் ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குச் சென்றுவிட்டது. இது உடல்பருமன் அளவு அதிகரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார் மருத்துவர் ப்ரவுன்.
 
ஆனால் இன்றைய வேலை பாங்கு மற்றும் பரபரப்பான வாழ்க்கைமுறையில் சில விஷயங்களை நாம் செய்வதன்மூலம் நம் இடுப்பு அளவில் சில மாறுதல்களை உண்டாக்கமுடியும்.
மருத்துவர் ப்ரவுனை பொறுத்தவரையில் காலை உணவை தவிர்ப்பது அல்லது ஒரு பிரட் துண்டை மட்டும் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை (முழு தானிய சிற்றுண்டியுடன் முட்டை) எடுத்துக்கொள்வது போன்றவை உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான காலை உணவாகவும் இருக்கும்.
அதைத்தொடர்ந்து ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும் மற்றும் சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. மூளையை ஏய்த்தல்
நடத்தை உட்பார்வை குழுவானது பிரிட்டன் மக்கள் கலோரியை கணக்கில் வைத்துக்கொள்வதில் சரியாக செயல்படுவதில்லை என்றும் இதனால் 30 -50% உணவு குறைவாக மதிப்பிடப்படுகிறது எனக் கூறியுள்ளது.
நடத்தை விஞ்ஞானி ஹியூகோ ஹார்ப்பர், கலோரியை கணக்கிடுவதை விட உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வர பரிந்துரைக்கிறார்.
உதாரணமாக, விழிப்புணர்வுடன் தன்னம்பிக்கை கொண்டிருப்பதை விட உணவை பார்ப்பதால் வரும் காட்சி தூண்டுதல்களை நீக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
உடல்பருமன்
ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை உங்களது சமையலறையில் வைக்காதீர்கள். பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருங்கள்.
தொலைக்காட்சி முன்னர் முழு பிஸ்கட் பாக்கெட்டுடன் உட்காராதீர்கள், எத்தனை உங்களுக்கு வேண்டுமோ அதனை எண்ணி உங்களது தட்டில் வைத்து எடுத்துச் சென்று அமருங்கள்.
ஒட்டுமொத்தமாக தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.
சாப்பிடும் உணவு 5 - 10% அளவுக்கு மட்டும் குறைந்தால் மக்கள் அதனை குறிப்பிட்டு கவனிக்கமாட்டார்கள். சிறிய அளவிலுள்ள தட்டுகளை பயன்படுத்துவது கவனக்குறைவாக அதிக கலோரிகளை உண்ணுவதை தவிர்க்க உதவும் என்கிறார் ஹார்ப்பர்.
ஹார்மோன்கள்
உடல்பருமனுக்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெறுமனே இரைப்பையின் அளவை குறைப்பது மட்டுமல்ல, ஹார்மோன்கள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நமது பசியுணர்வு ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடலில் பசியுணர்வை கட்டுப்படுத்தவும் தூண்டவும் இருவேறு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்பருமனை கட்டுப்படுத்த செய்யப்படும் மிக பயனுள்ள சிகிச்சை பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையாகும்.
 
ஆனால் அறுவை சிகிச்சையின் முக்கியப் பகுதி இரைப்பை அளவை குறைப்பதே. பிஎம்ஐ 35-க்கு மேல் உள்ளவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பசியார்வத்தில் மாறுதல்களை உண்டாக்கும் குடல் நாள ஹார்மோன்களை மீள் உருவாக்கம் செய்துள்ளனர். தற்போது இது புதிய மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
மூன்று ஹார்மோன்களின் கலவையானது ஊசி வழியே தினமும் நோயாளிகளுக்கு சுமார் நான்கு வாரங்கள் வரை போடப்படுகிறது.
'' நோயாளிகள் தற்போது குறைவான பசி உணர்வு கொண்டிருக்கிறார்கள். குறைவாக உண்ணுகிறார்கள் மேலும் 28 நாட்களில் 2-8 கிலோ வரை குறைத்திருக்கிறார்கள்.
இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் இதன் திட்டமென்னவெனில் நோயாளி ஆரோக்கியமான எடையை எட்டும்வரை இச்சிகிச்சையை பயன்படுத்துவதாகும்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies