/////////////////////////////////
இன்றைய காலக்கட்டத்தில் பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதி ல்
பெரும்பங்குவகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இதோ கீழே உங்கள் பார்வைக்குஸ
கர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவைஸ
1) டிஸ்மெனோரியா (dysmenorrhea)
– மாதவிலக்குப் பிடிப்பு
2) பைப்ராய்ட்ஸ்
-கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்த லாம்.
3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்
-பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸா ல்’ (human papilloma virus) ஏற்படலாம்.
4) எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis)
– கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வ து. சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.
5) புரோலாப்ஸ்? (Prolapsed Uterus)
– பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.
6) எக்டோபிக் கருவுறுதல் (Ectopic pregnancy)
– கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக் குழாய் களில் கரு வளர்வது.
7) ஹிஸ்டீரக்டாமி- Hysterectomy (கர்ப்பப்பையை நீக்குவது)
-கடுமையான, குணப்படுத்தமுடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப்புற்று நோய், எண்டோமெட்ரி யோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கி ன்போது இது பரிந்துரைக்கப்படு கிறது.
8) கர்ப்பப்பை புற்றுநோய் (uterus cancer)
– மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் 90% குண ப்படுத்திவிட முடியும். ஒழுங்க ற்ற ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறி யாகும்