தாங்க முடியாத உடல் வலியா? உடனடி தீர்வு இதோ
24 Jul,2017
உடலில் ஏற்படும் வலிகளை இயற்கையான முறையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் தீர்க்கலாம்.
ஆனால் நோயினால் ஏற்பட்ட வலியாக இருந்தாலோ அல்லது எலும்புமுறிவினால் ஏற்படும் வலியாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது மிகவும் நல்லது.
பட்டை
சிறிது பட்டையை வாயில் எடுத்து மென்றால், பல்வலி குறையும். அதுவே 1 டம்பளர் நீரில் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி குறையும். ஆனால் இம்முறையை குழந்தைகளுக்கு பயன்படுத்துக் கூடாது.
பூண்டு
தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு உதவும் பூண்டை தொடர்ந்து பயன்படுத்தினால், உதடு மற்றும் நாக்கில் எரிச்சல் ஏற்படும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இதனை பயன்படுத்தக் கூடாது.
மஞ்சள்
வலியை போக்கும் நிவாரணியாக பயன்படும் மஞ்சள், நம் உடலில் உள்ள திசுக்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்ப்பட்டிருந்தால் அதை சரி செய்து, ஜீரணக்கோளாறு, அல்சர், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உதவுகிறது.
கிராம்பு
மசாலாப் பொருட்களில் ஒன்றான கிராம்பு, திடீர் மயக்கம், மற்றும் சளிக்கு நல்ல தீர்வை அளிப்பதுடன், தலைவலி, ஆர்த்தரைட்டீஸ், பல்வலி உட்பட பல வலிகளுக்கு தீர்வாகிறது.
இஞ்சி
மூட்டு மற்றும் தசை வலிகளுக்கு இஞ்சி சாற்றை பயன்படுத்தலாம். மேலும் வீக்கம் உள்ள இடத்தில் இஞ்சிச் சாற்றை தடவினால் சிறிது நேரத்தில் வீக்கம் குறையும். ஆனால் குறைந்த அளவு இஞ்சிச் சாற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நீர்
தசை வலி மற்றும் ஆர்த்ரைட்டீஸின் சிலவகை பிரச்சனைகளுக்கும் வெதுவெதுப்பான தண்ணீர் நல்ல பலனை தருகிறது. வெந்நீரில் சில சொட்டு எசன்ஷியல் ஆயில் கலந்தும் பயன்படுத்தலாம்.
குறிப்பு
இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால், உடனே சிறிய நடைப்பயிற்சி ஒன்றை செய்ய வேண்டும்.