தரையில் படுத்து தூங்கினால் முதுகு வலி குணமாகும்
11 Sep,2017
பொதுவாக முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் படுத்து தூங்கும் போது, இந்த வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.
தரையில் படுத்து தூங்கினால் முதுகு வலி குணமாகும்
நீண்ட நேரம் படுக்கும்போது முதுகு தண்டு வலி, தலையணை சரியாக இல்லாமல், கழுத்து வலி போன்றவை ஏற்படுகின்றன. தரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு நல்ல தோற்றம் இருந்தால், உங்களால் முதுகு பகுதியை தரையில் வைத்து படுக்க முடிந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. இதுவே உறங்குவதற்கான நல்ல நிலை. இந்த நிலையில் உறங்கும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது. செயற்கையான கோணங்களால் தசையில் ஏற்படும் அழுத்தமும், எரிச்சலும் தவிர்க்கப்படும்.
மேலே கூறிய நிலையில் உறங்குவது உடலில் ஏற்கனவே தவறாக சீரமைக்கப்பட்ட எலும்பு மற்றும் மூட்டுகளை ரிப்பேர் செய்ய உதவுகிறது. மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். உடலில் இது ஒரு முக்கியமான பகுதியாகும். ஒரு நல்ல தோற்றம் உங்கள் முதுகு தண்டுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. நெரித்த நரம்புகள் மற்றும் மோசமான முதுகெலும்புகள் ஆகியவற்றின் சாத்தியக்கூறை உங்கள் நல்ல தோற்றம் குறைக்கின்றன.
பொதுவாக பலரும் முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கப்படுவர். மேலே கூறியபடி முதுகு பகுதியை தரையில் வைத்து படுக்கும்போது, இந்த வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. இந்த கீழ் முதுகில் வலி வருவதற்கு காரணம் நரம்புகள் நெறிக்கப்படுவதுதான். சில நேரம் எலும்புகள் தடம் மாறுவதால் இவை ஏற்படலாம்.
நமக்கு நிறைய வலிகள் ஏற்படுவது இடுப்பிலும் தோளிலும் சீரற்ற தன்மை ஏற்படுவதால் தான். தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் உங்கள் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் நீங்கும்.
தரையில் படுத்து உறங்குவதால் உடலில் எந்த ஒரு பாகத்திலும் தவறான சீரமைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. தலையணை இன்றி உறங்குவதால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது. இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.