வயதான ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்

11 Oct,2017
 

 
 
 
 
சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் வயது சம்பந்தப்பட்ட மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக, வயதான ஆண்களுக்கு சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானதாகும்.
 
சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாயில் ஏற்படும் சில மாற்றங்கள் பின்வருமாறு:
 
சிறுநீர்ப்பை சுவரில் ஏற்படும் மாற்றங்கள்: சிறுநீர்ப்பை சுவரின் மீள்தன்மை கொண்ட திசு கடினமாகலாம், இதனால் அதன் இழுபடும் தன்மை குறையக்கூடும். இதனால் சிறுநீர்ப்பையால் முன்பைப்போல் அதிக சிறுநீரை சேகரித்து வைத்திருப்பது கடினமாகிறது.
 சிறுநீர்ப்பை தசை பலவீனமடைதல்.
 உணர்வு குறைவு.
 புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவதால் சிறுநீர்க்குழாயில் அடைப்பு ஏற்படலாம்.
 வயதான ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பின்வரும் வடிவங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்கலாம். :
 
சிறுநீர்ப் பாய்வு பலவீனமாக இருக்கும் அல்லது சிறுநீர் கழிக்க முயலும்போதும் சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் (Weak Flow or not able to pass urine when you try)
 புரோஸ்டேட் சுரப்பி விரிவடைதல் (தீங்கற்ற ப்ரோஸ்டாடிக் ஹைப்பர்ப்ளாசியா (BPH) எனப்படும்) காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம். இந்தப் பிரச்சனை பொதுவாக சுமார் 40 வயது தொடக்கத்தில் உள்ள ஆண்களுக்கு ஏற்படலாம். BPH பிரச்சனை இருக்கும் வாய்ப்பானது வயது அதிகரிக்கும்போது அதிகரிப்பதாக உள்ளது. 50-59 வயதுப் பிரிவினருக்கு இந்த வாய்ப்பு 30% இருக்கிறது, இதுவே 80 மற்றும் அதற்கும் அதிக வயதுடைய ஆண்களுக்கு 70% இருக்கிறது. இந்த சுரப்பி பொதுவாக ஒரு பாதாம் பருப்பின் அளவில் இருக்கும், ஆனால் இது விரிவடையும்போது சிறுநீர்க்குழாயின் (இந்தக் குழாய்தான் சிறுநீர்ப்பையில் இருந்து ஆணுறுப்பின் முனை வரை சிறுநீரைக் கொண்டு செல்லும்) மீது அழுத்தம் செலுத்தும். இந்த அழுத்தத்தால் சிறுநீர் வெளியேறத் தொடங்குவதில் சிரமம், சிறுநீர் வெளியேறுவதில் சிரமம், சிறுநீர் பாய்வு பலவீனமாக இருப்பது, சிறுநீர் ஒழுகுதல், பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் சிறுநீர் அடைத்துக்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
 
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உங்கள் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவும். ஆன்டிஹிஸ்டமைன், டிகன்ஜெஸ்ட்டன்ட்ஸ் மற்றும் ஆன்டிடிப்ரசன்ட்ஸ் போன்ற மருந்துகளாலும் இந்த அறிகுறிகள் ஏற்படக்கூடும் என்பதால், நீங்கள் ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா என்பது பற்றி உங்கள் மருத்துவர் கேட்டறிவார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருந்துகளை மாற்றுவது உதவலாம். புரோஸ்டேட் சுரப்பி விரிவடைந்துள்ளதா எனக் கண்டறிவதற்கான விரிவான பரிசோதனைகள் மற்றும் சோதனைகளை மருத்துவர் செய்வார். BPH-இன் ஆரம்ப கட்டங்களில், சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மாத்திரைகளே அறிகுறிகளைத் திறக்கக்கூடும். நோய் முற்றிய நிலையில் இருந்தால், புரோஸ்டேட் சுரப்பியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
 
இந்த அறிகுறிகளுக்கான பிற காரணங்கள்: புரோஸ்டேட் சுரப்பியின் அழற்சி (ப்ராஸ்டாடிடிஸ்) அல்லது சிறுநீர்க்குழாயின் அழற்சி (யூரித்ரைட்டிஸ்), சிறுநீர்ப்பை கற்கள் மற்றும் புரோஸ்டேட் சுரப்பி அல்லது சிறுநீர்ப்பைப் புற்றுநோய் ஆகியவை. இந்தக் காரணங்கள் இருந்தால், உங்கள் மருத்துவர் இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் பிற தேவையான சோதனைகளை செய்வார்.
 
சிறுநீர் கழித்த பிறகும் உடனடியாக மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுதல் (You have the urge to go even Though You Just Went)
 சிறுநீர்ப்பை அதீதமாக செயல்படுவது அல்லது சிறுநீர்ப்பை தானாக சுருங்கி விரிதல் போன்றவை வயதான ஆண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் (ஒரு நாளில் 8-க்கும் அதிக முறை), சிறுநீர் அவசரமாக வரும்போது அடக்க முடியாமல் சிறுநீர் கசிந்துவிடும்.
 
சிறுநீர்ப்பை அளவுக்கு அதிகமாக செயல்படக் காரணம், வயது முதிர்வு, மருந்துகள் (டையூரேட்டிக் அல்லது லித்தியம் போன்றவை), BPH அல்லது புரோஸ்டேட் அறுவை சிகிச்சை போன்றவையாக இருக்கலாம். மருந்துகளால் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் மாற்று மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். சிறுநீர்ப்பை அளவுக்கு அதிகமாக செயல்படும் பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிறுநீர்ப்பை தளர்வடைய அல்லது சிறுநீர் உற்பத்தியைக் குறைக்க உதவக்கூடிய மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
 
சிறுநீர்ப்பை அளவுக்கு அதிகமாக செயல்படக்கூடிய பிரச்சனைக்கு சில சுய கவனிப்பு குறிப்புகள்:
 
திரவங்களை பல்வேறு இடைவெளிகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் – ஒரு நாளின் பல்வேறு சமயங்களில் அவ்வப்போது திரவங்களை உட்கொள்ள வேண்டும், இதனால் சிறுநீர்ப்பை அதிக பாரம் அடையாமல் தடுக்கலாம்.
 கெகல் பயிற்சிகள் – ஆணுறுப்பைச் சுற்றிலும் அமைந்து கீழ் இடுப்புத்தளத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் தசைகளை நெகிழ்த்த உதவுகின்ற கீழ் இடுப்புத்தளத் தசைப் பயிற்சிகளைச் செய்யலாம். இந்தப் பயிற்சிகளை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், எந்த இடத்திலும் செய்யலாம். இவை கீழ் இடுப்புத்தளத் தசைகளை வலிமைப்படுத்த உதவுகின்றன. இவை சிறுநீர் கசிவதைக் குறைத்து சிறுநீர் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
 சுய கவனிப்பு வழிமுறைகள் பலனளிக்காவிட்டால், திருவெலும்பு நரம்புத் தூண்டுதல் (சாக்ரல் நெர்வ் ஸ்டிமுலேஷன்) அல்லது அறுவை சிகிச்சை போன்ற அடுத்த நிலை வழிமுறைகளை முயற்சிக்க வேண்டியிருக்கலாம்.
 
நீரிழிவுநோய், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், பக்கவாதம் மற்றும் பிற நரம்பியல் பிரச்சனைகளும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அறிகுறிக்குக் காரணமாகலாம். மற்ற காரணங்கள் இல்லை என உறுதிப்படுத்த, மருத்துவர் கூடுதல் சோதனைகளைச் செய்யலாம்.
 
இரவில் தூங்கும்போது சில முறை சிறுநீர் கழிக்க விழித்தெழுதல் (You Wake Up few times in the night to Urinate)
 இரவில் அடிகடி சிறுநீர் கழிக்க விழிக்கும் பிரச்சனை பல நாட்களாக இருப்பதும் (நாக்ட்டூரியா) வயது முதிர்ந்த ஆண்களுக்குக் காணப்படும் மற்றொரு அறிகுறியாகும். சிலருக்கு, சிறுநீர் அதிகமாக உற்பத்தி ஆவதால் அல்லது நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்துக்கொள்ளும் திறனை சிறுநீர்ப்பை இழப்பதால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
 
இரவில் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையைக் குறைக்க பின்வரும் வழிமுறைகள் உதவலாம்:
 
படுக்கச் செல்வதற்கு இரண்டு மணிநேரம் முன்புள்ள நேரத்தில் அதிக திரவங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 ஆல்கஹால் அல்லது காபின் எடுத்துக்கொள்வதைக் குறைக்கவும் (இவை இரண்டுமே சிறுநீர் வெளியேற்ற அளவை அதிகரிப்பவை) குறிப்பாக, மாலை 7 மணிக்குப் பிறகு இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 உங்கள் மருந்துகளில் ஏதேனும் (உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டையூரேட்டிக்ஸ் போன்றவை) இந்த அறிகுறிகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் கருதினால் மாற்று மருந்தை அவர் பரிந்துரைக்கக்கூடும். சிறுநீர்ப்பையைத் தளர்த்துகின்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். இதனால் இரவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுவது குறையும்.
 சிலருக்கு, சிறுநீர்ப்பை நோய்த்தொற்று அல்லது அழற்சி காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம் அல்லது நீரிழிவுநோய், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, சிறுநீர்ப்பைப் புற்றுநோய் அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் ஆகிய நோய்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதற்கான பிற காரணங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, உங்கள் மருத்துவர் சிறுநீர் பகுப்பாய்வு, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் பிற சோதனைகளைச் செய்யப் பரிந்துரைக்கலாம்.
 
தற்செயலாக சிறுநீர் கசிதல் (Accidental leaking of urine)
 வயதான ஆண்களுக்கு சிறுநீர் கசிதல் (சிறுநீர் அடங்காமை) பிரச்சனை இருக்கும். இது வயது அதிகரிக்கும்போது ஏற்படும் வழக்கமான மாற்றமே, இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
 
சிறுநீர் அடங்காமையின் பல்வேறு வகைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
 
அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீர் கசிவுப் பிரச்சனை: ஏதேனும் பளுவான பொருளைத் தூங்கும்போது, உடலின் தோரணையை மாற்றும்போது, இருமும்போது, தும்மும்போது அல்லது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தம் தரக்கூடிய வகையில் நீங்கள் ஏதேனும் செயல்களைச் செய்யும்போது சிறுநீர் கசியும். புரோஸ்டேட் சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகு, சிறுநீர்ப்பையின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகள் சேதமடைந்திருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
 
உந்துதல் கசிவு: சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் பலமாக இருக்கும், அப்போது கழிப்பறைக்குச் செல்லும் முன்பே சிறுநீர் கசிந்துவிடும். சிறுநீர்ப்பைத் தசைகள் மிகவும் நசுக்கப்பட்டு, சுருக்குத் தசைகளால் அதிக நேரம் சிறுநீரைத் தேக்கி வைக்க முடியாமல் போகிறது. இப்படி அளவுக்கதிகமாக செயல்படும்சிறுநீர்ப்பையால் சிறுநீர் அடங்காமை உள்ளவர்களுக்கு இப்படி சிறுநீர் கசிவு இருக்கும். இது நீரிழிவுநோய், பக்கவாதம், அல்சைமர் நோய், பார்கின்சன் நோய், அல்லது தண்டுவட மரப்புநோய் (மல்ட்டிபிள் ஸ்கேல்ரோசிஸ்) போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சனை காணப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும், ஆனால் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. இதனை சிறுநீர் வழிதல் அடங்காமை என்கிறோம். சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் முழுவதுமாக வெளியேறி சிறுநீர்ப்பை காலியாகாமல் இருப்பதால் பிறகு சிறுநீர் கசியும். புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகி, அது சிறுநீர்க்குழாயை அழுத்தித் தடை ஏற்படுத்துவதால் இந்தப் பிரச்சனை வருகிறது. சிறுநீர்ப்பை தசைகள் பலவீனமாக இருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
 
வயதான ஆண்களுக்கு, சிறுநீர் அடங்காமைப் பிரச்சனை வரப் பொதுவான காரணம் புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது அல்லது சிகிச்சைகளாகும். டையூரெட்டிக்ஸ், தூக்கம் வர உதவும் மருந்துகள், ஓப்பியாய்டு வலி நிவாரண மருந்துகள், ஆன்டிடிப்ரசன்ட்ஸ் மற்றும் கடையில் இருந்து வாங்கிப் பயன்படுத்தும் ஜலதோஷ மருந்துகள் ஆகியவையும் அறிகுறிகளைப் பாதிக்கலாம்.
 
உங்கள் அறிகுறிகள் பற்றிய விவரங்களை மருத்துவர் கேட்டறிந்து, உடல் பரிசோதனை செய்வார், சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்பார். அதன் பிறகு அல்ட்ராசவுண்ட் சோதனை மற்றும் சிறுநீர் பாய்ச்சல் சோதனை ஆகிய சோதனைகளையும் செய்யப் பரிந்துரைக்கலாம். சிறுநீர் அடங்காமைப் பிரச்சனைக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சையானது, என்ன வகை சிறுநீர் அடங்காமை என்பதையும், அது உங்கள் வாழ்க்கையை எவ்விதத்தில் பாதிக்கிறது என்பதையும் பொறுத்து அமையும். மருந்துகள், எளிய உடற்பயிற்சிகள் போன்றவை இதற்கான சிகிச்சையில் உள்ளடங்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
 
சிறுநீர் அடங்காமைப் பிரச்சனைக்கு சில சுய கவனிப்பு முறைகள்:
 
குறிப்பிட்ட நேரம் அமைத்துக்கொண்டு, ஒரு நாளில் பல முறை கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்.
 சிறுநீர் கழிப்பதற்காக, விரைவாக ஜிப்பைக் கழற்றக்கூடிய, விரைவாக ஆணுறுப்பை வெளியில் எடுக்க வசதியான ஆடைகளை அணிய வேண்டும்.
 கழிவறைக்கு விரைவாகச் செல்ல வேண்டும். வீட்டில் கழிப்பறைக்குச் செல்லும் வழியில் தடையாக எதுவும் இருந்தால், அப்புறப்படுத்த வேண்டும்.
 சிறுநீர் கழிக்கும்போது, இரு முறை கழிக்கும் முறையைப் பயன்படுத்த முயற்சிக்கலாம். அதாவது, முதல் முறை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறுநீர் கழித்துவிட்டு, சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் மற்றொரு முறை முயற்சி செய்து சிறுநீர் கழிக்க வேண்டும்.
 காபி, தேநீர் மற்றும் பிற காபின் உள்ள பானங்களை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 காற்றேற்றப்பட்ட (நுரை பொங்கும்) பானங்கள், மது ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.
 அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்க வேண்டும்.
 புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
 உடல் எடையை ஆரோக்கியமான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 கெகல் பயிற்சிகள் போன்ற கீழ் இடுப்புத்தளத் தசைப் பயிற்சிகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
 சுருக்கமாக, வயதான ஆண்களுக்கு சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது இயல்பு, அவற்றில் பெரும்பாலானவை பெரிய கவலைப்பட வேண்டிய பிரச்சனைகளல்ல. வயதான ஆண்களுக்கு சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் வர முக்கியமான ஒரு காரணம், புரோஸ்டேட் சுரப்பி விரிவடைவதாகும்.
 உங்களுக்கு சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரிடம் சொல்ல சங்கடப்பட வேண்டாம். வெளிப்படையாகக் கூறுங்கள். இவற்றில் பெரும்பாலானவை சிகிச்சையளிக்கக்கூடியவை அல்லது குணப்படுத்தக்கூடியவை தான்.
 
பின்வரும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்:
 
சிறுநீர்க்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், குளிர், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அதிக சோர்வு, குமட்டல், வாந்தி அல்லது அடிமுதுகு வலி போன்ற அறிகுறிகள்
 சிறுநீர் மிக அடர்நிறத்தில் இருப்பது அல்லது சிறுநீரில் புதிய இரத்தம் கலந்து வருவது
 தினசரி வாழ்க்கை செயல்பாடுகளைப் பாதிக்கும் அளவிற்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பது
 திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல்
 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுநீர் கழிக்காமல் இருப்பது
 சிறுநீர் பிரச்சனையுடன் காய்ச்சலும் இருப்பது
 குழப்பம், சூழல் உணர்வின்மை ஆகிய பிரச்சனைகளுடன் சேர்த்து, திடீரென சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தோன்றுதல்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies