டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.
நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன.
ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்ப ரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது. தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது .என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும். அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.
மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, துப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.
எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது