கெட்ட கொழுப்பு... உடல் எடை குறையும்: 6 மாதம் பின்பற்றினால் போதும்
24 Jul,2017
நாடி சுத்தி எனும் பயிற்சியை தொடர்ந்து 6 மாதங்கள் முறையாக பின்பற்றி வந்தால், உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகுவதுடன், கெட்டக் கொழுப்பு மற்றும் உடல் எடையைக் குறைக்கலாம்.
நாடி சுத்து பயிற்சியை செய்வது எப்படி?
முதலில் விரிப்பில் பத்மாசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, இடது கை சின் முத்திரை, வலது கை நாசிகா முத்திரையில் வைக்க வேண்டும்.
பின் வலது பெருவிரலைக் கொண்டு வலது நாசியை அடைத்து, மூச்சை மெதுவாக ஆழமாக முடியும் அளவிற்கு இடது நாசி வழியாக உள்ளிழுத்து, வலது நாசியை விட்டு, இடது நாசியை வலது கை சுண்டு விரலாலும் மோதிர விரலாலும் அடைக்க வேண்டும்.
அதன் பின் வலது நாசியின் மூலம் மூச்சை வெளியேற்றி, மீண்டும் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து, இடது நாசியின் மூலம் வெளியேற்ற வேண்டும்.
பயன்கள்
உடல் உளுறுப்புகளின் இயக்கம் சீராகும்.
கெட்டக் கொழுப்புகள் கரையும்.
உடல் எடை குறையும்.
குறிப்பு
நாடி சுத்தி பயிற்சியை பின்பற்றும் போது, இரண்டு பக்கங்களிலும் மூச்சை உள்ளிழுத்தலும், வெளியிடலும் போது, ஒரே கால அளவினதாக இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் 9 சுற்றுகளாக தொடங்கி, பின் 30 சுற்றுகள் வரை செய்யலாம். இந்த பயிற்சியை அதிகாலை செய்வது மிகவும் நல்லது.