வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்: 5 நாட்கள் இதை சாப்பிட்டாலே போதும்
25 Jul,2017
பற்கள் சுத்தமின்மை, ஈறுகளின் பாதிப்பு மற்றும் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் போன்றவை காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
5 நாட்கள் சாப்பிட வேண்டிய பொருள் எது?
கேரட்டின் சாறு எடுத்து 5 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். ஆனால் இதில் சர்க்கரை அல்லது உப்பை கலக்க கூடாது. இதனால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
பற்களில் உள்ள கறையை போக்குவது எப்படி?
கேரட்டை அடிக்கடி பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால், பற்களில் உள்ள கறைகள் போய்விடும்.
வாய் துர்நாற்றத்தை போக்கும் மற்றொரு வழி?
ஒரு பாட்டிலில் தேன், பட்டை, எலுமிச்சை சாறு, வெதுவெதுப்பான நீர், சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாட்டிலில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த நீரை கொண்டு ஒரு நாளைக்கு 10 முறைகள் வாயினை கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படாது.