பீர் அல்லது வொயின் குடித்து வந்தால் மனிதர்களின் ஆயுள் நீளும்
28 Mar,2018
உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நீண்ட ஆயுள் பெற மது குடிப்பதும் உதவி செய்கிறது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மது உடல் நலத்திற்கு கேடு என்ற வார்த்தையும் மட்டும் கேட்டு பழகிய நமக்கு இது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இது தற்போதைக்கு தெரிவிக்கப்பட்ட ஒன்றல்ல. கடந்த சில ஆண்டுகளாக பல ஆய்வுகளில் இதுபோன்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நரம்பியல் நிபுணர் கிளாடியா கவாஸ், ஆய்வில் கண்டிபிடித்தது. தினமும் இரண்டு கிளாஸ் பீர் அல்லது வொயின் குடித்து வந்தால் மனிதர்களின் ஆயுள் நீளும் என்று தெரிவித்துள்ளார்.
Exercise
இந்த நீண்ட கால ஆய்வு யுசி இர்வின் இன்ஸ்டிடியூட் ஆப் நினைவகம் குறைபாடுகள் மற்றும் நரம்பியல் சீர்கேடுகள் மையத்தில் நடந்தப்பபட்டது. இந்த ஆய்வுகளில் தரவுகளின் படி இந்த செய்தி ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதுப்படுத்த தினமும் 15 முதல் 45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் தினமும் இரண்டு கிளாஸ் பீர் அல்லது வொயின் குடிப்பவர்களை தொடர்ந்து கண்காணிப்பட்டு வந்தது. இவர்களில் தினமும் இரண்டு கிளாஸ் பீர் அல்லது வொயின் குடிப்பவர்களே நீண்ட ஆயுளை பெற்றுள்ளனர்.
மிதமான அளவு மது எடுத்துக் கொள்பவர்களுக்கு நீண்ட ஆயுள் பெற உதவுகிறது. ஆனால் அதிகளவு மது எடுத்துக் கொள்பவர்களுக்கு அது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்றும் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.