இந்த அற்புத பொருள் தைராய்டு பிரச்சனையைப் போக்கும் என்பது தெரியுமா?
06 Jan,2017
இந்த அற்புத பொருள் தைராய்டு பிரச்சனையைப் போக்கும் என்பது தெரியுமா?
தற்போது தைராய்டு பிரச்சனையால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
அதுவும் நம் வீட்டின் சமையலறையில் உள்ள சிவப்பு வெங்காயத்தைக் கொண்டே தைராய்டு பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் காண முடியும் என்று நிபுணர்களும் கூறுகின்றனர். இப்போது இந்த சிவப்பு வெங்காயம் எப்படி தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு காண உதவுகிறது என்றும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் காணலாம்.
கண்டுபிடித்தவர்
தைராய்டை சரிசெய்ய சிவப்பு வெங்காய முறையைக் கண்டுபிடித்தவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள டாக்டர் இகோர் ஜாஸ்கின் என்பவராவார். இவர் தான் முதன் முதலில் தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனைக்கு சிவப்பு வெங்காயத்தைப் பயன்படுத்தி, நிவாரணம் கிடைத்திருப்பதை கண்டறிந்தவர்.
பயன்படுத்தும் முறை #1
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதிலிருந்து வெளிவரும் சாற்றினை கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
பயன்படுத்தும் முறை #2
பின் அதைக் கழுவாமல், அப்படியே இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தான் கழுவ வேண்டும்.
நன்மைகள்
இந்த முறையால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அதில் சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களும் உற்பத்தி செய்யப்படும்.
பொலிவான சருமம்
வெங்காயம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களையும் அழிக்கும்.