ரத்த அழுத்தம்- இதய துடிப்பை சீரமைக்கும் தோல்: நிபுணர்கள் ஆய்வில் தகவல்
27 Oct,2017
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சுவீடனில் உள்ள கரோலிங்ஸ்கா நிறுவனத்தின் நிபுணர்கள் மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக ஒரு சுண்டெலியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றின் மூலம் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது ஆக்சிஜன் அளவைப் பொறுத்து சுண்டெலிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட்டது.
இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என ‘இலைப்’ என்ற அறிவியல் இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது.