புத்துணர்ச்சி தரும் பாத ஹஸ்தாசனம்
08 Sep,2017
ஜீரண சம்பந்தமான இரைப்பை, மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பாத ஹஸ்தாசனம் செய்வது வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
செய்முறை :
விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும். பிறகு குனிந்து தலைமுழங்கால் மீது படும்படி உடலை வளைத்து தன் இரண்டு கைகளையும் குதிகால்களை பிடித்து நிற்க வேண்டும். 20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சில் கவனம் கொள்ள வேண்டும். இரத்தஅழுத்தம் அல்லது இதயநோய் உள்ளவர்கள், மற்றும் கழுத்துவலி இடுப்புபிடிப்பு உள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.
நுரையீரல், நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
ஜீரண சம்பந்தமான இரைப்பை, மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.