பாட்டு பாடுவது மிகச்சிறந்த சிகிச்சை.!
25 Sep,2017
நீங்கள் பாடுவதில் அதிக ஈடுபாடுகள் உடையவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாடுவது நல்லது. உங்களது குரல் நன்றாக இல்லை, பாடினால் எல்லோரும் பார்த்து சிரிப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி பாடுவது உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மிகச்சிறந்த பொழுதுபோக்கும் கூட..
நீங்கள் பாடிக்கொண்டே வேலை செய்பவர்கள், பாத்ரூம் சிங்கர்ஸ் இவர்களை எல்லாம் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள். இவர்களை பார்க்க சிரிப்பாக இருந்தாலும், இவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள். இந்த பகுதியில் பாடுவதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காணலாம்.
1. மன அழுத்தம்
பாடுவது உங்களது மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகப்படுத்துகிறது. எனவே சோகமாக இருக்கும் தருணங்களில் பாடுவது உங்களது மனசோர்வை போக்கும்.
2. பிரச்சனைகளை வெளிப்படுத்தும்
உங்களது கவலைகளை வெளியே வார்த்தைகளாக சொல்ல முடியாது.. ஆனால் பிரச்சனைகளை பாடல் மூலம் அழகாக வெளிப்படுத்தலாம். ஆழ்மனதில் உள்ள பிரச்சனைகள் பாடலாக வெளிவரும் போது, உங்களால் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியும்.
3. நட்பை உருவாக்க முடியும்
பாடுவதினால் உங்களால் நல்ல நட்பை உருவாக்க முடியும். ஒருவருடன் இணைந்து பாடும் போது, உங்களால் அவருடன் ஒரு நெருக்கத்தை உணர முடியும். இது உணர்வு பூர்வமான நட்பாகவும் அமையும்.
4. நுரையிரலை பலப்படுத்தும்
பாடுவது, உங்களது முகத்தை நன்றாக அசைய செய்கிறது. இதனால் முகத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது. அதைவிட உங்களது நுரையீரலை பாடுவது பலப்படுத்துகிறது. ஆஸ்துமாவிற்கு பாடுவது மிகச்சிறந்த மருந்தாகும்.
5. குறட்டை பழக்கம்
குறட்டைப் பழக்கம் ஒருவரை அவதிக்குள்ளாக்கும் ஒன்றாகும். குறட்டையிடுபவர்களுக்கு பாடுவது மிகச்சிறந்த சிகிச்சையாகும். பாடும் போது சதைகள் இலகுவாகின்றன. இதனால் குறட்டையிடும் பழக்கம் குறைகிறது.