நம்மில் பலரும் பாக்டீரியாக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்கு மேற்பரப்புகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கான கிருமிகளை போக்கிவிடுபவற்றை பெருவணிக கடைகளில் இருந்து வாங்கிக் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், அவ்வாறு செய்வதில், சுற்றுச்சூழலுக்காக செலவு செய்கின்ற பணத்தை தவிர, பாக்டீரியாக்களை அழித்து விடுவதற்காக நாம் வாங்குகின்ற இந்த கிருமி போக்கிகளுக்காக செலவழித்த பணம் சிறப்பாக செலவழிக்கப்படுகிறதா? இல்லை என்பதுதான் உண்மை.
மேற்பரப்பை துடைத்து விடுவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ள பெரும்பாலான நுண்ணிய கிருமிகளை உங்களால் உண்மையிலேயே அழித்துவிட முடியுமா?
ஏதாவது முயற்சியை மேற்கொண்டு அவ்வாறு செய்ய ஏன் விரும்புகிறீர்கள்?
நம்முடைய வீடுகளில் ஒட்டியிருக்கும் சில கிருமிகள் நமக்கு தீங்கானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இது பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பச்சை இறைச்சியை கையாளும்போது, பாக்டீரியாக்களை பரவவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சமைப்பதற்கு முன்னால் கோழி இறைச்சியை கழுவுகின்ற பழைய நடைமுறை மிகவும் மோசமான ஒன்று. இதனால், தீங்கான பாக்டீரியாக்களின் மீது பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.
இவ்வாறு செய்கின்றபோது, நமக்கும், நம்முடைய குடும்பத்திற்கும் தீங்கு உருவாக்கக்கூடிய ஒன்றை தெளித்து விடுகின்ற வாய்ப்புக்கள்தான் இதனால் அதிகரிக்கிறது.
எனவே, கோழி இறைச்சியை கழுவவே வேண்டாம். ஆனால், மேற்பரப்புகளில் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கின்ற பொருட்களை பயன்படுத்துவது எந்த அளவுக்கு செயல்திறன் மிக்கதாக அமையும் என்று பார்ப்போமா?
நேரமும், பணமும் வீண்
இதனை கண்டறிய "த டிரஸ்ட் மி ஐயாம் எ டாக்டர்" அணி மூன்று குடும்பங்களை தேர்ந்தெடுத்து, அகற்றக்கூடிய சமயலறை மேற்பரப்பை கொண்ட வசதியை அந்த குடும்பங்களுக்கு வழங்கினர்.
இந்த சோதனைக்கு முன்னர், சோதனையில் பங்கேற்ற குடும்பங்கள் அங்கிருந்த மேற்பரப்பு முழுவதையும், பாக்டீரியா பரவாமல் தடுக்கின்ற பொருட்களால் சுத்தம் செய்தனர்.
அதன் பிறகு, அவ்விடத்தை அவர்களின் சமையலறை போல சாதாரணமாக பயன்படுத்தினர். ஆனால், இந்த மேற்பரப்பை பயன்படுத்தாமல் தவிர்க்க அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.
அவர்களும் அவ்வாறே செய்தனர். இருப்பினும், கிருமிகள் பரவாமல் பாதுகாத்து கொள்வதற்காக வழக்கமாக இந்த மேற்பரப்புக்களில் துடைத்தும் வந்தனர்.
பாத்திரம் கழுவும் தொட்டிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதன் பின்னர் அந்த மேற்பரப்புக்களை நியூகாஸ்டிலுள்ள நார்தும்பிரியா பல்கலைகழகத்தில் இருக்கும் நுண்ணுயிரியல் இயற்பியலாளர் லைன் டோவரிடம் ஆய்வாளாகள் அனுப்பி வைத்தனர்.
அவர் கண்டு பிடித்தது என்ன?
"இந்த மேற்பரப்பு பாக்டீரியாக்களை அழித்துவிடும் பொருட்களால் சுத்தம் செய்யப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பின்னர் எடுக்கப்பட்டிருந்த முதல் மாதிரிகளிலேயே, ஏற்கெனவே பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளரும் சான்றுகள் இருந்தன" என்று அவர் கூறினர்.
வேறு சொற்களில் கூற வேண்டும் என்றால், கிருமிகள் பரவி விடாதவாறு துடைக்கப்பட்ட மேற்பரப்புக்களை நுண்ணுயிரிகள் உடனடியாகவே ஆக்கிரமித்து கொள்வது தெரியவந்தது.
"12 மணிநேரத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட மாதிரிகளில், குறிப்பிடும் அளவுக்கு பல்வேறுபட்ட பூஞ்சைகளின் வளர்ச்சி இருந்ததை காண முடிந்தது" என்று லைன் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, நுண்ணுயிரிகள் நெருங்காமல் இருக்க செய்வதாக நம்பி, அவற்றை அகற்றுவதாக எண்ணிக்கொண்டு சில பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், நீங்கள் உங்களுடைய நேரத்தையும், பணத்தை வீணாக்கி கொண்டிருக்கிறீர்கள்.
அவை மீண்டும் விரைவாக வளர்வது மட்டுமல்ல, நம்முடைய வீடுகளில் வளர்கின்ற நுண்ணுயிரிகள் பல தீங்கற்றவை என்பதோடு, அவற்றில் சில நம்முடைய உடல் ஆரோக்கத்தை பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானவை.
கைப்பிடிகள் மற்றும் கொக்கிகள்
சமையலறை மேற்பரப்புகளில் கேடான அதிக நுண்ணுயிரிகள் ஒட்டியிருக்கும் என்று தேவையற்ற கவலை அடைய வேண்டாம்.
சமையலறை மேற்பரப்பு பற்றி தேவையின்றி கவலைப்படுவது முக்கியமான புள்ளியை தவறவிடுவதாகும்.
உங்கள் சமயலறையில் மிகவும் அழுக்கான இடம் எது?படத்தின் காப்புரிமைP05Z4R9N
22 குடும்பங்களிடம் ஒவ்வொரு நாளும் சமயலறை மேற்பரப்புகள் முதல் செல்பேசிகள் வரையான 30 வீட்டு உபயோக சாதனங்களை துடைப்பதற்கு 'என்எஸ்எஃப் இன்டர்நேஷனல்' கேட்டுக்கொண்ட ஆய்வில், கோலிஃபாம் பாக்டீரியாவால் இந்த பொருட்கள் மிக கடுமையாக அசுத்தமாக இருப்பது தெரிய வந்தது.
ஈ.கோலியை உள்ளடங்கிய பாக்டீரியாவின் ஒரு குடும்பமான கோலிஃபாமை அழித்துவிடுவதாக, சமயலறை மேற்பரப்புகளையும், வாணலிகளையும் துடைக்க பாத்திரம் துடைக்கும் துணி அல்லது பஞ்சு பயன்படுத்தப்பட்டதுதான் இதில் முரண்பாடு.
இதனால்,.75 சதவீத பாத்திரம் துடைக்கும் துணிகளில் கோலிஃபாம் பாக்டீரியா தொற்றியிருந்தன.
இந்தப் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்ட பிற இடங்கள்:
• சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டிகளில் 45 சதவீதம்
• சமையலறை காட்சி அலமாரி 32 சதவீதம்
• காய்கறி வெட்டும் பலகைகள் 18 சதவீதம்
அவர்கள் குளியலறையையும் சுத்தப்படுத்தினர், அங்கும் கோலிஃபாம் பாக்டீரியா வளர்ந்துள்ளது:
• பல் துலக்கும் பிரஸ்களில் 27 சதவீதம்
• குளியறை கைப்பிடிகளில் 9 சதவீதம்
எல்லா கோலிஃபாம் பாக்டீரியாக்களும் கேடாவை இல்லை என்றாலும், அதிக தூய்மை கேட்டின் அடையாளமாக இவைதான் உள்ளன.
மனித மலத்தோடு ஏற்படும் தொடர்பால் மட்டுமே அவை நம்முடைய சமயலறைக்குள் பரவுவதில்லை.
ஆனால், அதிக தூய்மை கேடுடைய பச்சை இறைச்சியால் இவை பரவுகின்றன.
மிகவும் அழுக்கான பொருள்
கிருமிகள் பெருகுவதற்கு மிகவும் சிறந்த சூழ்நிலையான வெப்பமான, ஈரப்பதமான நிலை இருப்பதால், பாத்திரம் கழுவுகின்ற துணிகளில் இவ்வகை பாக்டீரியாக்கள் தஞ்சம் அடைந்துவிடுகின்றன.
சுற்றுச்சூழல் வழியாக நோய்கள் பரவுவதை பற்றி ஆய்வுகள் நடத்துகிற அரிசோனா பல்கலைக்கழக நுண்ணுயிரில் பேராசிரியர் டாக்டர் சாக் கெர்பா, சமையலறையில் இருக்கின்ற பஞ்சு அல்லது துணி பெரும்பாலும் நம்முடைய வீடுகளின் இருக்கின்ற மிகவும் அழுக்கான பொருள் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
ஒரு சதுர அங்குலத்திற்கு 50 பாக்டீரியாக்கள் இருக்கின்ற கழிவறை இருக்கையோடு ஒப்பிடுகையில், பஞ்சில் ஒரு சதுர அங்குலத்தில் ஒரு கோடியும், பாத்திரம் துடைக்கும் துணியில், 10 லட்சமும் காணப்படுகின்றன என்று இவருடைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வேறு சொற்களில் கூற வேண்டும் என்றால், நம்முடைய கழிவறை இருக்கையை விட 2 லட்சம் மடங்கு அதிக அழுக்குடையதாக நம்முடைய சமயலறை பஞ்சு இருக்கலாம்.
அழுக்கை நீக்க என்ன செய்யலாம்?
சமையலறையில் மோசமான கிருமிகள் பற்றி நீங்கள் கவலைப்படுவதாக இருந்தால், சமையலறையிலுள்ள பாத்திரம் துடைக்கும் துணியையும், பஞ்சையும் இயன்ற அளவுக்கு உலர வைத்து கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒருமுறை துவைத்து கொள்ளுங்கள்.
கிருமிகளை அழித்து விடுவதற்கு, நம்முடைய நுண்ணலை அடுப்பு அல்லது பாத்திரம் கழுவும் எந்திரத்தில் இவற்றை ஒட்டி வைப்பது போன்ற நம்முடைய சமையலறை பஞ்சுகளை சுத்தம் செய்வது பற்றிய உதவிக் குறிப்புகள் "குட் ஹெஸ்கீப்பிங்" பத்திரிகையில் வழங்கப்பட்டுள்ளன.
வெட்டும் பலகைகள் என்றால், பச்சை இறைச்சிக்கு ஒன்றும், வேறு அனைத்தையும் வெட்டும் வகையில் ஒரு பலகை என்று இரண்டு பலகைகளை வைத்திருப்பது நல்லது.
மரத்தாலான வெட்டும் பலகையை பயன்படுத்திய பின்னர், சுத்தமான பஞ்சை கொண்டு சோப்பு தண்ணீரில் கழுவிக்கொள்ளலாம்.
அசிட்டிக் அமிலம் கிருமிகளை அழித்துவிடும் நல்லதொரு அமிலமாக இருப்பதால் மிக நன்றாக சுத்தம் செய்துகொள்ள ஒரு பாத்திரம் நிறைய வினிகரால் கழுவி தூய்மைப்படுத்தாலம்.