அலர்ஜி– பூச்சிக்கடி பரவும் கொடிய நோய்கள்

25 Aug,2016
 

             


பூச்சி கடித்தால் அலர்ஜி ஆகும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். நம் ஊரில் எறும்புக் கடிக்கும் தேனி கடிப்பதற்கும் யாரும் பயப்படுவது இல்லை. ஆனால், அமெரிக்காவில் இந்த இரண்டுக்கும் ரொம்பவே பயப்படுகிறார்கள். ‘டெக்சாஸ் ஃபயர் ஆன்ட்’ (Texas fire ant)  எனும் எறும்பும், ‘ஹைமினோப்டெரா’ (Hymenoptera) எனும் தேனியும் கொட்டியதால் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு பலர் இறந்தே போயிருக்கின்றனர். இந்தியாவிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கேரளாவில் ஒரு வகை ‘நெருப்பு எறும்பு’ இருக்கிறது. இது கடித்துவிட்டால், மரணத்தின் வாசல் வரை சென்றுவிட்டுத்தான் திரும்ப வேண்டும். எனவே, பூச்சிக்கடிதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

அலர்ஜி ஆகும் பூச்சிகள்

 


எறும்பு, கொசு, தேனி, குளவி, சிலந்தி, வண்டு, உண்ணி, மணல் ஈ, கரப்பான், பாச்சான், பட்டாம் பூச்சி, வீட்டு ஈ, முடப்பாச்சை போன்ற பூச்சிகள் கடித்தாலும், மேலே பட்டாலும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். பொதுவாக, தேனி வளர்ப்போர், தோட்ட வேலையாட்கள், காட்டில் வேலை செய்வோர், கூப்புத் தொழிலாளிகள், வன அதிகாரிகள், மலைவாழ் மக்கள் போன்றோருக்குப் பூச்சிக்கடி பாதிப்பு அதிகம்.


காரணம் என்ன?

பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை உள்ள ஒரு வகைப் புரதம் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அலர்ஜியைத் தூண்டுகிறது. இதற்கு எதிராக ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப் புரதம் நம்முடைய ரத்தத்தில் உருவாகிறது. இது, பூச்சியின் நச்சுப் புரதத்தை உடலில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’ (Histamine), ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) வேதிப்பொருட்களை வெளியிடுகின்றன.  இவை, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து, அங்கு உள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால் அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து வீங்குவது, வாந்தி. மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

அறிகுறிகள் என்னென்ன?

பூச்சிக்கடியால் அலர்ஜி ஆகும்போது, கடித்த இடத்தில் மூன்றுவித அறிகுறிகள் வெளிப்படும். முதல் வகையில், தோல் அரிக்கும், சிவக்கும், தடிக்கும், லேசாக வலிக்கும், காய்ச்சல் வரும். இவை, ஒரு சில தினங்களே காணப்படும். இரண்டாவது வகையில், அரிப்பும் வீக்கமும் கடுமையாக இருக்கும். உதாரணத்துக்கு, மணிக்கட்டில் பூச்சி கடித்தால், கை முழுவதும் வீங்கிவிடும். கையைத் தூக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். கடிபட்ட இடம் மட்டும் அல்லாமல், கண் இமைகள், காது மடல்கள், உதடு, பிறப்பு உறுப்புப் பகுதியில் நீர் கோத்த வீக்கங்கள் காணப்படும். இவை, ஒரு வாரம் வரை நீடிக்கும்.

மூன்றாவது வகையில், கடுமையான தலைவலி ஏற்படும். வயிறு வலிக்கும், வாந்தி வரும், தொண்டையை அடைக்கும், எச்சில்கூட விழுங்க முடியாது, மூச்சு விடுவது சிரமமாக இருக்கும், படபடப்பாக இருக்கும், மயக்கம் வரும். இதுதான் மோசமான நிலை. உடனே கவனிக்க வேண்டும். இல்லை என்றால், பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

ஏற்கெனவே ஆஸ்துமா, எக்சீமா, மருந்து அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

என்ன முதலுதவி?

லேசான அரிப்பு, தடிப்புகளுக்கு காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்டு கலந்த கிரீமைத் தடவலாம். வீக்கத்தைத் தேய்க்கக் கூடாது. வீக்கம் கடுமையாக இருந்தால், கடித்த முனையில் குண்டூசி கொண்டு குத்தி, நச்சை அகற்ற முயற்சிக்கலாம். உதாரணமாக, குளவி கொட்டிய இடத்தில் அதன் கொடுக்கு சில சமயம் சருமத்தில் புதைந்து இருக்கலாம். அதனை அகற்ற வேண்டும். கடித்த இடத்தில் மோதிரம், வளையல், மெட்டி, பிரேஸ்லெட் போன்றவை இருந்தால்அகற்றிவிட வேண்டும். கடிபட்ட இடத்தைச் சோப்பு போட்டுக் கழுவிச் சுத்தம்செய்து, ஈரத்துணியால் இறுக்கமாகக் கட்ட வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை துணிக்கட்டைத் தளர்த்தி, மீண்டும் இறுக்கிக் கட்ட வேண்டும். ஐஸ்கட்டி ஒத்தடமும் தரலாம். ஐஸ்கட்டியை அப்படியே கடித்த இடத்தின் மேல் வைக்கக் கூடாது. அதை, லேசான பருத்தித் துணியில் சுற்றி, கடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.


என்ன சிகிச்சை?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை தரப்படுவது நடைமுறை. கடித்த பூச்சியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காண் பித்தால், பூச்சியின் விஷத்தன்மையைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப சிகிச்சையைத் தர முடியும். ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் கடித்துவிட்டால்தான் ஆபத்து அதிகம். அப்போது, எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக ஆபத்தையும் தவிர்க்கலாம்.

எறும்பு போன்ற சாதாரணப் பூச்சி கடித்தாலும் உயிருக்கு ஆபத்து நேரும் வகையில் மோசமாக அலர்ஜி ஆகிறது என்றால், ‘வீனம் இம்யுனோதெரப்பி’ தரப்படும். இதுபோல், பூச்சிக்கடியால் அலர்ஜி ஆகும் வாய்ப்பு அதிகம்  உள்ள நபர்களுக்கும் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதை மூன்றில் இருந்து ஐந்து வருடங்களுக்குத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கு செலவு சிறிது அதிகம் ஆகும். சருமப் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து, ‘இம்யூனோகுளோபுலின் இ’ அளவைத் தெரிந்து, அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகள் தரப்படுவதும் வழக்கத்தில் உள்ளது.


விஷக்கடிகளைத் தவிர்க்கஸ

பூச்சிகள் அதிகம் வாழும் தோட்டம், வயல், காடு போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, முழுக்கைச் சட்டை, முழுக்கால் பேன்ட் அணிந்து செல்வது பாதுகாப்பானது. முகத்துக்கு மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.

பூச்சிகளைக் கவரக்கூடிய அடர் வண்ணத்திலான ஆடைகளைத் தவிர்க்கவும்.

வாசனைத் திரவியங்களை போட்டுக்கொண்டு பூச்சிகள் இருக்கும் இடத்துக்குப் போகாதீர்கள்.

தகுந்த காலணிகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லுங்கள். குறிப்பாக, புல் தரைகளில் வெறுங்காலோடு நடக்காதீர்கள்.

அழுகிய உணவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.

குளியல் அறையை அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

குளவிக் கூடுகளையோ, தேன் கூட்டையோ தேவை இல்லாமல் கலைக்க வேண்டாம்.

துணிமணிகள், கை உறைகள், கால் உறைகள், ஷூ போன்றவற்றை நன்கு உதறிவிட்டு அணிய வேண்டும்.

வீட்டுச் சுவர்களில் பூச்சிகளுக்கான எதிர் மருந்துகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூசிக்கொள்ள வேண்டும்.


பூச்சிகளின் உலகம்!

நாட்டு ஓடு வேய்ந்த வீடுகளில் குளவி, தேனி, தேள், பூரான் போன்றவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

ஈரமும் இருட்டும் நிறைந்த அறைகளில் கரப்பான் பூச்சி, பூரான் போன்றவை இருக்க வாய்ப்புகள் அதிகம்.

வீட்டுத் தோட்டங்களிலும் பூந்தோட்டங்களிலும் பழ மரங்களிலும் குளவியும் தேனியும் கூடு கட்டும்.

தோட்டங்களில் கற்களுக்கு அடியில் தேள்கள், பூரான் போன்றவை இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே, கற்களைப் புரட்டும்போது கவனம் தேவை.


அலர்ஜி டேட்டா!

ஜிம்பாவே நாட்டில்தான் பூச்சிக்கடியால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்.

உலக மக்கள்தொகையில் 25 சதவிகிதம் பேருக்குப் பூச்சிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் தென்னை மரம், பனை மரங்களில் வசிக்கும் வண்டுகள் அதிக விஷம் கொண்டவை.

பூச்சிக்கடியால் அலர்ஜி ஆகும் 100-ல் எட்டு பேருக்கு மூன்றாம் வகை அலர்ஜியும், 26 பேருக்கு இரண்டாம் வகை அலர்ஜியும், மீதிப் பேருக்கு முதல் வகை அலர்ஜியும் ஏற்படுகின்றன.


பரவும் கொடிய நோய்கள்



உலகின் ஆபத்தான ஜீவராசி என்றால் சிங்கம், புலி என்று எண்ண வேண்டாம்ஸஅது கொசுதான். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன கொசுக்கள். ஆண்டு முழுதும் உலகின் ஏதாவது ஒரு பகுதி, கொசுக்களால் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள்

 

பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்; கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி ‘உலகக் கொசுக்கள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில், மலேரியாவுக்கு காரணமான ‘அனோபிலஸ்’ மற்றும் டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு மிகவும் ஆபத்தானவை.

ஏடிஸ் ஏஜிப்டி குடும்பத்தைச் சேர்ந்த கொசுக்கள், அளவில் பெரிதாக இருக்கும். இவை, பகல் நேரங்களில் கடிக்கும். இந்தக் கொசுவால் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா முதலான மோசமான வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மலேரியாவும் டெங்குவும்தான் மக்களை ஆட்டிப்படைக்கின்றன.

 

மலேரியா காய்ச்சல்

பிளாஸ்மோடியம் பாராசைட் என்கிற ஒட்டுண்ணி, ரத்த செல்களைப் பாதித்து பரவும் ஆற்றல் வாய்ந்தது. ஒரு மனிதரிடம் இருந்து, இன்னொரு மனிதருக்கு இந்த ஒட்டுண்ணி, கொசுக்கள் மூலமாகத்தான் பரவுகிறது.

அனோபிலஸ் எனும் பெண் கொசுக்கள் மலேரியா பாதித்த நபரிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது, அதன் உடலில் பிளாஸ்மோடியம் பாரசைட் ஒட்டுண்ணி பரவும். பிறகு, மற்றொரு மனிதரை அந்தக் கொசு கடிக்கும்போது, அவருக்கும் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.
கொசு கடித்த உடனே மலேரியா வந்துவிடாது. ஓரிரண்டு வாரத்துக்குள் மலேரியாவுக்கான அறிகுறிகள் வெளிப்படும்.

ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, வாந்தி, சோர்வு போன்றவை இருக்கும். ஆனால், பாதிப்பின் தீவிரம் அதிகமானால், மெள்ள மரணத்தைக்கூட ஏற்படுத்த வல்லது. இந்தக் கிருமி ரத்த அணுக்களையும் கல்லீரலையும் பாதிப்பதால்தான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மலேரியா காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உலகம் முழுவதும் குழந்தைகள்தான் மலேரியா காய்ச்சலால் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.

உலகில் பாதிப் பரப்பளவில் மலேரியா காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இருக்கின்றன. மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கோ இடங்களுக்கோ செல்ல நேர்ந்தால், மலேரியா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

டெங்கு காய்ச்சல்

கடந்த 10 ஆண்டுகளில் உலகையே ஆட்டிப்படைக்கும் காய்ச்சல் எதுவென்றால், அது டெங்குதான். மழைக்குப் பிறகு டெங்குவைப் பரப்பும் கொசுவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால்தான், தற்போதும் தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த வைரஸ் ஏடிஸ் ஏஜிப்டி கொசுவுக்குள் சென்றுவிட்டால், 6 – 10 நாட்களுக்குள் அந்த வைரஸ் கொசுவின் உடலில் முழுவதுமாகப் பரவிவிடும். பின்னர், கொசுவின் வாழ்நாள் முழுமைக்கும் உடலில் வைரஸ் இருக்கும். அந்தக் கொசு உயிருடன் இருக்கும் வரையிலும் மனிதர்களிடம் காய்ச்சலைப் பரப்பும். குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள், முதியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் டெங்கு காய்ச்சல் வரலாம்.  இந்தக் காய்ச்சல் வந்தால், 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உடல் வெப்பநிலை சரசரவென ஏறும். கடும் தலைவலி வரும். கண்கள் எரிச்சலாக இருக்கும். தசைகள் மற்றும் மூட்டு இணைப்புகளில் கடும்வலி ஏற்படும். வாந்தி, வீக்கம், தோலில் எரிச்சல் ஏற்படும். ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இந்த தட்டணுக்கள்தான் ரத்தம் உறைதலுக்கு முக்கிய காரணம்.

ஏழு நாட்களுக்குள் உடனடியாகக் கண்டுபிடித்து இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை எனில், கடும் வயிற்றுவலி  ஏற்படும். அதைத் தொடர்ந்து, வாந்தி, மூச்ச விடுதலில் சிரமம், ரத்தம் உறையாமை காரணமாக ரத்த வாந்தி, சுவாசப் பாதையில் ரத்தக் கசிவு ஏற்படும். இது, ஆபத்தான நிலை. எனவே, இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


 கொசுக்களை ஒழிப்போம்!


*காய்ச்சல் வந்தபிறகு சிகிச்சை அளித்து குணமாவது ஒருபக்கம் இருந்தாலும், மலேரியாவையும் டெங்குவையும் ஒழிப்பது நமது முக்கியக் கடமை.

*நம் வீட்டைச் சுற்றி எந்தப் பொருளிலும் தண்ணீர் தேங்கவிட அனுமதிக்கக் கூடாது. அண்டை வீட்டாருடன் இணைந்து, குப்பைக்கூளங்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்துவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அதற்கு உரிய குப்பைத்தொட்டியில் சேர்க்க வேண்டும்.

*நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குத்தான் அதிக அளவில் காய்ச்சல்கள் வருகின்றன. எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வீட்டுச் சுவர்கள் மீது டி.டி  மருந்துகளைத் தெளிப்பது அவசியம். தெருவோர சாக்கடைகளில் ‘டெல்ட்டோ மெத்ரின்’ போன்ற மருந்துகளைத் தெளிக்க, கொசுக்கள் ஒழியும்.

*காற்றுக் காலம், மழைக்காலம், பனிக்காலங்களில், பகலிலும் ஜன்னல்களை அடைத்துவைப்பது நல்லது. வெளிச்சம் தேவைப்படுபவர்கள், ஜன்னலில் கொசுவலை அடிப்பது நல்லது.

*வீட்டுக்குள் நுழையும் முன் கை, கால்களைச் சுத்தம் செய்வது நல்லது. டெங்கு பரவும் காலங்களில்,  இரவு நேரத்தில் மெலிதான முழுக்கைச் சட்டை, முழுக்கால் பேன்ட் அணிவது  நல்லது. முடிந்தால், இரவு உறங்கும்போதும் கொசுவலையைப் பயன்படுத்தலாம்.

*டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் நிலவேம்புக் குடிநீர் அவ்வப்போது அருந்திவரலாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies