உடலில் உள்ள நோய்களை கண்டறிவதற்கு மருத்துவ பரிசோதனைகள் பல உண்டு. அவற்றில்
ஒன்றுதான் இந்த எண்டோஸ்கோபி. இந்த எண்டோஸ்கோபி என்பது தொண்டை குழி, உணவுக்குழாய், வயிறு, டியோடினம் எனப்படும் சிறுகுடலின் முன்பகுதியை உள்நோக்கும் பரிசோ தனையாகும். இது லென்சின் மூலம் ஒளியினை பயன்படுத்தி எடுக்கப்படும் படத்தை வீடியோ மானிட்டர் மூலம் பார்த்து சிகிச்சை அளிக்க உதவும் கருவியாகும்.
இதன் மூலம் வயிற்றுக்குள்ளிருக்கும் புண், சதை வளர்ச்சி, கட்டிகள், ரத்த கசிவு, குமட்டல், போன்ற பிரச்னைகளின் காரணத்தை கண்டறிய முடியும். குடல் மற்றும் இரைப்பை குழாயில் ஏற்படும் ரத்த கசிவை கண்டறி யவும் இப்பரிசோதனை பயன்படுகிறது. இந்த பரிசோதனையின் மூலம் வயிற்றினுள் இருக்கும் பிரச்னைகள் மருத்துவர் மற்றும் நோயாளிகள் வீடியோ மானிட்டர் மூலம் பார்க்க முடியும்.
சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது நோயாளிகளுக்கு குமட்டல் வர வாய்ப்புள்ளதா ?
அதற்காக தொண்டை பகுதியில் ஸ்பிரே அல்லது மருந்து அளி த்து மரத்துப்போக செய்வதின் மூலம் குமட்டல், வாந்தி வராமல் தடுக்கலாம்.
இக்கருவியின் அளவு பெரிதாக இருக்குமா?
இல்லை, நவீன கருவி தொண்டைக்குள் போகும் அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்கும்.
இக்கருவி பயன்படுத்தும்பொழுது தொண்டை மற்றும் குடல் பகுதியின் பக்க வாட்டில் பாதிப்பு ஏதேனும் ஏற்படாதா?
இக்குருவி மிகவும் சிறியதாக இருக்கும். சிறப்பு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த, திற மை மிக்க மருத்துவரால் இச்சிகிச்சை மேற்கொள்வதால் பாதிப்பு ஏதும் இருக்காது.
இக்கருவியால் வயிற்றினுள் எவ்வளவு ஆழத்திற்கு பார்த்து சிகிச்சை அளிக்க முடியும்?
பல்லில் இருந்து வயிற்றினுள் 100 செ.மீ ஆழம் வரை பார்க்க லாம்.
கொலோனோஸ்கோபி என்றால் என்ன?
கொலோனோஸ்கோபி என்பது ஆசனவாய் வழி யாக பெருங் குடல் மற்றும் மலக்கு டலில் உள்ளிருக்கும் பிரச்னை களை வீடியோ மானிட்டர் மூலமாக பார்த்து சிகிச்சையளிக்க பயன்படும் கருவியாகும்.
எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் ஏதேனும் உணவு உட்கொள்ளலாமா?
எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் இரவு வயிறை காலியாக வைத்து காலையில் வெறு வயிற்றுடன் வரவேண்டும்.
எண்டோஸ்கோபிமூலம் வேறு எதற்கு சிகிச்சையளிக்க முடியும் ?
சிறு குழந்தைகள் சில சமயங்களில் நாணயம், விளையாட்டுப் பொ ருட்கள் போன்ற வற்றை வாயில் வைத்து விளையாடும் பொழுது தொண்டையிலோ அல்லது குடல் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி சிக்கியுள்ள பொருளை எளிதாக எடுக்க பய ன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெரியவர்களும் சிலசமயங்களில் உணவு உ ட்கொள்ளும்போது தொண்டையிலோ அல்லது உணவுக்குழாயி ல் சிக்கிக்கொள்ள நேரிடும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோ பி மூலமாக எளிதாக சிகிச்சை அளிக்கலாம். இது தவிர உணவு க்குழாயில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை சுருங்க வைப்பதற்கும் ரத்த குழாயில் ஏற்படும் ரத்த கசிவை அடைப்ப தற்கும் இச்சிகிச்சைமுறை பயன்படுகிறது. வயிற்றுக்குள்ளிரு க்கும் மருகு போன்ற கட்டிகளை அப்புறப்படுத்தவும் பயன்படுகிறது.