20 நொடிகளில் சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா?
தற்போது சைனஸ் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். நம் மூக்கைச் சுற்றி 4 ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இவற்றிற்கு பெயர் தான் சைனஸ். இந்த காற்றுப் பைகள் நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு சரியான வெப்பத்துடன் காற்றை அனுப்பும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டாலும், அதனால் பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும்
உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க...
சைனஸ் காற்றுப் பைகள் பாதிக்கப்படுவற்கு நம் மோசமான சுற்றுச்சூழல், ஒவ்வாமை, மோசமான ஆரோக்கியம் போன்றவை தான் காரணம். இதனால் ஒருவர் சுவாசிக்கும் போது, கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்து, அங்குள்ள சளிச் சவ்வு வீக்கமடையும். இது அப்படியே நீடிக்கும் போது, ஒருவருக்கு அடிக்கடி சளி, மூக்கு ஒழுகல் போன்றவை ஏற்பட்டு, அதனால் மூக்கை உறிஞ்சிக் கொண்டே இருக்கக்கூடும்.
மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
இப்படி ஒருவர் எப்போதும் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தால், அதனால் நிலைமை மேலும் மோசமாகும். எனவே சைனஸ் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்ன, 20 நொடிகளில் நிவாரணம் காண்பது எப்படி மற்றும் அதற்கான நாட்டு மருந்து என்ன என்பது பற்றி தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்
சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள்
சைனஸ் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்றவை இருக்கும். மேலும் கண்களுக்கு கீழே, கன்னம், நெற்றி போன்ற இடங்களில் தொட்டால் வலி ஏற்படும். பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும். முக்கியமாக துர்நாற்றமிக்க சளி வெளியேறும்
சைனஸ் அழுத்தப் புள்ளி
சைனஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, நாக்கை வாயின் மேல் பகுதியில் ஒட்டிக் கொண்டு, படத்தில் காட்டப்பட்டுள்ள இரு புருவங்களுகிடையே உள்ள சைனஸ் அழுத்தப்புள்ளியில் பெருவிரலால் 20 நொடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சைனஸ் பிரச்சனையில் இருந்து சற்று உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சைனஸ் பிரச்சனைக்கான அற்புத பொருள்
சைனஸ் பிரச்சனையை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். சைனஸ் பிரச்சனைக்கு எத்தனை மருந்துகள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவற்றால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்குமே தவிர, நிரந்தர தீர்வல்ல.
ஆப்பிள் சீடர் வினிகர் செய்யும் மாயங்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் கொண்டு சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காணும் போது, சைனஸ் வலி வேகமாக குறைவதோடு, அங்குள்ள திசுக்கள் ஆரோக்கியமாக்கப்படும். ஏனெனில் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால், அதனை சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரியும் போது, பச்சையாக உட்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, வேறுசில நன்மைகளும் கிடைக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப்பெறும்
முக்கியமாக சைனஸ் பிரச்சனைக்கு ஆப்பிள் சீடர் வினிகரை எடுக்கும் போது, சைனஸ் பிரச்சனை நீங்குவதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் தான் மேம்படும். இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை தடுக்கப்படும்.
ஆப்பிள் சீடர் வினிகரை எப்படி எடுப்பது?
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பானம் ஒன்றைத் தயாரித்துப் பருகுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1/2 கப்
ஆப்பிள் சீடர் வினிகர் - 1/4 கப்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
தயாரிக்கும் முறை:
முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் அதில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அத்துடன் தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், பானம் தயார். இந்த பானத்தை சைனஸ் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வரை பருகுங்கள்.
குறிப்பு
இந்த பானத்தை சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், நிலைமை மோசமாவதைத் தடுத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்