பச்சை குத்துபவர்களுக்கு ஆபத்து! எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் எச்சரிக்கை
08 Nov,2017
இளைஞர்களிடையே மிகவும் பிரபல்யமான பச்சை குத்தும் கலையினால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாலியல் ரீதியான நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
உடம்பில் பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசி, ஒரு நபருக்குப் பாவித்த பின்னர் மீண்டும் பல நபர்களுக்கு பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படுவதனால் எயிட்ஸ் பரவும் ஆபத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்செயலாக எய்ட்ஸ் அல்லது ஹெபடய்ட்டீஸ் நோய் தொற்றியிருக்கும் நபர் ஒருவர் பச்சை குத்தும் பட்சத்தில் அவருக்கு பயன்படுத்திய ஊசியை வேறொரு நபருக்கு பயன்படுத்தும் போது இந்த நோய் பரவுவதாகவும் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
ஆகவே பச்சை குத்தும் தொழிலை மேற்கொள்பவரும் பச்சை குத்த முயற்சிப்பவர்களும் இதுகுறித்து அவதானமாகச் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.