சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக நீர் குடிக்கக் கூடாது ?
04 Sep,2017
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக நீர் குடிக்கக் கூடாது ? –
அடி வயிற்றின்கீழ் அமைந்துள்ள சிறுநீரகங்களில் உருவாகும் சிறுநீர், யுரீட்டர் எனும்
சிறுநீர்க் குழாய் மூலமாக சிறுநீர்பைக்குச் செல்கிறது. இந்த சிறுநீரகம் பெரியவர்க ளுக்கு சுமார் 10 செ.மீ நீளமும், 6 செ.மீ அகலமும் கொண்டதா க இருக்கும். வயதானவர்கள் 400-500 மி.லி. வரை சிறுநீரை சேமித்து வைக்க முடியும்.
ஒவ்வொரு நிமிடமும் 1200மி.லி. அளவு ரத்தம் இரண்டு சிறுநீ ரகங்களுக்கும் வருகிறது. அதில் இதய த்திலிருந்து வெளியா கும் ரத்தத்தில் 20% உள்ளது. ஒரு நாளைக்கு 1700 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
சிறுநீரகங்கள் பல ஹார்மோன்களை உருவாக்குகின்றன. அவை உடலில் உள்ள நீரின் அளவையும் உப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரகங்களில் எரித்ரோபோய்டின் எனும் ஹார்மோ ன் உற்பத்தியாகும். அது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிக ரிக்கச் செய்ய உதவுகிறது. சிறுநீரகம் பழுதடையும்போது, சிவப்பு அணுக்களின் உற்பத்தி பாதிப்படைந்து ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறைகிறது.
சிறுநீரகம் செயலிழப்பால் ஏற்படும் பாதிப்புகள்?
ஒரேஒரு சிறுநீரகம் செயலிழப்பதால், நோயாளிகளுக்கு எந்த வித சிரமமும் ஏற்படு வதில்லை. ஆனால் இருசிறு நீர கங்களும் செயலிழந்து விட்டால், கழிவுப் பொருட்கள் உட லுக்குள்ளேயே தங்கி, ரத்தத்தில் யூரியா அதிகமாக சேர்ந்து பல பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிறுநீரக பிரச்சனை (Kidney diseases) உள்ளவர்கள் அதிக நீர் குடிக்கக் கூடாது ஏன்?
சிறுநீரகக் கோளாறு என்றாலே அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்க ள். ஆனால் அது மிகவும் தவறு.
வீக்கம் ஏற்பட்டபின் வெளிவரும் சிறுநீரின் அளவு குறைவாகவே இருக்கும். இது பல சிறுநீரகக் கோளாறுகளின் ஒரு அம்சம். இம்மாதிரியான நோயாளிகளுக்கு குடிக்கும் நீரை கட்டுப்படுத்துவது அவசிய மாகிறது.
ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் உள்ள நோயாளிகள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று உள்ளவர்கள், சிறுநீரகங்கள் பழுதடையாதவர்கள் மட்டும் நீரை அதிகம் குடிக்க வேண்டும்.