lllllllllllllllllllllll
உடலுறவில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னர் ஏன் சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டாலும் விந்தணு வெளியேற மிக நீண்ட நேரம் ஆகிறது, ஏன் சிலருக்கு உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும்.
இது போன்ற கேள்விகளை பிறரிடம் கேட்டு விடை பெறவும் கடினமாக இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
அழகில்லை என கருதுவது
நீங்கள் உங்களது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கூட, மனைவி அழகாக இல்லை என்று கருதினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். உலகில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள் தான். எனவே அழகு அழகில்லை என்பதை தவிர்த்து, மனதை நேசிக்க தொடங்குங்கள்.
2. தூக்கமின்மை
தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான அளவு தூக்கம் உங்களுக்கு மிகவும் அவசியம். எனவே குறிப்பிட்ட அளவு நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
3. வேறுறொருவர் மீது காதல்
மனதில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவுகொள்வது சாத்தியமானதல்ல. எனவே உங்கள் மனதில் வேறொருவர் மீது காதல் இருந்தால், அதனை மறந்துவிட்டு உங்கள் மனைவியை நேசிக்க தொடங்குங்கள். இதுவே நல்ல உறவின் அடையாளம்.
4. குடும்ப பிரச்சனை
குடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உடலுறவில் உள்ள நாட்டத்தை குறைக்கும்.
5. குறைபாடு இருப்பதாக கருதுவது
உங்களுக்கு உடல் ரீதியாக குறைப்பாடு இருப்பதாகவும், உங்களது ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று நினைத்தும் கவலைப்படுவது உடலுறவில் உங்களுக்கு இருக்கும் நாட்டத்தையும், திருப்தியையும் குறைக்கும்.
6. மன காயங்கள்
மனதில் இருக்கும் நீண்ட நாள் காயங்கள், என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே உங்களது முகம் எப்போதும் சோகமாகவே காட்சியளிப்பது போன்றவற்றிற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் இதே மன குறையுடன் இருப்பீர்கள்.
7. காமம் தவறு
சிறு வயது முதலாக காமம் தவறானது என்ற சிந்தனைகளும், உடலுறவு பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதும் உங்களது உடலுறவு இன்பத்தை பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணமாகும்.
8. பயம்
உங்களது துணையை திருப்திப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் இருவருக்குமே சுகம் கிடைக்காது. எனவே இந்த பயத்தை மனதில் இருந்து ஒதுக்க வேண்டியது அவசியம்.