6 வகை உடல் பருமன்: குறைக்கும் அற்புத வழி!
20 Jun,2017
ஆரோக்கியமான உடல் நலத்துக்கு மிக அவசியமானது அளவான உடல் எடை. உடல் பருமன் அதிகரித்தால், அது பல்வேறு நோய்கள் ஏற்பட அடிப்படையாக அமையும்.
பிறக்கும் தருணத்தில் இருந்து சிறிது காலம் வரை, ஒருவரின் பரம்பரை வழியில், மனிதர்கள் 3 வகை உடல் அமைப்பை பெறுகிறார்கள்.
இந்த அடிப்படையின் படி, உடல் அமைப்புகளை முதலில் புரிந்து கொண்டால், உடல் எடையை குறைக்கலாம். அந்த உடல் எடையின் மூன்று வகைகள் என்ன?
மிக மெலிந்த உடல்வாகு (Ectomorph)
இந்த வகையினர் பார்ப்பதற்கு ஒடிந்து, முறிந்து விடுவது போல இருப்பார்கள். சிறிய மெல்லிய எலும்புகள், எலும்போடு ஒட்டிய தசைகள் என்று சற்று வலிமை குறைந்து காணப்படுவார்கள்.
கட்டுக்கோப்பான உடல்வாகு (Mesomorph)
இந்த வகையினர் உடற்பயிற்சி செய்யாமலே ஒரு கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருப்பார்கள். இவர்களிடம் சராசரியான ஜீரண சக்தி, எலும்பு மற்றும் தசை அமைப்புகள் இருக்கும்.
குண்டான உடல்வாகு (Endomorph)
இந்த வகையினர் குண்டான தோற்றத்தில் இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். இவர்களில் அதிக எடை மற்றும் நல்ல வலிமை கொண்டவர்கள், நல்ல சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தடித்த எலும்புகள் மற்றும் தசைகளை இருக்கும்.
உடல் பருமனின் 6 வகைகள் என்ன?
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளம் வயதினர்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழந்த நடுத்தர வயதினர்.
மகிழ்ச்சியான வயோதிகர்கள்.
ஆரோக்கியம் மிகுந்த இளம்பெண்கள்.
அதிக பணவசதி படைத்தவர்கள்.
உடல் ஆரோக்கியம் மோசமானவர்கள்.
இளம் வயதினர்கள், குடிப்பழக்கத்தை நிறுத்துவது அல்லது குறைத்துக் கொண்டால், அதிக உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கலாம்.
அதிக கவலை, மன உளைச்சல், ஏராளமான எதிர்பார்ப்புகள், அளவுக்கு அதிகமான பேராசை, அதிக பணம் இருக்கிறது என்ற அகம்பாவம் போன்ற காரணங்களினால், தங்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளாத அனைவருக்கும் நல்ல உடற்பயிற்சியோடு, மனோதத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உடல் எடையை குறைக்கும் அற்புதவழி என்ன?
உடல் பருமன் பிரச்சனையால் அவதிபடுபவர்கள், தினமும் நல்ல உடற்பயிற்சியோடு, உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது, உடல் பருமனை குறைக்கும் ஒரு அற்புதமான வழியாகும்.