பொதுவாக உடல் எடையைக் குறைக்கவும், சரியாக பராமரிக்கவும் டயட்டை மேற்கொள்வார்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைப் பின்பற்றுவார்கள். இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது, உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். அதே சமயம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
ஆனால் உடல் எடையை குறைக்க மிகவும் எளிமையான வழி ஒன்று உள்ளது. அது தான் ஐஸ் தண்ணீர் குளியல். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், ஐஸ் தண்ணீரில் குளியலை மேற்கொள்ளும் போது, அது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உங்களுக்கு ஐஸ் தண்ணீரில் குளிப்பது எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
நன்மை #1
ஐஸ் தண்ணீர் குளியல் மேற்கொள்ளும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.
நன்மை #2
ஐஸ் தண்ணீரில் குளிக்கும் போது, அதில் உள்ள குளிர் வெப்பநிலை உடலின் வெப்பநிலையை அதிகரித்து, கலோரிகளை அதிகளவில் கரைக்கச் செய்யும். அதிலும் நீரில் எவ்வளவு குறைவான அளவில் வெப்பநிலை உள்ளதோ, உடலின் வெப்பம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்படும்.
நன்மை #3
ஐஸ் தண்ணீர் குளியல் எடுக்கும் போது, அது உடலில் லிப்டின் அளவைக் குறைக்கும். லிப்டின் அளவு குறைவதால் என்ன நடக்கும்? உடலில் லிப்டின் அளவு குறையும் போது, அது கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, நீண்ட கால சீரழிவு நோயின் ஆபத்தைத் தடுக்கும்.
நன்மை #4
பலருக்கு ஐஸ் தண்ணீர் குளியல் உடல் எடையைக் குறைப்பதில் நல்ல தீர்வைத் தருமா இல்லையா என்ற கேள்வி எழும். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஐஸ் நீரில் குளியலை மேற்கொள்ளும் போது, அது கொழுப்பு செல்களைக் கரைக்கும் ஐரிஸின் என்னும் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.
நன்மை #5
ஐஸ் நீரில் குளிக்கும் போது உடலில் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். அதுவும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அனைத்து உறுப்புகளுக்கும் அதிக சத்துக்களும் ஆக்ஸிஜனும் கிடைக்கச் செய்யும்.
நன்மை #6
ஐஸ் நீர் குளியல் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் ஐஸ் நீர் குளியலானது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இரத்த நாளங்களின் பணியையும் அதிகரிக்கிறது. ஆகவே உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஐஸ் நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.
நன்மை #7
உங்களது ஒவ்வொரு நாளும் மோசமான மனநிலையில் செல்கிறதா? அப்படியென்றால் ஐஸ் நீர் குளியலை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இந்த குளியல் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். மனநிலை சிறப்பாக இருந்தால், உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை
ஐஸ் நீர் குளியலை ஒருவர் அதிகமாக எடுத்தால், அது ஹைப்போதெர்மியாவை உண்டாக்கும். அதாவது உடலின் வெப்பநிலை மிகவும் தாழ் நிலைக்கு சென்றுவிடும். ஒருவரது உடல் வெப்பநிலை தாழ் நிலைக்கு சென்றால், தசைகள் பலவீனமாவதுடன், இதயத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும். ஆகவே ஐஸ் நீர் குளியலை மேற்கொள்ளும் முன் உடல் வெப்பநிலை சரியான அளவில் உள்ளதா என சோதித்துக் கொள்ளுங்கள்.
ஐஸ் நீர் குளியல் மேற்கொள்வது எப்படி?
ஒரு அகன்ற பாத் டப்பில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, அத்துடன் போதுமான அளவு நீரை ஊற்றி ஐஸ் கட்டிகள் கரையும் வரை காத்திருந்து, பின் அந்த நீரில் குளியலை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பு ஐஸ் தண்ணீர்
குளியல் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த குளியலை வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்ளுங்கள். இப்படி செய்வதால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும். ஆகவே இந்த குளியலை வாரந்தோறும் மேற்கொண்டு எடையை குறையுங்கள்