பொதுவாக மருத்துவர்களிடம் ஒரு நோயாளி எந்த ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்றாலும்,
முதலில் சில பொதுவான ரத்தப்பரிசோதனைகளை அவ ர்கள் பரிந்துரை செய்வார்கள். இதற்கு ‘ரத்த அணுக்கள் பரிசோதனை’(Complete Blood Count – CBC) என்று பெயர். ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என சொல்வதுபோல், இது மிக எளிய பரிசோதனைதான் என்றாலும், இதன்மு டிவை அலட்சியப்படுத்த முடியாது. பல நேரம் உடலில் மறைந்திருக்கும் சில நோய்களின் ஆரம்பக் கட்டத்தை இது தெரிவிப்பது உண்டு.
ரத்தத்தில் சிவப்பணுக்கள் (Red Blood Cells), வெள்ளைய ணுக்கள் (White Blood Cells), தட்டணுக்கள் (Platelets) என மூன்று வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, கன அளவு, வடிவம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து நோயைக் கணிக்கும் முறை இது. சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பரிசோதனையானது ‘நோய்’ எனும் திருடனை நேரடியாகக் காண்பிக்காது; திருடன் இப்பாதை யில் இருக்கிறான் என்று கைகாட்டும். அதை வைத்து அடு த்த கட்டப்பரிசோதனைகளை மேற்கொண்டு நோயை சரியாகக் கணித்து விடலாம்.
இதை எவரும் எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். ரத்தம் உறை வதைத் தடுக்கும் ‘இ.டீ.டி.ஏ.’ (EDTA) எனும் வேதிப்பொருள் கலந்த திரவக் குப்பியில் 3 மி.லி. சிரை ரத்தம் எடுத்துப் பரிசோதிப்பது, இதன் நடைமுறை. முன்பு இது மனிதக் கரங்களால் செய்யப்பட்டது. இப்போ து ‘ஹீமோகிராம் அனலைசர்’ (Haemogram Analyzer) கருவியில் செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் உடனே தெரிந்துவிடும்.
பயன் என்ன?
உடலில் நோய்த்தொற்று, ஊட்டச் சத்துக்குறைவு, புற்றுநோய், ரத்த க்கசிவு மற்றும் ரத்த உறைவு நிலைமை, ஒவ்வாமை, தடுப்பாற்றல் நிலைமை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை அறியலாம்.
பரிசோதனைகள்
# வெள்ளையணுக்களின் மொத்த அளவு (Tota#Count TC): சாதாரணமாக ஒரு கன மில்லிமீட்டர் ரத்தத்தில் 4,000 to 11,000 வெள்ளையணு க்கள்(Leucocytes) இருக்கும். உடலில் பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி என எந்த ஒரு நோ ய்த்தொற்று இருந்தாலும், இந்த அளவு அதிகரிக்கும். இது மிக மிக அதிகமாக இரு ந்தால், ரத்தப்புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. கர்ப்பி ணி களுக்கும் குழந்தைகளுக்கு 12 வயது வரையிலும் சாதாரணமாகவே இது அதிகமாக இருக்கும். எனவே, பயப்பட வேண்டாம். டைபாய்டு காய்ச்சலின்போதும் சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் இந்தஅளவு குறையும்.
# வெள்ளையணுக்களின் தனித்த அளவுகள் (Differentia#Count DC): வெள்ளையணு க்களில் ஐந்து வகை உண்டு. ஒவ்வொன்றும் எந்த அளவில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு பல நோய்களைத் தோராயமாகக் கணிக்கலாம்.
1. நியூட்ரோபில்ஸ் (Neutrophils):
இதன் இயல்பு அளவு 50% 70%. நோய் தொற்று, குடல்வால் நோய் போன்ற அழற்சிக ள், ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்தக்கோளாறுகள், மூட்டுநோய்கள் போன்ற நிலைமைக ளில் இந்த அளவு அதிகரிக்கும். வைட்டமின் பி12 குறைவு, மிலியரி காசநோய், ரத்தசோகை மற்றும் சில மருந்துக ளின் பக்கவிளைவால் இது குறையும்.
2. லிம்போசைட்ஸ் (Lymphocytes):
இவை நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமான அணுக்கள்; 20% to 40% இருக்கலாம். குழந்தைகளுக்குப் பொதுவாகவே 50% இரு க்கும். அம்மை நோய்கள், காசநோய் போன்ற நாட்பட்ட நோய்க ள், ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக, இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். எய்ட்ஸ், புரதச்சத்துக் குறைவு, தடுப்பாற்றல் நோய், புற்றுநோய் மருந்துகள் காரணமாக இது குறையும்.
3. மோனோசைட்ஸ் (Monocytes):
உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை விழுங்கி அழிக்கும் அணு க்கள் இவை. 2% முதல் 4% வரை இருக்கும். காசநோய், டைபாய்டு, மலேரியா, இதய உறை அழற்சி நோய், மூட்டுவாத நோய் போ ன்றவற்றின்போது அதிகரிக்கும். இது குறைகிறது என்றால், எலும்பு மஜ்ஜையில் பிரச்சினை என்று அர்த்தம்.
4. ஈஸ்னோபில்ஸ் (Eosinophils):
இதன் இயல்பு அளவு 1% to 4%. ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை நோய்கள், குடல் புழுத்தொல்லை, சில வகைப் புற்றுநோய்கள் இதன் அளவை அதிகரிக்கும். ஈஸ்னோபிலியா நோய் உள்ளவர்களுக்கு இதன் மொத்த அளவை (Absolute Eosinophi#Count) பரிசோதிப்பது உண்டு. இது அதிகபட்சமாக 350 வரை இருக்கலாம்.
5. பேசோபில்ஸ் (Basophils):
இதன் இயல்பு அளவு 0.3% மட்டுமே. நாட்பட்ட நோய்கள், ரத்தப் புற்றுநோய், உணவு ஒவ்வாமை, கதிரியக்கச் சிகிச்சை போன்ற நிலைமைகளில் இது அதிகரிக்கும். தைராய்டு பிரச்சினை, மன அழுத்தம் காரணமாக இதன் அளவு குறையும்.
# ரத்தச் சிவப்பணுக்களின் அளவு:
இது, ஒரு கன மில்லிமீட்டர் ரத்தத்தில் ஆண்களுக்கு 50 லட்சமாகவும் பெண்களு க்கு 45 லட்சமாகவும் இருக்கும். நாட்பட்ட நுரையீரல் நோய், பிறவி இதயநோய், உலோக விஷங்கள் காரணமாக இது அதிகரிக்கும். ரத்தசோகை, ரத்தக்கசிவு, சிவப்பணு அதீதச் சிதைவு மற்றும் எலும்பு மஜ்ஜை பிரச்சினை காரணமாக இதன் அளவு குறையும்.
# ஹீமோகுளோபின் அளவு:
ஆரோக்கியமாக வாழும் நடுத்தர வயது ஆண்களுக்கு 4 to 16 கிராம்/டெசி லிட்டர்லு-ம், பெண்களுக்கு 13 to 15 கிராம்/டெசி.லி. -லும் இது இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் 12 கிராமுக்கு அதிகமா கவும் வளரிளம் பருவத்தினருக்கு 13 கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இது ஆண்களுக்கு 13.5 கிராமுக்கு க் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இதற்குச் சிகிச்சை பெறுபவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் மறுபடியும் இப்பரிசோத னையைச் செய்துகொள்ள வேண்டும்.
# ஹீமொட்டோகிரிட் அளவு (Haematocrit அல்லது PCV):
ரத்தச் சிவப்பணுக்களின் கனஅளவைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. இதன் இயல்பு அளவு 36-38%. இது அதிகமென்றால், உடலில் நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குறைவென்றால், ரத்தசோகை என்று அர்த்தம். டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்குப் பெரி தும் உதவுகிற பரிசோதனை இது.
# மீன் கார்ப்பஸ்குலர் வால்யூம் அளவு (Mean Corpuscular Volume MCV):
ரத்தத்தில் சிவப்பணுக்களின் சராசரி கனஅளவைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. ரத்தசோகையின் வகை யைக் கண்டறிய உதவுகிறது. இது 80 எஃப்.எல்லுக்கும் (Femto litre-FL) குறைவாக இருந்தால், இரும்புச்சத்து குறைவால் ஏற்படுகிற ‘மைக்ரோ சைட்டிக் அனீமியா’ மற்றும் தாலசீமியா. 80 முதல் 90 எஃப்.எல். வரை இருந்தால் ‘நார்மோசைட்டிக் அனீமியா’(Normocytic Anaemia). 90 எஃப்.எல்லுக்கும் அதிகமாக இருந்தால் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 குறைவால் வருகிற ‘மேக்ரோசைட்டிக் அனீமியா’ போன்றவை ஏற்படும்.
# மீன் கார்ப்பஸ்குலர் ஹீமோகுளோபின் கான்சன்ட்ரேஷ ன் அளவு (Mean Corpuscular Haemoglobin Concentration – MCHC) :
ஒரு மில்லி சிவப்பணுவில் உள்ள சராசரி ஹீமோகுளோ பினின் எடை இது. 33 to 35% இது இருக்க வேண்டும். இது அதிகமென்றால், பரம்பரை ரத்தக்கோளாறாக இருக்கலா ம். குறைவு என்றால், இரும்புச்சத்து குறைவால் உண்டா கிற ரத்தசோகை, தாலசீமியா நோய்களாக இருக்கலாம்.
# மீன் கார்ப்பஸ்குலர் ஹீமோகுளோபின் அளவு (Mean Corpuscular Haemoglobin – MCH):
ஒரு சிவப்பணுவில் உள்ள சராசரி ஹீமோகுளோபினின் எடை இது. இதன் இயல்பு அளவு 27 33 பைக்கோகிராம். இது அதிகமென்றால், ‘மேக்ரோசைட்டிக் அனீமியா’ (Macrocytic Anaemia). குறைவாக இருந்தால், ‘மைக்ரோ சைட்டிக் அனீமியா’ (Microcytic Anaemia).
# தட்டணுக்கள் அளவு (Platelets):
ரத்த உறைவுக்குத் தேவைப்படும் அணுக்கள் இவை. இவற்றின் அளவு 1.5 முதல் 4.5 லட்சம்/டெசி.லி. வரை இருக்கும். உடலில் வைரஸ் காய்ச்சல், மருந்து ஒவ்வா மை காரணமாகவும், கதிரியக்கச் சிகிச்சை மற்றும் ரத்தசோகையிலும் இது குறைவாக இருக்கும். திடீர் ரத்த இழப்பைத் தொடர்ந்து இது அதிகமாகும். ரத்தப் புற்றுநோயின்போதும் இது அதிகரிக்கும். டெங்கு கா ய்ச்சல் நோயாளிக்கு இது பெரிதும் உதவுகிறது. டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும். டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.
# ரத்த அணு அமைப்புப் பரிசோதனை (Periphera smear study):
ரத்த அணுக்களின் வடிவம், அளவு, எண்ணிக்கை ஆகி யவற்றைப் பரிசோதித்து ரத்தசோகை மற்றும் ரத்தப் புற்றுநோயின் வகைகளை அறியும் பரிசோதனை இது. மலேரியா, யானைக்கால் நோய்க் கிருமிகளையும் இதில் கண்டறியலாம்.
# சிவப்பணு படியும் அளவு (Erythrocyte Sedimentation Rate – ESR):
சோதனைக் குழலில் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சிவப்பணு படிகிறது என்பதை அறியும் பரிசோதனை இது. இது இருவிதங்களில் செய்யப்படுகிறது. அதற்கேற்ப இதன் இயல்பு அளவுகள் இருக்கும். இதயச் செயலிழப்பு, சிவப்ப ணுக்களின் உற்பத்தி அதிகம் ஆகிய நிலைகளில் இது குறையும். நாட்பட்ட நோய் தொற்றும் அழற்சியும் இருக்கும்போது இது அதிகரிக்கும். காசநோய் போன்ற சில நோய்கள் சிகிச்சைக்குக் கட்டுப்ப டுகிறதா என்பதை அறியவும் கீல்வாதக் காய்ச்சலைக் கணிக்கவும் இது உதவும்.
ரத்த வகை ஏன் அவசியம்?
நமக்கு A, B, AB, O என்று நான்கு முக்கிய ரத்த வகைகள் உண்டு.
Rh Positive, Rh Negative என்ற உட்பிரிவுகளும் உண்டு.
ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையைத் தெரிந்து கொள்ள வேண்ஏடியது அவசியம்.
ரத்த தானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.
ரத்தசோகை, ஹீமோபீலியா போன்ற நோய்கள், அசாதாரணப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளி ன்போதும், விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும். ஒருவருக்கு எந்த ரத்த வகை உள்ளதோ, அதே ரத்தம்தான் அவருக்கு சேரும். அதற்கு ரத்தம் தேவைப்படுபவர், தானம் செய்கிறவர் என இருவரின் ரத்தவகையும் தெரிந்திருக்கவேண்டும்.