..............................
நீங்கள் இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் நண்பர்களோடு தொலைதூர பயணத்திற்கு திட்டமிட்டுளீர்கள், ஆனால் உங்களுக்கு மாதவிலக்கு அந்த நாட்களில் வருகிறதால் பயணம் வசதியாக இருக்காதென்று வருந்துகிறீர்கள், சரிதானே?.. ஆம், பெண்களாகிய நாம் பல நேரங்களில் இது போல மாதவிடாய் முன்கூட்டியே முடிந்து நாம் கலந்து கொள்ளப்போகும் விழாக்கள், பயணங்கள் போன்ற மகிழ்ச்சையான தருணங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறோம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு மிகவும் வலியுடையதாகவும் அசுத்தமாக உணரவைப்பதாகவும் இருக்கின்றது.
அதனால் பெரும்பாலான பெண்கள் விரும்புவது என்னவெனில், திருமணம் பிறந்தநாள் விழாக்கள் முகாம்கள் மற்றும் தொலைதூர பயணங்கள் போன்றவற்றில் தாங்கள் கலந்து கொள்ளும்போது மாதவிலக்கு தொல்லையின்றி மகிழ்ச்சியாய் கழிக்க விரும்புகிறார்கள். இருப்பினும் உண்மை என்னவெனில், பெண்களின் மாதவிலக்கு சுழற்சி இயற்கையானது, மேலும் அந்த சுழற்சி காலத்திற்கு முன் மாதவிலக்கு பெறுவது இயலாது. முன்கூட்டிய மாதவிடாய் என்பது இயலாத ஒன்று என்றே நம்புகிறார்கள். ஏற்கனவே நாம் அறிந்தது போல் பெண்கள் பருவமடைந்த நாளில் இருந்து இறுதி மாதவிடாய் வரை அவர்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சிக்கு ஆட்படுகிறார்கள். பொதுவாக பெண்கள் சராசரியாக 13 வயதில் பருவமடைந்து, 50 வயதில் இறுதி மாதவிடாய் ஏற்பட்டு, அதன்பின் மாதவிலக்கு சுழற்சி நிற்கும். ஒவ்வொரு மாதமும் கருவுறாத முட்டையின் வேதியியல் மாற்றத்தால் கருப்பை அகலம் சுருங்கி இரத்தத்தை பிறப்புறுப்பு வழியாக வெளியேற்றும் சுழற்சி முறையே மாதவிடாய் ஆகும். பொதுவாக ஆரோக்கியமான பெண்களுக்கு 5-6 நாட்கள் இந்த மாதவிலக்கு நீடிக்கும், இதனால் இந்த மாதவிலக்கு நாட்களில் பெண்கள் மேற்கூறிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாமல் வருந்துகிறார்கள்.
உதாரணமாக இந்த மாதவிலக்கு நாட்களில் பெண்கள் அவர்களது உடலால் சோர்வடைந்து கடினமான வேலைகள் செய்யமுடியாமல், சிலவித நாகரிக உடைகளை அணியமுடியாமல், மற்றும் உடலுறவு கொள்ள இயலாமல் என பல்வேறு இன்னல்களால் அவதிப்படுகிறார்கள். அதனால் மேற்கூறிய விழாக்கள் பயணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மாதவிலக்கு நாட்களில் இருப்பின் அவர்களது மாதவிலக்கு சுழற்சியை துரிதப்படுத்தி முன்கூட்டிய மாதவிலக்கு பெற நினைக்கிறார்கள். இதனால் மேற்கூறிய சந்தோச நிகழ்வுகளின் போது மாதவிலக்கு ஒரு தொல்லையாக இல்லாமலிருக்க விரும்புகிறார்கள். மாதவிலக்கு முன்கூட்டியே நடைபெற நம்மால் ஏதும் செய்ய இயலாது என்று எண்ணி மருத்துவர்களை அணுகுவதால், மருத்துவர்கள் விரைவான மாதவிடாய் சுழற்சிக்கு ஹார்மோன் மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த மாத்திரைகளால் நீங்கள் எண்ணற்ற எதிர்மறையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் மேலும் உங்கள் ஆரோக்கியம் கெடுகிறது. அதனால் நீங்கள் முன்கூட்டிய மாதவிலக்கு பெற, இயற்கையான தீர்வு இதோ உங்களுக்காக..
தேவையான பொருட்கள் எள் விதைகள் – 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் (பொடித்தது) – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: · கூறப்பட்ட அளவில் மேற்கூறிய பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் · நன்றாக விழுது போன்ற பக்குவத்திற்கு வரும் வரை கலக்கவும் · நீங்கள் திட்டமிட்டதற்கு ஒருவாரம் முன்னர் இருந்து இந்த கலவையை ஒருவாரம் முன்னர் இருந்து காலையும் மாலையும் உட்கொள்ளுங்கள்.
நன்மைகள் : எள் வெல்லம் தேன் கலந்த இயற்கையான இந்த கலவை உங்கள் உடலின் வெப்பத்தை அதிகரிக்க செய்து இயற்கையான சுழற்சிக்கு முன்னரே உங்கள் கருப்பை சுருங்குவதை தூண்டுகிறது, இது முன்கூட்டிய மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது.
மற்ற காரணங்கள் : இந்த வீட்டு மருத்துவத்தை சரியான முறையில் செய்வதால் முன்கூட்டிய மாதவிலக்கு பெறுவது எளிதாகிறது. மேலும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டியது என்னவென்றால் மாதவிலக்கு தாமதமாவதற்கு கருவுற்றிருத்தல், சீரற்ற ஹார்மோன் பிரச்னைகளான பி. சி. ஓ. எஸ், மன அழுத்தம் போன்றவைகளும் காரணமாக இருக்கலாம். இயற்கை முறையாகவே இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சியை துரிதப்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இந்த இயற்கை முறை மாதவிலக்கு துரிதப்படுத்தலை எப்போதாவது பயன்படுத்துங்கள்.