அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும் - அதிர்ச்சியூட்டும் ஆய்வின் தகவல்
22 Apr,2018
ஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகப்படுத்துவோருக்கு மனச்சோர்வு ஏற்படும் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் மீதான மோகம் இன்றைய இளம் தலைமுறையினரிடமும், சிறுவர்களிடையும் அதிகமாக உள்ளது. செல்போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
நமது நாட்டில் 53 கோடிப்பேர் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதிகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாவது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
சிலர் வலிநிவாரணிகளுக்கு அடிமையாவது போல ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாகவும், சகமனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமலிருப்பதே ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கான காரணம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.