உலக மூளை முடக்குவாத நாள் - 05 ஐப்பசி 2016 - மூளை முடக்குவாதம் பற்றி அறிவோம்
விஞ்ஞானத்தின் எல்லையைத் தொட்டுவிட்டோமென்று கூறிக்கொண்டிருக்கும் இவ் உலகில் இவ்வாறுதான் பிறப்பு நிகழும் என்பதையோ அல்லது எவ்வாறு இறக்கப்போகிறொமென்பதையோ முன்கூட்டிக் கூறுவார் எவருமில்லை. பிறப்பும் இறப்பும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறக்கின்ற போது வலுவிழப்புடன் பிறப்பவர்களும், பிறந்துவிட்ட பின்னர் வலுவிழப்புக்குள்ளாகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீட்டின் படி உலகில் 15% மக்கள் வலுவிழப்புடனானவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நோக்கினால் ஏறத்தாழ 65 கோடி மக்கள் இந்த நிலையில் உள்ளார்கள். மேலும்இலங்கையில் 1000 பிறப்புக்கள் நடைபெறும் போது இதில் 12 தொடக்கம் 15 வரையான பிள்ளைகள் மூளைமுடக்குவாதமுள்ள பிள்ளைகளாகப் பிறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் இவ்வாறான வலுவிழப்புடனானவர்கள் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
விஞ்ஞானத்தின் எல்லையைத் தொட்டுவிட்டோமென்று கூறிக்கொண்டிருக்கும் இவ் உலகில் இவ்வாறுதான் பிறப்பு நிகழும் என்பதையோ அல்லது எவ்வாறு இறக்கப்போகிறொமென்பதையோ முன்கூட்டிக் கூறுவார் எவருமில்லை. பிறப்பும் இறப்பும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறக்கின்ற போது வலுவிழப்புடன் பிறப்பவர்களும், பிறந்துவிட்ட பின்னர் வலுவிழப்புக்குள்ளாகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீட்டின் படி உலகில் 15% மக்கள் வலுவிழப்புடனானவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நோக்கினால் ஏறத்தாழ 65 கோடி மக்கள் இந்த நிலையில் உள்ளார்கள். மேலும்இலங்கையில் 1000 பிறப்புக்கள் நடைபெறும் போது இதில் 12 தொடக்கம் 15 வரையான பிள்ளைகள் மூளைமுடக்குவாதமுள்ள பிள்ளைகளாகப் பிறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் இவ்வாறான வலுவிழப்புடனானவர்கள் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
வலுவிழப்பு என்றால் என்ன ?
நிரந்தரமான குறைபாட்டுடன் செயற்பாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட நிலை காணப்பட்டுஅதனால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருக்குமாயின் அதனை வலுவிழப்பு என அடையாளப்படுத்தமுடியும். இந்த நிலையில் காணப்படுபவர்களை வலுவிழப்புடனான நபர்கள் (Persons with Disability) என்கின்றோம். இருப்பினும் அவர்களை மாற்றுத்திறனாளிகள், மாற்றாற்றல் உள்ளோர், மாற்றுவலுவுள்ளோர், விசேட தேவைகளுக்குட்பட்டோர் என பலவாறாக சமுகங்களில் அழைக்கின்றார்கள்.
மூளை முடக்குவாதம் என்றால் என்ன ?
மூளையில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக மூளையினால் கட்டுப்படுத்தப்படும் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகின்றது. அத்துடன், பாதிக்கப்பட்ட மூளையின் தொழிற்பாடுகள் செயலிழக்கும் போது அது மூளை முடக்குவாதம் எனப்படும். பொதுவாக மூளையின் சில பகுதிகளே பாதிக்கப்படுகின்றன.
மூளையில் பாதிப்பு ஏற்படின் அதனை சரி செய்ய முடியாது. எனினும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பின் அல்லது தாக்கத்தின் அளவினை மாற்ற முடியும். அத்துடன், பாதிக்கப்படாத எஞ்சிய செயற்படுநிலையிலுள்ள மூளையின் பகுதியைக் கொண்டு வழமையான செயற்பாடுகளை செய்வதற்கு பயிற்சியளிக்கமுடியும். பெற்றோர் உரிய முறையில் கவனம் எடுத்து பராமரிக்கும் போதும் உரிய சிகிச்சை முறையினை முறையாக தொடர்ந்து வழங்கும் போதும், பிள்ளையின் செயற்பாடுகளை முன்னேற்ற முடியும்.
மூளை முடக்குவாதத்திற்கான காரணிகள்:
பொதுவாக மூளை முடக்குவாதம் தாயின் கருவறையில் இருக்கும் போதும், பிறக்கின்ற போதும், பிறந்த பின் ஏற்படும் நோய்கள், விபத்துகள், போஸாக்கு குறைபாடுகள் மற்றும் தவறான மருந்துப் பாவனை (மது மற்றும் போதை பொருட்கள்) போன்றவற்றினால் ஏற்படுகின்றது.
மூளை முடக்குவாதத்தினை எவ்வாறு இனங்காண முடியும்?
பொதுவாக பிறந்தவுடன் குழந்தை அழுவது தாமதமாதல்,சுவாசிக்க நேரமெடுத்தல்,நிமிர்ந்த நிலையில் காணப்படாமை,குழந்தையின் வளர்ச்சி படிமுறை தாமதமாதல்,பாலூட்டும் போது உறிஞ்சிக்குடிக்க சிரமப்படுதல்,உணவினை மென்று கொள்ள சிரமப்படுதல்,தலையினை கட்டுப்படுத்த முடியாமை,தொடர்பாடல் செய்ய முடியாமை,இருப்பதற்கு, நிற்பதற்கு மற்றும் நடப்பதற்கு சிரமப்படுதல் போன்றவற்றின் மூலம் இணங்காண முடியும்.
மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் முகம்கொடுக்கும் பிரதான தடைகள்
பொதுவாக நடமாடுவதிலும், தொடர்பாடலிலும், நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் இவர்கள் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், இவர்களைப்பற்றி சமூகம் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன் புறக்கணிக்கப்படுவதினாலும் உரிய கல்வி, மருத்துவம், தகவல்கள் மற்றும் ஏனைய சேவைகளை பெற்றுக்கொளவதில் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.
எனினும்,இவர்களுக்கு பொருத்தமான சக்கர நாற்காலி மற்றும் பொருத்தமான உபகரணங்கள், சிகிச்கைகள், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் அணுகும் வசதியினை ஏற்படுத்தும் போது அவர்களால் சுயமாக செயற்பட முடிவதோடு சமூகத்தில் சுய கௌரவத்துடனும் வாழ வழி செய்ய முடியும்.
மூளை முடக்குவாதம் வராமல் தடுப்பதற்கான ஆலோசனைகள்
கர்ப்பகாலத்தில் தேவையற்ற மாத்திரைகள் மற்றும் மது பாவிப்பதை தவிர்த்தல்
* கர்ப்பகாலத்தில் வயிற்றுக்கு இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்தல்
* கர்ப்பகாலத்தில் விபத்து மற்றும் அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாத்தல். * இரத்த உறவு முறை திருமணத்தை தவிர்த்தல்.
* பிள்ளை பிறந்த பின் உரிய காலத்தில் தடுப்பூசி, உரிய மாத்திரைகளைமருத்துவ ஆலோனைக்கு ஏற்ற வகையில் பாவித்தல்
* சிறு வயதில் மூளைக் காச்சல் வராமல் பாதுகாத்தல்
மூளை முடக்குவாதம் ஏற்படினும் உரிய புனர்வாழ்வு சிகிச்சை முறைகளைப் பின்பற்றும் போது அவர்களால் மிகச் சிறப்பாக செயற்பட முடியும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவர்கள் சிறுவயதிலேயே இனங்காணப்பட்டு தகுந்த சிகிச்சைகளையும் ஏனைய வசதிகளையும் பெற்றுக்கொண்டு பெற்றோரதும் சமூகத்தினதும் பராமரிப்பில் வளர்வதுடன் துறைசார் கற்கை மற்றும் கல்வியையும் பெற்றுக்கொண்டு சமூகத்தில் உள்வாங்கப்பட்டு சம அந்தஸ்துடன் வாழ்கிறார்கள்.
உதாரணமாக. “ஸ்டீபன் ஹோக்கின்ஸன்” (உலகப்புகழ் பெற்ற பௌதீகவியலாளர்) போன்றோர் இவ்வாறான மூளைமுடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டபொழுதும் தமது கண்டுபிடிப்புகள் மற்றும் செயற்பாடுகளில் சிறப்புற செயற்பட்டுள்ளனர். நமதுநாட்டிலும் இவ்வாறான செயற்திட்டங்களை வகுத்து இவர்கள் வாழ்வு சிறப்புற ஆவன செய்வது பொருத்தப்பாடானதாகவிருக்கும்.
“ஆரோக்கியமிக்க சமுகத்தை உருவாக்குவோம்”