விரதம் இருக்கும்போது என்ன நடக்கிறது?

27 Oct,2017
 

 
 

உண்ணாமல் விரதமிருப்பது என்பது உடலை வருத்திக் கொள்வதற்கல்லஸ உடலில் இருக்கும் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வளிப்பதற்காகவே. நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனம், விரத காலத்தில் நம் உடலில் நடக்கும் சின்னச்சின்ன மாற்றங்களை உணரும். அதேபோல உண்ணா நோன்புக் காலங்களில் நம் உடல், அளவுக்கு அதிகமான சத்துகளை உடலின் பல பகுதிகளிலும் சேமித்து வைத்திருக்கும். விரத காலங்களில் அப்படித் தன் லாக்கரில் வைத்திருக்கும் சத்துகளைத்  தனக்குத் தேவையான இயக்கும் சக்தியாக உடல் மாற்றிக்கொள்கிறது.
 
 
 
 
 
நம் ஊரில் ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப விரத முறைகள் மாறுபடுகின்றன. இதில் உண்ணா நோன்புடன், பேசாமலிருக்கும் மெளன விரதங்களும் அடக்கம்.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் விரத முறை, உங்கள் உடலுக்கு ஏற்றதுதானா என்கிற விழிப்பு உணர்வு வேண்டும். தவறான விரத முறைகளைக் கடைப்பிடிப்பதால், உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியமான விரத முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார்.
 
 
 
விரதம் ஏன்?
 
விரதம் இருப்பதால் நம் உடலின் உணவுத் தேவைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உதவுகிறது விரதம். நமது அன்லிமிட்டெட் உணவு ஆசைகளைக் கட்டுப்படுத்தப் போடப்பட்டிருக்கும் ஸ்பீட் பிரேக்கர்தான் விரதம். அதிக உணவுகளை ஜீரணிக்கும் உறுப்புகளும் விரத காலத்தில் ஓய்வெடுத்துக்கொள்கின்றன.
 
ஆயுர்வேதத்தில் விரதம்
 
விரதம் என்பது நம்  ஜீரண சக்தியின்தன்மையைத் தூண்டவே கடைப்பிடிக்கப்படுகிறது என்கிறது ஆயுர்வேதம். மேலும், நம் உடலில் அதிகளவில் தேங்கி நிற்கும் நச்சுகளை வெளியேற்றவும் உதவும். ஆனால், அளவுக்கு அதிகமான விரதம் ஆபத்தில் முடியும். உடலில் உள்ள சத்துகளைக் குறைத்து, வலிமை இழக்கச் செய்யும்.
 
விரதத்தின் பலன்கள்
 
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் இருந்து கிடைக்கும் அளவுக்கு அதிகமான உப்பின் காரணமாக, உடலில் நீர்ச்சத்து தேங்கிவிடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உப்பில்லா உணவைச் சாப்பிடும் விரத காலத்தில், உடலில் இந்த நோய்களின் தாக்கம் குறைகின்றது. தேவையற்ற நீர்ச்சத்து வெளியேற்றப்படுகிறது.
 
யார் விரதம் இருக்கலாம், தவிர்க்கலாம்?
 
சர்க்கரை நோய், இதய நோய், வேறு பல உபாதைகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே விரதம் இருக்கலாம். உணவைத் தவிர்த்துவிட்டு விரதம் இருப்பதால், உடல் நலக் குறைபாடுகள் வராது என்பதை மருத்துவரிடம் உறுதிசெய்துகொண்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் விரதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
விதவிதமான விரதங்கள்
 
விரத காலத்தில் சிலர் தண்ணீர்கூட அருந்த மாட்டார்கள். சிலர் தண்ணீர் மட்டும் அருந்துவார்கள், வேறு நீராகாரம் மற்றும் உணவுகளைத் தொட மாட்டார்கள். சிலர் விரத வேளையில் பழச்சாறு, பால் போன்ற நீராகாரம் அருந்துவார்கள். சிலர் சமைக்கப்படாத உணவு வகைகளான பழங்கள், கொட்டை வகைகளைச் சேர்த்துக்கொள்வார்கள். சிலர் உப்பில்லாத உணவுகளை உண்பார்கள்.
 
ரம்ஜான் நோன்பு
 
சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை ஒரு மாதத்துக்கு ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். நோன்புக் காலத்தில் அவர்கள் தண்ணீர்கூட அருந்துவதில்லை. நோன்பை முடிக்கும்போது கஞ்சி மற்றும் உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும் உணவு வகைகளை உட்கொள்வார்கள். எனவே, இந்த நோன்பு ஒரு மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டாலும் பிரச்னை எதுவும் இல்லை. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயுற்றவர்கள் இந்த நோன்பைத் தவிர்ப்பது நல்லது.
 
விரதம் இருக்கும்போது என்ன நடக்கிறது?
 
விரதம் இருக்கும்போது உடலில் உள்ள நீர்ச்சத்தை உடல் எடுத்துக்கொள்கிறது. பசியின் காரணமாக வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். உடலுக்குத் தேவையான உணவு அளிக்கப்படாதபோது தசைகள் மற்றும் உடல் உறுப்புகளையும் பாதிக்கும். வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களால் அல்சர் போன்ற நோய்கள் உண்டாகும். இதனால் வயிற்றுவலி வரும். மேலும் சோர்வு அதிகரித்து மயக்க நிலைக்குத் தள்ளும். கடுமையான விரதம் மோசமான விளைவுகளை உடலில் ஏற்படுத்தும்.
 
முதல்முறையாக விரதம் தொடங்குபவர்கள் கவனிக்கஸ
 
முதல்முதலில் விரதம் தொடங்குபவர்கள், உடனே ஒருநாள் முழுக்க விரதம் இருக்கக் கூடாது. முதலில் ஒருவேளை உணவை மட்டும் தவிர்த்துவிட்டு விரதம் தொடங்க வேண்டும். பின்னர், அதை இரண்டு வேளை, முழுநாள் என்று படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
 
நீண்டகால விரதம் இருப்பது சரியா?
 
நாம் உணவைப் பூரணமாகத் தவிர்த்துவிட்டு விரதம் மேற்கொள்ளும்போது, முதலில் நம் உடலில் உள்ள கொழுப்புச்சத்துகளை உடல் உபயோகித்துவிடுகிறது. மேலும், விரதத்தைத் தொடரும்போது நம் தசைகளையும் உடல் உறுப்புகளையும் மெள்ள மெள்ளக் கரைத்து அவற்றை நாம் உயிர்வாழத் தேவையான எனர்ஜியாக மாற்றும். அதனால் நீண்டகால விரதம் இருப்பது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, கடுமையான விரதமுறைகளைத் தவிர்ப்பதே நல்லது.
 
விரதத்தைக் கைவிட வேண்டிய அறிகுறிகள்
 
ஒருவர் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பதால், உடலில் பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல் சத்துக் குறைபாடுகள் ஏற்படும். இதனால் முடிகொட்டுவது, தோல் நோய்கள், வயிற்றுப்புண், மயக்கம் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், கண்டிப்பாக விரதத்தைக் கைவிட்டுவிட்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைத் தொடங்க வேண்டும்.
 
தண்ணீர் அவசியம்!
 
விரத காலத்தில் நம் உடலுக்குத் தண்ணீர் மிகமிக அவசியம். தண்ணீர்கூடப் பருகாமல் விரதம் மேற்கொள்ளும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் மந்தமாகிவிடும். இதனால் குறைந்த ரத்த அழுத்தம், காய்ச்சல், இதயத்துடிப்பு அதிகமாதல், மயக்கம் ஆகியவை ஏற்படலாம். இதனால் விரத நாள்களில் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.
 
விரதத்தை எளிதாக்கஸ
 
விரத காலத்தில் காலையில் எழுந்தவுடன் இளநீர் அல்லது பால் அருந்தலாம். காலைச் சிற்றுண்டி நேரத்தில் பழங்களையும் நட்ஸ் வகைகளையும் உட்கொள்ளலாம். இடையில் சிறிதளவு பால், மோர் அல்லது பழச்சாறு அருந்தலாம். மதிய வேளையில் காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமா சாப்பிடலாம். மாலையில் விரதத்தை முடிக்கும்போது சாதத்துடன் ஒரு வகை சுண்டல் சேர்த்து உட்கொள்ளலாம். இரவு படுப்பதற்கு முன்னர் பால் அருந்தலாம்.
 
விரதத்துக்கு முன் மருத்துவ ஆலோசனை அவசியம்
 
உடலில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பிற நோய்கள் இருப்பவர்கள் கண்டிப்பாக விரதத்தைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி விரதம் இருக்க விரும்பினால், இவர்கள் தங்களுக்கான விரத கால உணவு முறைகள் மற்றும் அதற்கான ஆலோசனையை மருத்துவரிடம் கேட்டு, அதன்படி விரதம் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து உணவு ஆலோசகரிடமும் கலந்தாலோசிக்கலாம்.
 
விரத காலத்தில் எவற்றையெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்?
 
தினை, சாமை போன்ற சிறு தானியங்களில் உப்புமா, கிச்சடி செய்யலாம். இனிப்புக்குச் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் மற்றும் தேனைப் பயன்படுத்தலாம். சீரகம், ஏலக்காய், மிளகு, தனியா போன்றவற்றைச் சமையலில் உபயோகிக்கும்போது அவை ஜீரண சக்தியைத் தூண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகள் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர் குடிக்கலாம். சுண்டல் வகைகள் புரதச்சத்து தரும். நட்ஸ் வகைகளில் எனர்ஜி கிடைக்கும். சமையலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சிறிதளவு நெய் ஆகியவற்றைத் தாளிக்கப் பயன்படுத்தலாம்.
 
விரதத்தின்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
 
விரதத்தின்போது டீ, காபி குடிக்க வேண்டாம். எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், சர்க்கரை, இனிப்பு வகைகள், அதிக உப்பு நிறைந்த பொருள்கள், பிஸ்கட், பிரெட், கேக், ரஸ்க், பன், பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகள், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் போன்றவற்றையும் விரத காலத்தில் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள், நூடுல்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ் போன்ற பாக்கெட் உணவுகள், ரெடிமேட் உணவுகள் ஆகியவற்றை விரத காலத்திலும் விரதம் முடித்த பின்னரும் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.
 
விரதம் முடித்தபிறகு எப்படிச் சாப்பிடலாம்?
 
விரதத்தைப் பால் மற்றும் ஜூஸ் குடித்து முடிக்கலாம். விரத காலம் முடிந்த ஒருமணி நேரத்தில் முழுமையான சத்துகளை அளிக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். நம் விரதங்கள் ஒவ்வொன்றுமே ஏதாவது வழிபாட்டு முறையோடு ஒன்றியே பின்பற்றப்படுகின்றன. விரதம் முடிந்த பின் படையல் வைப்பது நம் வழக்கம். அந்தப் படையல் உணவில் காய்கறிப் பொரியல் வகைகள், கூட்டு, கீரை, வடை, பாயசம், சாம்பார், புளிக்குழம்பு என அதிகச் சத்துள்ள உணவு வகைகளே இருக்கும். இந்தப் படையல் உணவைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைத்துவிடும்.
 
விரதம் முடித்த உடன் அசைவம் சாப்பிடலாமா?
 
சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் விரதம் முடித்த உடன் சாப்பிடக் கூடாது. விரதம் முடித்ததும் எளிதில் ஜீரணம் ஆகும் பழச்சாறு, இளநீர் போன்றவை எடுத்துக்கொள்ளலாம். ஒரு முழுநாள் விரதத்தின் பின் இஸ்லாமிய இனத்தவர் கஞ்சி குடிக்கின்றனர். இந்த எளிய உணவு எடுத்து அரைமணி நேரத்துக்குப் பின்னர் சைவம், அசைவம் என்று எந்த உணவும் சாப்பிடலாம்.
 
விரத கால உடற்பயிற்சி
 
விரத காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். முடிந்தால் சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சுப் பயிற்சி, மிதமான யோகா பயிற்சிகளில் ஈடுபடலாம். இதனால் உடலுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை. உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தப் பயிற்சிகளைப் பின்பற்றலாம்.
 
கடுமையான விரதம் தரும் விளைவுகள்!
 
பெண்கள் சரிவிகித, சத்துணவு உட்கொள்வதில் போதுமான விழிப்புஉணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். கடுமையான விரதம் இருப்பது, விரத காலத்தில் முழுப்பட்டினி கிடப்பது, அடிக்கடி விரதம் இருப்பது போன்றவை அவர்களின் உடலுக்குச் சத்துக் குறைபாட்டைக் கொடுத்துச் சோர்வடையச் செய்யும். உடல் சோர்வின் காரணமாக வாழ்க்கை முறையும் சிக்கலாக மாறும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பின்னர் சின்னச் சின்னப் பிரச்னைகள்கூடப் பெரிதாகத் தெரிய ஆரம்பிக்கும்.
 
ஆரோக்கிய விரதம்!
 
முழுப்பட்டினி கிடப்பதால் விரதம் எதிர்மறை விளைவுகளை உடலில் ஏற்படுத்தும். அதற்குப் பதிலாகப் பழங்கள், பயறு வகைகள், நீராகாரங்களை உட்கொள்ளும்போது சருமத்துக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். விரத காலத்தில் அதிகத் தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். இதனால் முகம் பொலிவடையும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஜீரணக் கோளாறுகள் மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
 
பரபரப்பு குறைப்போம்!
 
இன்றைய வாழ்க்கைமுறை நம்மை எப்போதும் பதற்றமாகவே வைத்திருக்கிறது. இதனால் தொடர் டென்ஷன் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மனதை அழுத்துகின்றன. இடைவிடாத செல்போன் பேச்சு எனப் பரபரப்போடு இருந்தபடி, உணவையும் தவிர்ப்பது கோபம், எரிச்சல், மன அழுத்தம் ஆகியவற்றை உருவாக்கும். நம்மை உள்நோக்கி உணர்வதும் விரதத்தின் இன்னொரு நோக்கம். எனவே, இந்தக் காலத்தில் வழக்கமான பரபரப்பைவிட்டு விலகியிருக்கலாம். விரதத்தின்போது ஒருநாள் செல்போன், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் இருந்து விலகியிருக்கலாம். அப்போதுதான் விரதத்தின் முழுப்பயனையும் உணர முடியும்.
 
ஓய்வும் அவசியமே!
 
விரத காலத்தில் தேவையின்றி நீண்ட நேரம் விழித்திருப்பதைத் தவிர்க்கவும். எட்டுமணி நேரத் தூக்கம் கண்டிப்பாக அவசியம். போதிய அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதுடன் சிறிதுநேர உடற்பயிற்சியும் செய்தால், எண்டார்பின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். இதனால் மனம் நல்ல நிலையில் இருக்கும். இது விரத காலத்தில் ஓர் அமைதியான, தெளிவான மனநிலையை நமக்குக் கிடைக்கச் செய்யும்.
 
ஒழுங்கற்ற விரதம்!
 
உடல் எடைக் குறைப்புக்காகத் தினமும் காலை வேளை அல்லது இரவு வேளைகளில் உணவைச் சிலர் தவிர்க்கிறார்கள். இப்படி ஒருவேளை உணவைத் தவிர்க்கும்போது, அடுத்த வேளையில் அதிக அளவு உட்கொள்ள வேண்டியிருக்கும். இதுதான் உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிறது. தினமும் இப்படி உணவைத் தவிர்த்துவந்தால், வயிற்றுப் புண், சத்துக் குறைபாடு போன்ற கூடுதல் பிரச்னைகள் ஏற்படும்.
 
காலை உணவைத் தவிர்ப்பது சரியா?
 
தினமும் ஒருவேளை விரதத்தில் பெரும்பாலும் பெண்கள் காலை  உணவைத்  தவிர்த்துவிடுகிறார்கள். இது உணவு செரிமானத்துக்கு உதவும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். காலை உணவைத் தினமும் தவிர்த்தால், உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸைக் கிரகிக்க உதவும் கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரைக் குறைபாடு  ஏற்பட 20 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
எந்த வேளை உணவைத் தவிர்ப்பது நல்லது?
 
வாரத்தில் ஒருநாள் விரதமிருக்கும்போது காலை வேளையில் பால், பழங்கள், மோர், இளநீர் என நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தினமும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. ஒருவேளை விரதத்தின்போது காலை விரதத்தை மதியம் முடிப்பார்கள். இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இரவில் விரதம் இருக்கக் கூடாது.
 
விரதத்துக்குத் தயாராவது எப்படி?
 
வாரத்தில் ஒருநாள் விரதம் இருப்பவர்கள் மற்ற ஆறு நாள்களும் வயிறு முட்டச் சாப்பிடுவது வழக்கம். திடீரென ஒரு முழுநாள் விரதத்தைக் கடைப்பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே உணவு முறையை எளிதாக்கிக்கொள்ள வேண்டும். காரம், மசாலா, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கப் பழக வேண்டும். உணவின் அளவையும் மிதமாகக் குறைத்துக்கொள்ளலாம். பருப்பு சாதம், இட்லி, புட்டு என எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உட்கொள்ளலாம். ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களும் சாப்பிடலாம். இதுதான் விரதத்துக்குத் தயாராகும் முறை. விரதத்துக்கு முதல் நாள் வெறும் நீராகாரங்கள், பழச்சாறு அருந்தலாம். விரத நாளில் காலை மற்றும் இரவில் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மதியம் காரமற்ற மிதமான உணவை உட்கொள்ளலாம். தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இப்படி உங்களது விரத முறையை மாற்றிக்கொள்ளலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் எனர்ஜி இழக்காமல் இருக்க இந்த விரத முறை உதவும்.
 
விரதத்தை முடித்ததும் பழச்சாறு அருந்துவது ஏன்?
 
உண்ணாவிரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும்போது பழச்சாறு அருந்துவதைப் பல மேடைகளில் நாம் வழக்கமாகப் பார்த்திருப்போம். சாப்பிடாமல் இருக்கும்போது உடல் சோர்வுற்றிருக்கும். அந்த நிலையில், பழச்சாறு உடனடியாக ரத்தத்தில் கலந்து உடலின் புத்துணர்வுக்குத் தேவையான சக்தியை அளிக்கும். பழச்சாறில் இருந்து கிடைக்கும் சத்துகள் உடனடியாகச் செரிமானம் ஆகும். இழந்த சக்தியை மீட்டதுபோன்ற உணர்வு ஏற்படும். இதன் பின்னர் ஒருமணி நேரம் கழித்து நாம் வழக்கமான உணவுகளை உட்கொள்ளலாம்.
 
நொறுக்குத்தீனிகள் வேண்டாம்
 
விரதம் இருக்கும் நாளில் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் முறுக்கு, இனிப்பு வகைகள், பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவார்கள். இது விரதம் இருப்பதற்கான பலனையே பாழாக்கிவிடும். உப்பு சேர்க்காத பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் எடுத்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறித்த மற்றும் வாயுத்தொல்லை தரும் உணவுகள் வயிற்றில் செரிமானப் பிரச்னையை உண்டாக்கும்.
 
இளமைக்கு உதவும் விரதம்
 
விரதம் இருக்கும்போது இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட செல்கள் சரிசெய்யப்படுகின்றன. ரத்தச் சுத்திகரிப்பு நடக்கிறது. நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. சரும அழகு, உடல் வடிவமைப்பு இரண்டும் சீராகின்றன. இயற்கையாகப் பசியெடுப்பதை விரதம் ஒழுங்கு செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. விரதத்தின்போது உடலில் ஹியூமன் குரோத் ஹார்மோன் தூண்டப்படுகிறது. இதனால் வயதான தோற்றம் நம்மை விரைவில் தாக்காது. விரத காலத்தில் மூளைப்பகுதியில் ஆரோக்கியமான நியூரான்கள் உருவாகுவது, நியூரான் மற்றும் செல்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளை அதிகரிக்கச் செய்கிறது. இவையே விரத காலத்தில் மனம் அமைதியடைவதற்கான காரணங்கள்.
 
மௌன விரதம்
 
தினமும் ஒருமணி நேரம், வாரத்தில் ஒரு முறை என மௌன விரதம் இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். பேசாமலிருப்பது மட்டும்தான் மௌன விரதமா என்ற கேள்வி எழலாம். உண்மையில், நாம் பேசாமலிருக்கும்போதும், மனம் பேசிக்கொண்டிருக்கும். பேச்சு எப்படி உருவாகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனதுக்குள்ளும் நாம் பேசாமலிருக்க வேண்டும். நம்மோடு நாம் உரையாடாமல் இருந்து, மனதில் தானாக ஏற்படும் சலனங்களைக் கவனிக்க வேண்டும். அதற்குக் கருத்துச் சொல்லாமல்,  எதிர்வினையாற்றாமல் இருப்பதே மௌன விரதம். இதன்மூலம் மனதிலும் ஓர் அமைதி மலர்வதை உணரலாம். இந்த முறையைப் பின்பற்றுவதால், எண்ணங்களில் கலந்திருக்கும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. மனக்குழப்பம், மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றைத் தவிர்க்க மௌன விரதம் உதவும்.
 
எந்த வயதில் விரதம் இருக்கலாம்?
 
சிறுவயதுக் குழந்தைகளுக்கு விரதம் வேண்டாம். 10 வயது முதல் விரதம் இருக்கலாம். ஒருவேளை விரதத்தில் தொடங்கலாம். 60 வயது வரை கூட விரதம் இருக்கலாம். ஆனால், அந்த வயதில் அவர்களுக்குச் சர்க்கரைக் குறைபாடு, ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற எந்தப் பிரச்னைகளும் இன்றி நலமாக இருந்தால் விரதம் இருப்பதில் தவறில்லை.
 
விரதத்தால் உடல் எடை குறையுமா?
 
வாரத்தில் ஒருநாள் விரதம் கடைப்பிடிப்பதால் உடல் எடை குறையாது. ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் விரதம் கடைப்பிடிக்கும்போது கண்டிப்பாக உடல் எடை குறையும். விரதம் முடித்தபின் அதிகம் சாப்பிட்டால் இழந்த எடை மீண்டும் கூடும் வாய்ப்புள்ளது. விரத காலத்தில் உடல் எடைக் குறைந்தாலும் விரதம் முடிந்தபின் உடல் எடைக் கூடுவதற்கான உணவுகளைத் தவிர்ப்பதோடு, சரிவிகிதச் சத்துணவு எடுத்துக் கொண்டு உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies