வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் அதிசயங்கள்
02 Sep,2017
வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சியை நீங்கள் தினசரி பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உங்கள் உடல் எந்த அளவு ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்கிறது என்று பார்க்கலாம்.
வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் அதிசயங்கள்
வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சியை நீங்கள் தினசரி பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உங்கள் உடல் எந்த அளவு ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்கிறது என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? அந்த ஏழு அற்புத ரகசியங்கள் இவைதான்ஸ!
1. நாற்பது வயதுக்கு பிறகு உங்கள் இதய ரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும் கொழுப்பு, தொடர்ச்சியான உடற்பயிற்சியின் காரணமாக இதயத்தில் படிவதில்லை. கொழுப்பு படியாத காரணத்தால் உங்களை உயர்ரத்த அழுத்தம் தாக்குவதில்லை. இதனால் உங்களுக்கு இதயநோய், ஹார்ட் அட்டாக், வால்வுப் பிரச்சனை வருவதில்லை. முக்கியமாக உங்கள் தாத்தா, அப்பா ஆகியோர் இதயநோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், அவர்கள் விட்டுச்செல்லும் பரிசாக, டி.என்.ஏ வழியாக இடம்பெயரும் பாரம்பரிய தொடர்ச்சியான இதயநோயும் உங்களை தொடர வாய்ப்பே இல்லை! அடுத்து கொழுப்பு பிரச்சனை இல்லாமல் போவதால் ‘பேட்டி லங்ஸ்’ எனும் தடித்த நுரையீரல் பிரச்சனையோ, ‘ஆஸ்மேட்டிக் லிவர்’ எனப்படும் மூச்சுப்பிரச்சனையோ இல்லாமல் வாழ்வீர்கள்.
படிக்கட்டில் ஏறினால் எடை இறங்கும்...!
2. உலக சுகாதார நிறுவனம், எதிர்வரும் 2020 ஆண்டில் உலக அளவில் சர்க்கரை நோயின் ‘தலைநகரமாக’ முதலிடத்தில் ஆசியாவும் இரண்டாம் இடத்தில் ஐரோப்பாவும் அதைத்தொடர்ந்து மூன்றாம் இடத்தில் ஆப்ரிக்காவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது! இதில் 35 வயது முதல் 55 வயதுக்குள் சர்க்கரை நோயின் பிடியில் சிக்வோர் எண்ணிக்கை மக்கள் தொகையில் 35% சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிட்டு இருக்கிறது. ஆனால் மிக முன்னதாக 35 வயது முதலே உடற்பயிற்சியை ‘டெய்லி ஹேபிட்’ ஆக்கிக் கொள்பவர்களை சர்க்கரை நோய் நெருங்க வாய்ப்பே இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவில். காரணம் உடற்பயிற்சி செய்பவர்களின் உபரி சர்க்கரையானது, தினசரி எரிக்கப்பட்டு விடுகிறது. சர்க்கரை நோய் உங்களை நெருங்க முடியாதபோது உங்கள் இதயமும், சிறுநீரகமும், நரம்பு மண்டலலும் பாதுகாப்பாக இருக்கும்.
3. முறையான உடற்பயிற்சி, உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து, மூளைக்கான ரத்தஓட்டத்தை ஒரே சீராக வைத்திருக்கிறது. இதனால் மூளையில் சரியான இடைவெளியில் புதிய நீயூரான்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். ரத்தத்தில் இடையறாமல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும், கரையாத கொழுப்புத் திசுக்கள் மூளைக்கும் பயணிக்கும்போது, புதிய நியூரான்களின் உற்பத்தியை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம், புதிய நீரான்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருப்பதால் 65 முதல் 85 வயதிற்குள் தாக்கும் அல்சைமர் நோய் தாக்க வாய்ப்பே இல்லை.
4. இன்று ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்பாடும் மிக முக்கியமான மெட்டபாலிக் குறைபாடுகளில் ஒன்று ஆண்மை மற்றும் பெண்மை குறைவு. ஆண்களுக்கு முழுத்திறன் கொண்ட உயிரணுக்கள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் அவை இல்லாததும் போலவே, பெண்களுக்கு சரியான சைக்கிளில் கருமுட்டைகள் உற்பத்தியாகாமல் இருப்பது. அதிக உடல் எடை, போதுமான உடற்பயிற்சியின்மை ஆகிய இரண்டும் இத்தகைய இருபால் இம்போட்டண்ட் குறைப்பாட்டுக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தாம்பத்திய உறவில் போதிய ‘மலர்ச்சி’ கிடைப்பதில்லை என்பதையும் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக போதுமான உடற்பயிற்சியே தம்பத்திய உறவில் போதுமான மலர்ச்சியைக் கொண்டுவரும்.
5. உடலின் மிக முக்கியமான பகுதி நமது செரிமான மண்டலம். நாம் உண்ணும் உணவு, சரியான கால அளவில் செறித்து, சரியான கால இடைவேளையில் கழிவாக வெளியேற வேண்டும். ஒரு ஆரோக்கியமான மனிதர், ஒரு நாளைக்கு இரண்டுமுறை தாராளமாக ‘கக்கா’ போக வேண்டும். ஆனால் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாகி விடுகிறது. மூன்று தினங்களுக்கு ஒருமுறை கூட கக்கா செல்லும் ‘கான்சிபேட் மனிதர்கள்’ இருக்கிறார்கள். மலச்சிக்கல் வெறும் வயிறு மற்றும் செரிமான மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல! மனநலம் சம்பந்தப்பட்டது என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். மலச்சிக்கல் மன அழுத்தத்தை உண்டு பண்ணும். மலச்சிக்கல் இருப்பவர்கள் பைபர் உணவுகளை சாப்பிட்டு, தற்காலிகமாக பிரச்சனையை தீர்த்து விடலாம். ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் காரணமாக, தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம் மட்டுமே, செரிமான மண்டலம் தனது இயக்கத்தை தங்குதடையின்றி செய்யும். ஆக மலச்சிக்கல் எனும் மிகப்பெரிய சிக்கலில் இருந்து உடற்பயிற்சி உங்களுக்கு விடுதலை அளிக்கிறது என்ற ரகசியம் உணருங்கள்.
6. உடலின் முக்கியமான எலும்பு பாகமான மண்டையோடும், ஸ்பைனல் எனப்படும் முதுகெலும்பும் மிக முக்கியமானவை. இதில் ஸ்பைனலை ‘ஸ்பைனல் கார்டு’ என்றே அழைக்கிறோம். ஆம்! நெடும் கிடையான உடலை தரையில் நடத்திசெல்ல அல்லது கால்களால் நடந்து செல்ல பாதுகாவலனாக இருப்பது ஸ்பைனல் கார்டு. அப்படிப்பட்ட முதுகுத்தண்டில் டிஸ்குகள் தேய்மானம் என்பது தனி மனிதவாழ்க்கையை சவாலாக முடக்கி விடுகிறது. போதிய உடற்பயிற்சி இன்மையால் முதுகுத்தண்டானது, முதுமைக் காரணத்துக்கு முன்பாகவே, தனது செயல்திறனை இழக்க ஆரம்பிக்கிறது. மேலும் இடும்பு எழும்பின், பந்து கின்ன மூட்டுக்களும், பாத எழும்புகளும், தோல்பட்டை மூட்டுக்களும், கழுத்து எழும்பும் பாதிக்கப்படுவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.
7. ஏழாவது மூக்கியமான ரகசியம் உங்கள் முகப்பொலிவு. உங்கள் இயல்பான தோற்றமானது உங்கள் உணவுமுறை, உங்கள் உளநலம், உங்கள் உடல்நலம் இவற்றின் விளைவாக உங்களுக்கு கிடைக்கும் ‘சஞ்சலமற்ற உறக்கம்’ ஆகியவற்றைப் பொறுத்து காண்போரை வசீகரிக்கும். ஆனால் தொடர்ச்சியான உடற்பயிற்சி உங்கள் தோற்றப்பொலிவை மட்டுமல்ல, முகப்பொலிவை தனித்து, தன்னம்பிக்கை மிக்க முகமாக, உங்கள் கண்களில் தனித்த ஒளியை உருவாகும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. முக்கியமாக உடற்பயிற்சி உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.