வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது.
ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர்.
அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற பெண்ணை தனது நான்காம் மனைவியாக 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தாங்கள் வாரத்திற்கு இரு முறை பாலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார்.
''இதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்'' என்கிறார் அவர்.
தானும், தனது மனைவியும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து, தங்களை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும், இதுவே ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்புடன் இருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.
''நான் நேரடியாக செல்கிறேன். இளம் பெண்ணான உங்களுக்கு, பெரிய தொப்பையுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் உங்களது கணவரை பார்த்தால் என்ன தோன்றும்? அவர் மீது ஈர்ப்பு வருமா?'' என்கிறார் அவர்.
80 வயதை கடந்தவர்களில், 6-ல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருந்ததாக உணர்ந்தாக தெரிவித்துள்ளனர்.
போதிய வாய்ப்புகள் கிடைக்காததாலே, தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6-ல் ஒருவர் கூறுகிறார்.
''பலர் நினைப்பதை விட, அதிக வயது முதியவர்கள் பாலுறவுவில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர்'' என சுதந்திர வயது தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லூசி ஹார்மேர் கூறுகிறார்.
முதுமை காதல் நிறைந்த உறவுகளை வைத்துக்கொள்ளச் சுதந்திர வயது தொண்டு நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
• நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களது துணையிடம் பேசுங்கள். விஷயங்களை அவர்களது பார்வையில் இருந்து பார்க்க முயலுங்கள்.
• பாலுறவில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன தேவை? என்பதை இருவரும் பேசுங்கள்.
• உடலை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள்