காந்தத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களில் அதை உள்ளிட்டுப் பயன்படுத்துகிறார்கள். நம் உடலில் அனைத்துப் பாகங்களிலும் அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. அந்த இடங்களில், காந்தத்தால் ஆன ஆபரணங்களை அணிந்தால் குறிப்பிட்ட நோய்கள் குணமாகும். குறிப்பாக, பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மெட்டி போன்ற ஆபரணங்கள் காந்தத்தால் செய்யப்படும்.
வளையல் அணிவதால் அந்த இடத்தில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டுக் கருப்பை மற்றும் அதுசார்ந்த உறுப்புகளில் வரக்கூடிய பிரச்னைகள் சரிசெய்யப்படும். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது கை முழுக்க வளையல்கள் அணிவது இதற்காகத்தான். இதேபோல் மெட்டி அணிவதாலும் கருப்பைப் பிரச்னைகள் சரியாகும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால்தான் நம் முன்னோர் மெட்டி, வளையல் அணியும் பழக்கத்தைப் பின்பற்றியிருக்கின்றனர்.
காதுப்பகுதியில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் கண்பார்வைக்கான உடல் உறுப்புகளுடன் இணைக்கப் பட்டிருப்பதால், காந்தக் கம்மல் அணிவதன்மூலம் பார்வை தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்த முடியும். தைராய்டு நோய்க்கும் இது தீர்வு தரும். காந்த சிகிச்சை என்பது, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறையாகும்.
செரிமானக் கோளாறின் ஆரம்ப அறிகுறிகளான வயிற்றுவலி, மலச்சிக்கல், அசிடிட்டி போன்றவற்றையும் காந்த சிகிச்சையில் சரிசெய்ய முடியும். மூட்டு, இடுப்பு, கழுத்துப்பகுதிகளில் வரக்கூடிய வலி, வாதவலி, தசைப்பிடிப்பு, மூட்டுவாதம் போன்றவற்றைச் சரி செய்யவும் காந்த சிகிச்சை பயன்படுகிறது. காயம்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன் ரத்தக்கட்டு, ரணம் போன்றவற்றை ஆற்றவும் காந்த சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.
தலைப்பகுதியில் காந்த சிகிச்சை வழங்கினால் மூளையில் தூக்கத்துக்குக் காரணமான `மெலட்டோனின்’ ஹார்மோன் சுரப்பு எளிதாகி ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். மன இறுக்கம், படபடப்பு போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தலைப்பகுதியில் காந்த சிகிச்சை அளிக்கும்போது மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்ய வேண்டியது அவசியம். காந்தசக்தி செலுத்தப்பட்ட நீரை அருந்துவதால் செரிமான உறுப்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் சீராகும். ரத்தக்குழாயின் உள்பகுதியில் (endophelium) பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயைச் சுத்தம் செய்வது, ரத்தம் உறையாமல் இயல்பு நிலையில் வைத்துக் கொள்வது, சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள் சேராமல் பாதுகாப்பது, மண்ணீரலைப் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கு காந்த நீர் உதவும். ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி உடல் உறுப்புகள் சீராக இயங்கவும் காந்தநீர் உதவுகிறது
காந்த சிகிச்சை வலியில்லாத எளிய சிகிச்சை. வேறுபட்ட சக்திகளைக்கொண்ட காந்தங்களை சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துவார்கள். நமது உடலில் நேர்மின் அயனி (Positive ion), எதிர்மின் அயனி (Negative ion) என இரண்டு சேனல்கள் உள்ளன. காந்த சிகிச்சை அளிக்கும்போது, காந்தத்தின் சக்தி இந்த அயனிகளுடன் இணைக்கப்படுவதால் மின்வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.