மெனோபாஸ்’ அடையும் பெண்களுக்கும், இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம்
17 Feb,2018
பதினொன்று அல்லது அதற்கு முன்பே வயதிற்கு வரும் பெண் குழந்தைகளுக்கும், 47 வயதிற்கு முன், ‘மெனோபாஸ்’ அடையும் பெண்களுக்கும், இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இது தவிர, கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, கர்ப்பப்பை நீக்கம், குழந்தை பருவத்தில் கர்ப்பம், கர்ப்பத்தடை மாத்திரைகள், ரத்த சோகை போன்ற காரணங்களும், இதய நோய் ஏற்பட காரணங்களாக உள்ளன.
இதயக் கோளாறு உள்ள பெண்களில், மூன்றில் ஒருவர் இறக்கிறார். காரணம், இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகள் பெண்களுக்கு வேறு மாதிரி தெரிகின்றன; இதனால், தாமதமாகவே சிகிச்சைக்கு வருகின்றனர்.
ஆண்களுக்கு வருவதைப் போல, மார்பின் இடது பக்கத்தில் வலி வராமல் தோள், முதுகு, கழுத்தில் ஏற்படும். பொதுவான அறிகுறி என்பது மூச்சு விடுவதில் சிரமம். ஆனால், இதயக் கோளாறு பெண்களுக்கு வராது என்ற நம்பிக்கை இருப்பதால், வேறு ஏதாவது கோளாறாக இருக்கும் என, அலட்சியம் செய்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றங்களும், பெண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
டாக்டர் கே.கே.அகர்வால், தலைவர்,
ஹார்ட் கேர் பவுண்டேஷன் ஆப் இந்தியா,
புதுடில்லி.
drkknpima2017@gmail.com