பிளாஸ்டிக் முட்டை உள்ளதா? கண்டுபிடிப்பது எப்படி?
28 Jul,2017
பிளாஸ்டிக் அரிசி போன்று பிளாஸ்டிக் முட்டையும் உள்ளது என்று நம்மில் பலருக்கும் பல குழப்பங்கள் உள்ளது.
ஆனால் உண்மையில் பிளாஸ்டிக் முட்டை என்பது இல்லை.
தட்பவெப்ப நிலையின் மாற்றம் காரணமாகவும், கோழிகளுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான தீவனம் காரணமாகவும் கோழி முட்டைகளின் தன்மை மாறுகிறது.
இந்த மாற்றத்தினால் கோழியின் முட்டை ரப்பர் தன்மையுடையது போன்று தோற்றமளிக்கிறது. இதை நம்மில் பலர் பிளாஸ்டிக்கில் தயார் செய்த செயற்கை முட்டை என்று புரிந்துக் கொள்கின்றனர்.
ஆனால் உண்மையில் பிளாஸ்டிக் முட்டை என்று ஒன்று கிடையாது. அதை தயாரிக்கவும் முடியாது என்பதே உண்மை.
தரமான முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி?
கலப்படம் இல்லாத உண்மையான கோழியின் முட்டையாக இருந்தால், அது தண்ணீரில் முழுமையாக மூழ்காமல் இருக்கும்.
முட்டையின் கூர்மையான பக்கம் மேலே தூக்கியவாறு காணப்படும். பிளாஸ்டிக் முட்டையானது இதற்கு நேர்மாறாக, தண்ணீரில் போட்டவுடன் மூழ்கிவிடும்.
உண்மையான கோழியின் முட்டைகள் மேலே நீர் கோடுகள், ரத்த நாளங்கள் நன்றாக வெளியே தெரியும்.
கோழி முட்டையை வேகவைத்து, உரிக்கும் போது, மெல்லிய வெள்ளைத்தோல் முதலில் வரும். காற்று குமிழ்கள் வெளிப்படும். முட்டையின் கீழ் பகுதியில் சிறு பள்ளம் போன்று இருக்கும்.