சுமார் 15 ஆண்டு காலம் சுயநினைவற்ற நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு சுய நினைவை மீண்டும் பெற்றுள்ளார்.
சிகிச்சைக்கு முன்னரும் (இடது) பின்னரும் (வலது) மூளை செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டும் சோதனை முடிவுகள்படத்தின் காப்புரிமை Corazzol et al
கார் விபத்து ஒன்றில் காயமடைந்து சுயநினைவை இழந்த 35 வயதான ஒரு நபரின் நெஞ்சில், நரம்புகளின் செயல்பாடுகளைத் தூண்டும் ஒரு கருவியை சோதனை அடிப்படையில் பொருத்தியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அக்கருவியைப் பொருத்திய ஒரு மாத காலத்தில், தலையைத் திருப்புதல், ஒரே பொருளை கவனித்துப்பார்த்தல் போன்ற செயல்களை அவரால் செய்ய முடிந்தது.
இந்த முடிவுகள் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த சோதனை தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், மூளையுடன் நேரடியாக இணைந்துள்ள 12 இரட்டை நரம்புகளில் ஒன்றான வேகஸ் நரம்பைத் தூண்டி இயங்க வைக்கும் இந்த முயற்சி வெவ்வேறு விதமான மூளை சேதத்துக்கு ஆளாகியுள்ள நோயாளிகளுக்கு திறன்மிக்க பலனளிக்காது.
உடலின் பல உறுப்புகளுடன் இணைந்துள்ள இந்த நரம்பு, உடலின் தானியங்கி செயல்பாடுகள் அல்லது ஆழ்மனதில் பதிவாகியுள்ள செயல்பாடுகளை செய்ய உதவுவதுடன், விழிப்புடனும் சுயநினைவுடனும் செயல்பட உதவுகிறது.
லியோவில் உள்ள மார்க் ஜூனரோ அறிவாற்றல் அறிவியலுக்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஏஞ்சலா சிரிகு, ஒரு சவால் மிக்க நோயாளியை இந்த ஆராய்ச்சிக்காகத் தாங்கள் தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.
இந்தக் கருவி மூலம் வேகஸ் நரம்பு தூண்டப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு, தனக்கு சிகிச்சை அளிப்பவர் புத்தகம் வாசிக்கும்போது தன் மகனின் கவனிக்கும் திறன் அதிகரித்திருப்பதாக, சிகிச்சை அளிக்கப்பட்ட நபரின் தாய் கூறியுள்ளார்.
அவரின் மூளை பரிசோதிக்கப்பட்டபோது முன்னேற்றம் தென்பட்டதாக கரண்ட் பையலாஜி அறிவியல் சஞ்சிகை தெரிவிக்கிறது.
உதாரணமாக, மருத்துவரின் தலை அவரின் முகத்திற்கு அருகில் திடீரென நெருங்கியபோது அவர் தன கண்களை அகலமாக விரித்து வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நம்பிக்கைகளும் இழந்த சூழ்நிலையிலும் மூளையில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வது சாத்தியமே என்று சிரிகு கூறியுள்ளார்.
"இந்த முயற்சிக்குப் பிறகு இன்னும் அதிக எண்ணிகையிலான நோயாளிகளிடம் இந்த சிகிச்சையை மேற்கொள்வதை நாங்கள் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்."
மிகவும் குறைவான சுயநினைவு உள்ள நபர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்வதற்கான அதிகமான வாய்ப்புகளை வழங்க இந்த சிகிச்சை முக்கியமானதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
"இது ஒரு ஆர்வம் மிக்க புதிய சமிக்ஞையாக இருக்கலாம். ஆனால், இதே முடிவுகள் இன்னும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் மேற்கொள்ளப்படும் சோதனைகளிலும் வெளியாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனை சேர்ந்த டாக்டர் விளாடிமிர் லிட்வாக் கூறுகிறார்.
"ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையை வைத்து, ஒட்டுமொத்த மக்களிடமும் இந்த சிகிச்சை எவ்வாறு செயல்படும் என்பதை அறிவது கடினம்," என்றும் அவர் கூறியுள்ளார்.
சுயநினைவற்ற நிலை என்பது என்ன?
அறிகுறிகளை வெளிப்படுத்தவோ முடியாது. சுயநினைவற்ற நிலையில் இருக்கும்போது ஒரே பொருளை உற்று நோக்கிப் பின்தொடர்தல், சத்தங்களுக்கு எதிர்வினையாற்றல் போன்ற அர்த்தமுள்ள, அறிவார்ந்த செயல்களைச் செய்ய முடியாது.