தூக்கம் உங்கள் கண்களை தழுவ வேண்டுமா?
10 Oct,2017
என்ன இது? தூக்கத்திற்கும் கண்களுக்கும் சரி தொடர்பிருக்கு ஆனால். தூக்கத்தி ற்கும் பாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற ஒரு
ஆச்சரிய கேள்வி உங்கள் மனத்தில் எழுந்திருக்கும். உங்கள் மனத்தில் எழுந்த அந்த ஆச்சரிய கேள்வி நியாயமானது தான். ஆனாலும் அதற்கான உறுதியான விளக்கமும் இங்கே இருக்கு . ஆம் தூக்கம் (Sleep) உங்கள் கண்களை தழுவ நீங்கள் இரவில் படு க்கப்போவதற்கு முன்பு செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
இரவில் படுக்கையில் படுக்கும் முன் , ஒரு பிளாஸ்டிக் (Plastic) டப்பில் வெதுவெது ப்பான சூட்டில் உள்ள நீரை ஊற்றுங்கள். பிறகு அதில் கொஞ்சம் உப்பு (Salt), எலுமிச்சைச்சாறு (Lemon Juice) மற்றும் பேபி ஷாம்பு (Baby Shampoo) கலந்து அதில் உங்கள் பாதங்களை வைத்து சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் (5 to 10 Minutes) ஊற வையு ங்கள். அதன்பிறகு பழைய டூத்பிரஷ் (Tooth Brush) எடுத்து நன்றாக பாதத்தை சுத்தப்படுத்தி, முற்றிலுமாக ஈரம் போகத் துடைத்து விடவேண்டும். அதன்பிறகு லேசாக சூடுபடுத்திய நல்லெண்ணெயை எடுத்து உங்கள் முழங்காலிருந்து பாதம்வ ரை நன்றாக தடவுங்கள். அதன்பிறகு பாருங்கள் உங்கள் பாத வலி (Foot Pain) முற்றிலும் மறைந்து போகும். அதன்பிறகு என்ன தானாகவே உங்கள் கண்களைத் தூக்கம் (Sleep) தழுவும்.