வாய் பகுதியில் அடிக்கடி துர்நாற்றம் வீச காரணம் என்ன?
22 Apr,2018
அடிக்கடி சளி, மூக்கடைப்பு, வாய் கிருமி தொற்று இருத்தல், சொத்தை பல், உள் தொண்டையில் தொற்று இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். நுரையீரல் சார்ந்த நோய், நுரையீரல் குழாய் வீக்கம், நுரையீரலில் சலம் போன்ற கிருமிகளாலும் துர்நாற்றம் ஏற்படும். காய்ச்சல், நீர்சத்து குறைவு, உமிழ்நீர் சுரப்பி கோளாறால் வரலாம்.
அதிக கொழுப்பு உணவு எடுத்தல், ஈரல், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் முற்றினாலும் ஏற்படும். இது போன்று உள்ளவர்கள் தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். அசைவ உணவு எடுத்த பின் வாய் கொப்பளிப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிக்கு தானியங்கி நரம்பு மண்டலம் பாதித்து உமிழ்நீர் சுரப்பி குறைதல், சாப்பிடும் உணவு பல்லுக்கு இடையில் சிக்கினால், அடிக்கடி வாய் கொப்பளிப்பது அவசியம்.
பல்வேறு நோய்க்கு மாத்திரை சாப்பிடுவதால் ஆண்மை குறைவு ஏற்படுமா?
இருதய நோய்க்கு எடுக்கும் அனைத்து மாத்திரைகளாலும் ஆண்மை குறைவு ஏற்படாது. தற்போது இந்த பாதிப்பு இல்லாத வகையில் தான் மாத்திரைகள் வருகின்றன. மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உடனே அதை நிறுத்தினால் மட்டுமே உடலுக்கு நல்லது.
அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படக்காரணம் என்ன?
ஒவ்வாத உணவுகளை எடுப்பது மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுவதால் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் காய்ச்சல், தலைவலி, சிறுநீர் பாதையில் தொற்று, அதிக வலி இருந்தாலும் இந்த உணர்வு ஏற்படும். மேலும் ஈரல், சிறுநீர் கோளாறுகளாலும் உணர்வு ஏற்படும். முக்கியமாக அடிக்கடி இந்த உணர்வு வந்தால் உணவு அளவு குறைகிறதா, எடை குறைகிறதா என கவனிக்கவும். பசியின்றி எடை குறைந்தால் உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.
முழங்கால் வீக்கம் ஏற்படக்காரணம் என்ன?
வயது முதிர்வு காரணமாக கால்களை தொங்க விடுவதன் மூலம் வீக்கம் ஏற்படும். இது நரம்பு மண்டலம் சார்ந்தது. ஒரு காலில் வீக்கம் என்றால் அது நரம்பு கோளாறு மற்றும் தமனி அடைப்பால் ஏற்படும். இது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிக்கு கிருமி தொற்று ஏற்பட்டாலும் வீங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வெளியில் தெரியாமல் காலுக்கு உள்ளே சலம் ஏற்பட்டு, வீங்கலாம். சிறியளவு எலும்பு முறிவு ஏற்பட்டாலும் வீங்கும். காலில் உள்தசைநானில் ஏற்படும் கோளாறுகளாலும் ஏற்படும். இதற்கான காரணத்தை அறிந்து, உரிய டாக்டரிடம் சிகிச்சை பெறவும்.
அடிக்கடி தும்மல் ஏற்படக்காரணம் என்ன?
மூக்கில் இருந்து மூச்சுக்குழல் வரை மெல்லிய நீர் சுரந்து, மூச்சு இழுக்கும் போது துாசி, நச்சு வாயுக்கள் நுரையீரலுக்கு சென்று விடும். தும்மல் என்பது சம்பந்தம் இல்லாத பொருள்களில் விடாமல் வெளியேற்றும் ஒரு செயல் ஆகும். சளி பிடிக்கும் போது தும்மல் ஏற்படும், மூக்கில் அடைப்பு மற்றும் மூக்கு எலும்பு வளைவு, துாசிகளால் ஏற்படும். சில நேரம் அயோடின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுப்பதாலும் ஏற்படும். இதற்குரிய சிகிச்சை எடுப்பது அவசியம்