உடலுறவுக்கு முன்னர் உங்களது மனைவியை சந்தோஷப்படுத்த நீங்கள் எக்கச்சக்க விஷயங்களை செய்வீர்கள். இது உண்மையில் சிறந்த விஷயம் தான்.
நாம், உடலுறவுக்கு பின்னர் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை மறந்துவிடுகிறோம்.குறிப்பாக ஆண்கள் பெரும்பாலும் உடலுறவில் திருப்தியடைந்த பின்னர் தங்களது மனைவிகளை கண்டுகொள்வதில்லையாம். ஆனால் நீங்கள் உடலுறவுக்கு பின்னர் தான் கண்டிப்பாக உங்களது மனைவி மீது சற்று கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கவனம் செலுத்துவதால், சில அசௌகரியங்களில் இருந்து உங்களது மனைவியை காப்பாற்ற முடியும். கண்டிப்பாக உங்களது மனைவியை காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுடையது என நினைத்தால் இதனை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
1. பாத்ரூம் செல்லவும்:
நீங்கள் இதனை பல தடவைகள் கேள்விப்பட்டீருப்பீர்கள். ஆனால் இதனை நீங்கள் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானது ஏன்னென்றால் இது அந்த அளவுக்கு முக்கியமானதாகும். கண்டிப்பாக உங்களது மனைவியை உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழிக்க சொல்லுங்கள். உடலுறவுக்கு பின்னர் நடக்க சற்று கடினமாக தான் இருக்கும். இருப்பினும் நீங்கள் இதனை வழியுறுத்துவது அவசியம்.
எதற்காக?
உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழிக்க வேண்டியது, ஏன் இவ்வளவு முக்கியம் என்றால், உங்களுக்கே தெரியும் உடலுறவின் போது பல பாக்டீரியாக்கள் பரவியிருக்கும். அதனை அப்படியே விட்டுவிட்டால் அது சிறுநீரகப்பாதையில் தொற்றுக்களை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் எல்லாம் வெளியில் சென்றுவிடும். இது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
2. தண்ணீர் குடிக்கவும்
உடலுறவு என்பது நீண்ட நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதற்கு சமமானதாகும். நீங்கள் எந்த பொசிஷனில் உடலுறவுக்கு கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் எப்படி இருந்தாலும் உடலுறவின் போது நீங்கள் உங்களது உடல் உழைப்பை தர வேண்டியிருக்கும். இதனால் உங்களது உடல் வறட்சியடைந்துவிடும். எனவே நீங்கள் நிச்சயமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
இன்னொரு நன்மையும் இருக்கு!
நீங்கள் உடலுறவுக்கு பின்னர் உங்களது மனைவியை தண்ணீர் குடிக்க வலியுறுத்துவதால், அவருக்கு சிறுநீர் வர இது உதவியாக இருக்கும். இதனால் உங்களது மனைவி சிறுநீர் பாதையில் உண்டாகும் அபாயத்தில் இருந்து தப்பிப்பார். இது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் தானே?
3. குளிக்க வேண்டும்!
குளிப்பது என்ற உடன் நல்ல வாசனையான சோப்பை கையில் எடுத்து விடாதீர்கள். அது உங்களுக்கு கொஞ்சமும் உதவாது. வாசனை இல்லாத சோப்பால் உங்களது மனைவியை குளிக்க சொல்லுங்கள். பெண் உறுப்பை சுற்றியுள்ள பகுதியை நன்றாக சுத்தம் செய்ய சொல்லுங்கள். இது பாக்டீரியாவினால் உண்டாகும் பாதிப்பை குறைக்க உதவும்.
குளிக்க சிரமமா?
குளிப்பதற்கு சிரமமாக இருந்தால், சிறிதளவு மென்மையான காட்டன் துணியை எடுத்து, சோப்பு மற்றும் தண்ணீரில் நனைத்து, பெண்ணுறுப்பை சுற்றியுள்ள பகுதிகளை முன்புறமிருந்து பின்புறம் நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்ணுறுப்பிற்கு உள்ளே போய் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. பெண்ணுறுப்பிற்கு தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள தெரியும். கண்ணுக்கு தெரியும் இடங்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமானது