மாரடைப்பு சிகிச்சை கொண்டவர்கள் கண்டிப்பாக கூடவே வைத்திருக்க வேண்டியவை!
13 Oct,2017
இன்றைக்கு மாரடைப்பு என்பது மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டது. அதில் நவீன முறையில் பல்வேறு சிகிச்சை முறைகள், வராமல் தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும்
இக்கட்டுரையில் வரப்போகும் விஷயங்களும் உங்களுக்கு மிகவும் அவசியமானது தான். மாரடைப்பு ஏற்ப்பட்டு சிகிச்சை எடுத்தக் கொண்டவர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டிய பொருட்கள்.
ஆஸ்ப்ரின் :
அமெரிக்காவில் இருக்கும் இதய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆஸ்பிரின் மாத்திரி உட்கொள்வதால் அது உங்கள் ரத்தத்தை மெலிதாக்குகிறது. இதனால் ரத்தம் உறைந்து நிற்பதோ அல்லது ப்ளட் களாட் ஆகாமல் தவிர்க்கப்படும்.
ஆனால் உங்களது மருத்துவரிடம் அடிக்கடி ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா என்பதை கேட்டு தெளிவு பெற்றிடுங்கள்.
எமர்ஜென்சி ப்ளான் :
நீங்கள் தனியாக இருக்கும் சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விட்டால் யாருக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களை சட்டையில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
ஒரு வேளை நீங்கள் சுயநினைவின்றி விழுந்தால் கூட உங்கள் உறவினர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.
விவரங்கள் :
தொடர்பு எண்ணைத் தாண்டி அதில் சில விவரங்கள் எழுதி வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும்.
மாரடைப்பு ஏற்ப்பட்டு என்ன மாதிரியான மாத்திரைகளை சாப்பிடுகிறீர்கள். இதயத்தில் அல்லது இதய வால்வுகளில் ஏதேனும் ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருந்தால் அவை குறித்த விவரமும் இருக்க வேண்டும்.
இதனால் ஆபத்தான சூழலில் மருத்துவர்கள் உங்களுக்கு விரைந்து சிகிச்சையளிக்க முடியும்.
ஸ்ப்ரே :
இது உங்களது மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது தான் நல்லது. அதிக ரத்த அழுத்தம், நெஞ்சு வலி, போன்று மாரடைப்பு ஏற்படுவது போலத் தோன்றினால் நைட்ரோக்ளிசரின் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.
கடினமான வேலைகளை செய்தாலோ அல்லது அதிகமான உடற்பயிற்சிகளை செய்வதால் அதிகமாக மூச்சு வாங்கினால் இதனை பயன்படுத்தலாமா என்பதையும் மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்துங்கள்.
மருத்துவரின் தொடர்பு எண் :
தகவலை உங்கள் உறவினர்களிடம் தெரிவிப்பதற்கான தொடர்பு எண் அவசியமாக இருப்பது போலவே உங்களுக்கு சிகிச்சையளிக்கும் இதய நோய் தொடர்பாக எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறீர்கள் என்பது தொடர்பான விவரங்களையும் வைத்திருப்பது அவசியம்.