உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மிகவும் சிறந்த முறையாகும்
26 Mar,2017
/////////////////////////////
உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் இருந்தாலும் அதில் அக்குபஞ்சர் மிகவும் சிறந்த முறையாகும்.
இந்த சிகிச்சை முறையின் மூலம் நமது உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வைக் காணலாம்.
காதில் அழுத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
•படத்தில் காட்டியவாறு காதின் முதல் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுப்பதால், முதுகு மற்றும் தோள்பட்டையில் உள்ள வலிகள் நீங்கி, நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
•படத்தில் காட்டியவாறு காதின் இரண்டாம் பகுதியில் துணி கிளிப் கொண்டு அழுத்தம் கொடுத்தால், உடலினுள் உள்ள வலி மற்றும் அசௌகரியம் நீங்கி, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
•படத்தில் காட்டியுள்ள மூன்றாம் பகுதி மூட்டுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இவ்விடத்தில் அழுத்தம் கொடுப்பதால், மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.
•படத்தில் காட்டியுள்ள நான்காம் பகுதி சைனஸ் மற்றும் தொண்டையுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், மூக்கடைப்பு பிரச்சனையால் ஏற்படும் தூக்கமின்மை, சளி மற்றும் சைனஸ் சுரப்பியின் வீக்கம் போன்றவை தடுக்கப்படும்.
•படத்தில் காட்டியுள்ள ஐந்தாம் பகுதியி செரிமான மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இவ்விடத்தில் அழுத்தம் கொடுத்தால், செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
•படத்தில் குறிப்பிட்டுள்ள 6 ஆம் புள்ளியானது, தலை மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இவ்விடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.