இங்கிலாந்தில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு வாழ்நாளை அதிகரிக்க கூடிய மருந்து உடனடியாக வழங்கப்படும் என்று ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
சண்டே டைம்ஸ் விமர்சகர் ஏ.ஏ.கில் உள்ளிட்ட பிரச்சாரகர்கள், வாழ் நாட்களை சில மாதங்கள் அளவுக்கு அதிகரிக்கும் இந்த நோய்த்தடுப்பு மருந்து கிடைக்கும்படி செய்யவேண்டும் என்று பல முறை கோரி வந்தனர்.
ஏற்கனவே, கீமொதெரபி சிகிச்சை பெற்று நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும் நிவலூமாப் (nivolumab) என்ற இந்த மருந்தை வழங்குகிறது ஸ்காட்லாந்து. இங்கிலாந்து மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு நிவோலூமாப் மிகவும் விலை உயர்ந்தது என்று கூறுகிறது.
வாழ்நாள் அதிகரிப்பு
தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்புத்திறன் நிறுவனம் (NICE), புற்றுநோய் மருந்துகள் நிதி மூலம் நியாவலோமாப்பை அங்கீகரித்துள்ளது என புதிய வரைவு வழிகாட்டல் தெரிவிக்கிறது. மேலும் இம் மருந்து செலவுக்கேற்றப் பலனைத் தருமா என்பது குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன. சில வகை நுரையீரல் புற்று நோயாளிகள், தற்போது இந்த மருந்தினை பெற தகுதியுடையவர்கள்.
நுரையீரல் புற்றுநோயுடன் வாழ்ந்த ஏ.ஏ.கில் தான் இறப்பதற்கு முந்திய வாரங்களில் இம்மருந்து "வாழ்நாட்களை அதிகரிக்கும் - ஆனால் நீங்கள் பணம் செலுத்தினால் மட்டுமே" என்று நிவோலூமாப் குறித்து விவரித்துள்ளார்.
மாதம் 5 ஆயிரம் பவுண்டு செலவுபிடிக்கும் இந்த மருந்தைத் தம்மால் பயன்படுத்த முடியவில்லை என்றும், பயன்படுத்தியிருந்தால் தமது வாழ்நாளை குறிப்பிட்ட அளவு நீட்டித்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
நிவோலூமாப் (பிராண்ட் பெயர் ஒப்டிவோ) என்பது புற்று நோய் செல்களை எதிர்த்து உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டும் ஒரு வகையான நோய் எதிர்ப்பு சிகிச்சை ஆகும்.
புற்றுநோய் செல்கள் தாம் ஆரோக்கியமான செல்கள் என நோயெதிர்ப்பு அமைப்பை நம்ப வைப்பதற்குப் பயன்படுத்தும் ரசாயன சமிக்ஞைகளை இடைமறிப்பதன் மூலம் இந்த மருந்து செயல்படுகிறது.
நோயாளிகள் நரம்பு வழியாக நிவலோமாப்பை ஏற்ற முடியும்.
இது மேம்பட்ட மெலனோமா, இரத்த புற்றுநோய் (ஹோட்கின் லிம்போமா), சிறுநீரக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் பொதுவான வகைகள் போன்றவற்றை குணப்படுத்த இது பயன்படுகிறது.
"நுரையீரல் புற்றுநோயுள்ள சிலருக்கு மருத்துவ ரீதியாக இம்மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அதன் முழு பயன்கள் குறித்து தெளிவாக தெரியவில்லை தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்புத்திறன் அமைப்பு பேராசிரியரான கரோல் லொங்கன் கூறினார்.
மிகப்பயனுள்ள சிகிச்சை என்று அறியப்படும் முறையை நோயாளிகளுக்குக் கிடைக்கும்படி செய்வதும், அதன் மதிப்பு குறித்த புதிய தகவல்களைத் திரட்டுவதும் இந்தப் புதிய திட்டத்தின்படி நடக்கவுள்ளது என்றார் அவர்.