சர்க்கரையில் உடலுக்கு நல்லது,கெட்டது என்ற வகை உண்டா?
ஆனால் ரத்தத்தில் சேரும் அதிக சர்க்கரையினால் ஏற்படும் நீரிழிவு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இனிப்பு சுவையை கொடுக்கும் சர்க்கரையில் உடலுக்கு கேடு வளைவிக்காத சர்க்கரை வகை ஏதும் உண்டா என்பது குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன.
அப்படியென்றால் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என அந்த இனிப்பை வகைப்படுத்த முடியுமா என்பதே தற்போது நடைபெற்று வரும் ஆய்வின் மையப்புள்ளியாகவுள்ளது.
எனவே உடலுக்கு கேடுவிளைவிக்காத நல்ல சர்க்கரையுள்ள உணவுகள் எவை என்பதையும் இந்த இந்தப் பகுப்பாய்வில் ஆராயப்படுகிறது.
ஆனால் சர்க்கரை என்றாலே அது உடலுக்கு கேடானதே என்ற முடிவை வேறொரு அண்மைய ஆய்வு முன்வைத்துள்ளது.
சர்க்கரைக்கு மாற்றீடாக ஆரோக்கியமான ஒன்றாக தேன் உள்ளது என பரவலான நம்பிக்கை உள்ளது.
ஆனால் அதில் உண்மையில்லை என்று வேறொரு ஆய்வு கூறுகிறது.
மனிதர்கள் தனம்தோறும் பயன்படுத்தும் இனிப்புச் சுவையிலுள்ள உள்ள சாதாரண சர்க்கரைகள் எனப் பொதுவாக புரிந்துகொள்ளப்படும் குளுகோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் ஆகியனவே தேனிலும் உள்ளன என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே அளவுக்கு மிஞ்சிய சர்க்கரை எந்த வழியாக உட்கொள்ளப்பட்டாலும், அவை உடலுக்கும் சுகாதாரத்திற்கும் கேடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சர்க்கரையின் வகைகள் குறித்த விவாதங்களில் ஃபிரக்டோஸை அடிக்கடி வில்லனாகவே சித்தரித்க்கப்படுகிறது.
மருத்துவ ரீதியாக குளுக்கோஸை உடலின் செல்கள் அனைத்தும் அகத்துறிஞ்சிவிடும், ஆனால் ஃபிரக்டோஸை கல்லீரல் மாத்திரமே கையாளும். மிதமிஞ்சிய ஃபிரக்டோஸும் கல்லீரலுக்கு கேடு ஏற்படுத்தலாம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குளுக்கோஸ் அதிகரிக்கச் செய்வது போல ஃபிரக்டோஸ் அதிகரிக்கச் செய்யாது எனவும் சிலர் வாதிடுகின்றனர்.
ஆனால் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்க்கரை என்று பார்க்கும் போது குளுக்கோசுக்கும் ஃபிரக்டோசுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் கிடையாது என அண்மைய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிற்றை நிரப்பி விடுவதால் அவற்றின் மூலமாக உடலால் உறிஞ்சப்படும் ஃபிரக்டோஸ் சர்க்கரை மட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால் மறுபுறம் இனிப்பான குடிபாணத்தில் உள்ள உடலுக்கு மிதமிஞ்சிய சர்க்கரை நேரடியாக உடலால் உறிஞ்சப்படுவதுடன், தேவைக்கும் அதிகமான அளவுக்கு கூடுதல் கலோரிகள் கொண்ட உணவுகளையும் உண்பதற்கு உடலுக்கு இடமளித்து கேடு விளைவிப்பதாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் கலோரியில் சர்க்கரையின் அளவு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு சர்க்கரை உட்கொள்ளப்படுவது அதிகரித்துள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில், சர்வதேச அளவில் சர்க்கையின் பயன்பாடு நபர் ஒருவருக்கு 46% அதிகரித்துள்ளது எனவும் அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.