உண்மையில் ஆபத்தற்ற அல்லது மிகச் சிறிதளவே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள், சூழல்கள், விஷயங்களைக் கண்டு அதிகம் பயப்படும் பிரச்சனையை அச்சக் கோளாறு (ஃபோபியா) என்கிறோம். உயரத்திற்கு பயப்படுதல், மூடிய அறைகளுக்குப் பயப்படுதல், பூச்சிகள், ஊசிகள், பாம்புகள் போன்றவற்றுக்குப் பயப்படுதல் போன்றவை பொதுவான சில அச்சக் கோளாறுகள். எனினும் எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும்
இந்த அச்சக் கோளாறு ஏற்படக்கூடும்.
இந்தப் பிரச்சனை உள்ள பெரும்பாலானவர்களுக்கு அது குழந்தைப் பருவத்திலேயே தோன்றியிருக்கும், ஆனால் வளர்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். எல்லா விதமான அச்சக் கோளாறுகளுக்கும் சிகிச்சை தேவையில்லை. அது உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால், அதை வெல்ல சிகிச்சை தேவைப்படலாம்.
காரணங்கள் (Causes)
அச்சக் கோளாறுக்கான துல்லியமான காரணங்கள் எவை என்று கண்டறியப்படவில்லை. ஒருவரது அச்சக் கோளாறுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கு இருக்கக்கூடிய அச்சக் கோளாறுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தேய்கிறது. இதை வைத்து, மரபு ரீதியாக இந்தக் குணம் கடத்தப்பட சாத்தியமுள்ளது என்று கருதப்படுகிறது.
அச்சக் கோளாறுகள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
தனிப்பட்ட அச்சக் கோளாறு:நிஜத்தில் ஆபத்தே இல்லாத அல்லது மிகமிகக் குறைந்த ஆபத்தே விளைவிக்கக்கூடிய குறிப்பிட்ட சில பொருள்கள், விலங்குகள் அல்லது சூழ்நிலைகளைக் குறித்து காரணமே இல்லாமல், இடைவிடாமல் பயப்படுதல். மூடிய அறைகள், சிலந்திகள் போன்றவற்றைக் குறித்தும் இவர்கள் பயப்படலாம்.அக்ரோஃபோபியாஎன்பது உயரத்தைக் கண்டு பயப்படுவதாகும். உயரத்தைக் கண்டு பயப்படும் இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் உயரமான கட்டடங்கள், பாலங்கள், மலைகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள்.க்லோசோஃபோபியா:கூட்டத்தின் முன்னிலையில் பேசவோ, (நடித்தல், பாடுதல், நடனம் ஆடுதல் போன்று ஏதேனும்) நிகழ்த்திக் காட்டவோ பயப்படுவார்கள்.கிளாஸ்ட்ரோஃபோபியா:இறுக்கமான அல்லது மூடிய இடங்களைக் கண்டு அஞ்சுதல்.ஹீமோஃபோபியா:இரத்தம் அல்லது காயம் குறித்து அதீத அச்சம்.சைனோஃபோபியா:நாய்களைக் கண்டு பயப்படுதல்.ஏவியோட்டோஃபோபியா:(வானூர்திகளில் பறப்பதற்குப் பயப்படுதல்.நிக்டோஃபோபியா:இருட்டுக்குப் பயப்படுதல். கேட்ட கனவு அல்லது இருட்டைக் கண்டு பயப்படுதல்.ஆஃபிடியோஃபோபியா:பாம்புகளைக் கண்டு அஞ்சுதல்.சோஷியல் ஃபோபியா:இவர்களுக்கு, தன்னைக் குறித்த அதீத விழிப்புணர்வுடன் இருத்தல், பொது அல்லது சமூக நிகழ்ச்சிகளில் சங்கோச்சப்படுதல் ஆகிய இரண்டு விதமான பிரச்சனைகளும் இருக்கும்.அகோராஃபோபியா:பொதுமக்கள் மத்தியில் அல்லது திறந்த வெளியில் தனியாக இருப்பதற்குப் பயப்படுதல்.
இவ்வகை அச்சக் கோளாறுகள் எதுவாயினும், அவை பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தலாம்:
பயத்தை உண்டாக்கும் காரணிகளை எதிர்கொள்ளும்போது அதீத பயமம் உண்டாகும்.இயல்பாக வாழ்வதற்கு முடியாமல், இதனால் மனக் கலக்கம் ஏற்படும்.கடுமையான மனக்கலக்கம், மூச்சிரைத்தல், அதீத இதயத்துடிப்பு போன்ற உடல் மற்றும் உளவியல் எதிர்விளைவுகள் ஏற்படும்.
நோய் கண்டறிதல் (Diagnosis)
அச்சக் கோளாறைக் கண்டறிய ஆய்வகப் பரிசோதனைகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அச்சக் கோளாறைக் கண்டறிவதற்கு என்று வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன, அவற்றைப் பின்பற்றி, பாதிப்புள்ள நபரிடம் விரிவாகப் பேசி, அதன் அடிப்படையிலேயே அச்சக் கோளாறு அவருக்கு உள்ளதா எனக் கண்டறியப்படுகிறது. கடந்த காலத்தில் உங்கள் உடல்நிலை, சமூக நிலை, உளவியல் நிலை பற்றி உங்கள் மருத்துவர் கேட்டு அவற்றை ஆய்வு செய்யலாம்.
சிகிச்சை (Treatment)
அச்சக் கோளாறுக்கான சிகிச்சைகளின் நோக்கம், ஒருவருக்குள்ள பயத்தையும் பதற்றத்தையும் குறைத்து, அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருள்கள் அல்லது சூழ்நிலைகள் குறித்த அவர்களின் எதிர்வினைகளைக் கட்டுப்படுத்தி சிறப்பாகச் சமாளிக்க உதவுவதே ஆகும்.
மருந்துகள்: குறிப்பிட்ட சூழ்நிலைகள் அல்லது பொருள்களால் ஏற்படும் அச்சம் மற்றும் பதர்ரத்தைச் சமாளிக்க, பீட்டா பிளாக்கர்கள், மயக்கம் ஏற்படுத்தும் மருந்துகள், மன அழுத்தத்தைத் தணிக்கும் மருந்துகள் போன்றவற்றை மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உளவியல் சிகிச்சை: புலன் சார்ந்த நடத்திக்கான சிகிச்சை அல்லது பயப்படும் பொருள் அல்லது சூழலை அடிக்கடி எதிர்கொள்ளச் செய்து பழக்கும் சிகிச்சை போன்றவை இதிலடங்கும்.
தடுத்தல் (Prevention)
சின்னச் சின்ன விஷயங்கள் அல்லது பொருள்களுக்கெல்லாம் நீங்கள் பயப்பட்டால், குறிப்பாக உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று சரி செய்துகொள்ளவும். இது போன்ற பயங்களை நீங்கள் வென்றால், அவை உங்கள் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம். இதுபோன்று அடிக்கடி பயப்படுவதும், மரபியல் காரணிகளும் ஒருவருக்கு அச்சக் கோளாறை ஏற்படுத்துவதில் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது.
சிக்கல்கள் (Complications)
இது போல ஒருவர் பயப்படுவது மற்றவர்களுக்கு சின்ன விஷயமாகத் தோன்றலாம், ஆனால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதனால் மன அழுத்தமும் கவலையும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட அச்சக் கோளாறுகள் மன அழுத்தம், தற்கொலை, போதைப் பழக்கம் போன்ற மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next steps)
இதுபோன்ற அச்சங்கள் உங்கள் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்காதவரை, அது குறித்துக் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவேளை, குறிப்பிட்ட அச்சக் கோளாறால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், அதனை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகி, உங்கள் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் தகுந்த ஆதரவுடன், அதனை சரியாக எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
எச்சரிக்கை (Red Flags)
இந்த அச்சங்கள் உங்கள் சமூக ரீதியான வாழ்க்கையை, தினசரி செயல்களை, வேலையைப் பாதித்தால் கூடிய விரைவில் உங்கள் உளவியல் நிபுணர் அல்லது மருத்துவர் உதவியை நாடவும்