உங்கள் விந்தில் ஆண்மை உள்ளதா? பரிசோதனை செய்வது எப்படி!
11 Aug,2017
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்த உடன் அத்தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. கரு உண்டாவதற்கு முதல் ஆணின் விந்தணுவை பரிசோதனை செய்வது அவசியம்.
இந்த பரிசோதனையின் இறுதியில் ஒரு நபர் கருத்தரிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் சொல்லிவிட முடியும்.
எப்படி பரிசோதனை மேற்கொள்ளலாம்:
இந்த பரிசோதனைக்கு 2 நாட்களுக்கு முன்னரே மனைவியுடன் தாம்பத்திய உறவை நிறுத்திவிட வேண்டும். பரிசோதனை செய்வதற்கு 2 மணி நேரத்திற்குள் விந்துவை ஒரு அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்துவிட வேண்டும்.
அதே நேரத்தில் குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே விழுந்துவிட்டால் அது பற்றிய விவரத்தை டாக்டரிடம் தெரிவிப்பது மிக முக்கியம்.
பரிசோதனை செய்பவை:
விந்தணுக்களின் எண்ணிக்கை, ஊர்ந்து செல்லும் வேகம், இயல்பான உயிரணுக்கள், பாக்டீரியா போன்றவை. ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள் 2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் சுமார் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் 2 கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனையாகும். சில ஆண்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு குறைந்தது 30 லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்கும் தகுதியை பெற்றுவிடுவர்.
விந்தணுவில் 40 சதவீத அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருக்கும் பட்சத்தில் அது குறையுள்ள அணுக்கள் என்று அர்த்தமாகும்.
உதாரணத்திற்கு தகாத உறவால் விந்தணுவில் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவை ஒட்டியிருக்கலாம் அதன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
இது பரிசோதனை முடிவில் டாக்டர் கண்டு பிடித்தால் அதற்கேற்ப சிகிச்சையை அளித்து விந்தணுவின் வேகம் மற்றும் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனை அலட்சியமாக நினைக்க வேண்டாம். குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்வது அவசியம்