உங்கள் உடலில் போதியளவு நீர் இல்லை என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்
09 Jul,2017
உடலில் போதியளவு நீரின் அளவு இல்லாததை தான் நீர் வறட்சி என கூறுகிறோம். நீர்சத்து குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
உடலில் நீர் சத்து / அளவு குறைந்தால் இரத்தத்தின் அடர்த்தி குறையும்.
இதனால், இரத்த ஓட்டம் தடைப்படும், உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும், செரிமான சிக்கல்கள் ஏற்படும்.
உடலில் நீர் சத்து குறைவாக இருக்கிறது என்பதை எப்படி கண்டறியலாம்?
சில அறிகுறிகளை வைத்து உங்கள் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டுள்ளதை அறியலாம்.
மேலும், நீங்கள் சரியான அளவு நீர் குடித்து வருகிறீர்கள் என்பதையும் சில அறிகுறிகளை வைத்து அறியலாம்.
முகப்பரு:
உங்கள் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டுள்ளது அல்லது போதுயளவு நீர்சத்து இல்லை எனில், முகப்பரு அதிகரிக்க ஆரம்பிக்கும். நீங்கள் போதியளவு நீர் பருகினாலே உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு முகப்பரு ஏற்படுவதை குறைக்க முடியும்.
வேனிற்கட்டி / வெங்குரு (Sun Burn)
உடலில் போதியளவு நீர் இல்லையெனில், சூரிய கதிர் / வெப்பம் அதிகமாக வெளிப்படும் இடத்தில் அதிக நேரம் இருந்தால் வெங்குரு / வேனிற்கட்டி உருவாகும். நீங்கள் சரியான அளவு தண்ணீர் பருக ஆரம்பித்தால் தானாக இந்த பிரச்சனை குறைந்துவிடும்.
கண்:
உடலில் நீர் வறட்சி ஏற்பட்டால், கண்களுக்கு கீழே குழி போல (Eye Bag) விழ ஆரம்பித்துவிடும்.
சிவந்த மூக்கு:
மூக்கின் சருமம் வறட்சியாக மாறும். எரிச்சல் உணர்வு இருக்கும். உங்கள் உடலில் போதியளவு நீர் சத்து இல்லை என்பதை வெளிகாட்டும் அறிகுறி தான் இது.
ஹேங்கோவர்:
உங்கள் உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால், ஆல்கஹால் போதை அதிகமாக இருக்கும். நீங்கள் சரியான அளவு நீர் அன்றாடம் குடித்து வந்தாலே இதை தவிர்க்க முடியும்.
உச்சந்தலை:
நீங்கள் சரியான அளவு நீர் குடித்து வருகிறீர்கள் என்பதற்கான முதல் அறிகுறி. உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும். அரிப்பு, எரிச்சல், பொடுகு, என எந்த தொல்லையும் இருக்காது.
முடி, நகம்:
உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால் உங்கள் முடி மற்றும் நகங்கள் வலிமையாக இருக்கும். முடி உதிர்தல், உடைத்தல் பிரச்சனைகள் இருக்காது. (முடி உதிர்வது மரபணு சார்ந்தும் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன)
பிரகாசமான பார்வை:
நீர்வறட்சி ஏற்படுவதால் பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட் அளவில் குறைபாடு ஏற்பட்டு கண் ஆரோக்கியம் குறைகிறது. எனவே, சரியான அளவு தண்ணீர் ககுடித்து வந்தால், கண்கள் பளிச்சென ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் எடை:
உணவருந்துவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு 2 கப் நீர் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க முடியும்.
சருமம்:
நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் சருமம் மிருதுவாகவும், சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்