குடலின் ஒட்டுண்ணிகளை அழிக்க அருமையான வழிகள்
23 Feb,2017
குடலின் ஒட்டுண்ணிகளை அழிக்க அருமையான வழிகள்
ஜியர்டயாஸிஸ் என்ற ஒரு குடல் தொற்று நோயானது, ஜியார்டியா லம்ப்லியா எனும் ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகிறது.
இந்த குடல் ஒட்டுண்ணிகள் தாக்கத்தினால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் குறைந்து செரிமானப் பிரச்சனை, வயிற்றுப்போக்கு, எடை குறைவு, வயிற்று உப்பிசம் மற்றும் அடிவயிற்று வலி இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே இயற்கையான வழியில் குடலின் ஒட்டுண்ணிகளை அழிக்க சுப்பரான டிப்ஸ் இதோ!
பூண்டு
தினமும் ஒரு பூண்டை சாப்பிட்டு வந்தால், அது நமது உடலின் இயக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை தடுத்து, வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது.
தயிர்
குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை எதிர்த்து போராடும் நல்ல பாக்டீரியாக்கள் புளித்த தயிரில் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே அவ்வப்போது புளித்த தயிரை சாப்பிடுவது மிகவும் நல்லது.
தண்ணீர்
வயிற்றில் ஒட்டுண்ணிகள் தாக்கத்தின் அறிகுறிகள் அதிகமாக தென்பட்டால், நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதனால் விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் உட்பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், தொற்றிலிருந்து விடுபடலாம்.
தேங்காய்
தேங்காயில் லாரிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. எனவே இது வைரஸ் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இதனால் தேங்காயை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.