ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகும்போது அக்குழந்தையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல்வேறு கற்பனைகளையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறாள்.
அந்தக் குழந்தை ஒரு ஆரோக்கியசாலியாகவும் புத்திசாலியாகவும் வளருவதையே எந்தவொரு தாயும் விரும்புகிறாள்.
இவ்வாறு அக் குழந்தையை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அக் குழந்தைக்கு தாயானவள் கொடுக்கும் உணவு ஆகும்.
எந்தக் குழந்தைக்கும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். அது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல போசனைப் பொருட்களையும் சரியான அளவில் வழங்கும்.
குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பாலின் கலவை நாளுக்கு நாள் மாறுபடுவதால் தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்கும் குழந்தைகள் நன்கு வளர்வார்கள்.
முதல் பால்
குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலயத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கலாம்.
பிரசவத்திற்குப் பின் தொடக்க நாட்கள் சிலவற்றிற்கு சுரக்கும் பால் முதல்பால் ஆகும். இது இலேசான மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுள்ள திரவமாகும். இது சகல பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய உணவாகும்.
*பிள்ளைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி நோயிலிருந்து பாதுகாப்புப் பெற முதல் பால் உதவுகிறது.
*பிள்ளையின் உடல் உறுப்புகளின் விருத்திக்கு இம்முதல் பால் உதவுகின்றது.
*பிள்ளை மஞ்சள் நிறமாவதைத் தடுக்க இம்முதல் பால் உதவுகின்றது.
*ஒவ்வாமை, அஜீரணம் என்பவற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்
*கண் நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க இம் முதல் பால் உதவுகின்றது.
தாய்ப்பால் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
பிள்ளை பால் உறிஞ்சும்போது பால் சுரப்பு ஆரம்பமாகின்றது. பால் வெளியேறும் அளவுக்கேற்ப பால் சுரப்பும் இருக்கும். ஆகையால் அடிக்கடி குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது பால் சுரப்பு அதிகரிக்கும். இரவிலும் பால் கொடுக்க வேண்டும்.
பால் கொடுக்கும்போது வசதியாக அமர்ந்தோ அல்லது படுத்தோ ஒரே முலையில் பால் கொடுப்பது சிறந்தது. அடுத்த முறை பால் கொடுக்கும்போது மற்றைய முலையில் பால் கொடுக்கத் தொடங்க வேண்டும்.
*தொடக்கத்தில் முலையிலிருந்து வெளியேறும் பாலில் நீர்த்தன்மை அதிகமுள்ளதால் பிள்ளையின் தாகம் தீர்க்கப்படும். பின்னைய பாலில் கொழுப்பு அதிகமுள்ளதால் பிள்ளை நன்கு வளர அது உதவுகின்றது.
(சரியான முறையில் பிள்ளைக்கு பால் கிடைப்பதை அது விழுங்கும் முறையிலும் சத்தத்திலும் கன்னங்கள் உப்புவதிலும் அறிந்து கொள்ளலாம்)
*போதுமான அளவு பால் கிடைக்கும்போது பிள்ளைகள் நாள் ஒன்றுக்கு 6 – 7 தடவைகளுக்கு மேல் சிறுநீர் கழிப்பர். நாள் ஒன்று சிறுநீர் கழிக்கும் தடவைகளை கணக்கிடலாம். இதன் மூலம் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்யலாம்.
*தாய்ப்பால் கொடுக்க முன்னர் தாய் சூடான பானமொன்றை அருந்துதல் சிறந்தது.
*வேலைக்குச் செல்லும் தாய்மார் அல்லது பிள்ளையை விட்டு வெளியில் செல்ல வேண்டி ஏற்படும்போது முலையிலிருந்து பாலை எடுத்து அதை கரண்டியாலோ அல்லது கோப்பையிலோ பிள்ளைக்குப் பருக்கலாம்.
எனவே தாய்மார் பாலை கறக்கும்முறை பருக்கும் முறை மற்றும் அதை பாத்திரத்தில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கும் முறை என்பவற்றை அறிந்திருத்தல் அவசியம்.
ஒரு பக்க முலை வெறுமையாகும்வரை அதிலிருந்து பாலை எடுத்து பின் மற்றைய முலையிலிருந்து பாலை எடுக்கவும் அறை வெப்ப நிலையில் 6 மணித்தியாலமும் குளிர்சாதனப் பெட்டியில் கீழ் தட்டில் 24 மணித்தியாலமும் பால் பழுதடையாது பாதுகாக்கலாம்.
தாய் வேலைக்குப்போன பின் வேலை ஸ்தாபனத்தில் 3 மணித்தியாலயத்திற்கு ஒரு முறை முலையிலிருந்து பாலை வெளி அகற்றுவதன் மூலம் முலையில் பால் இறுக்கமடைவதைத் தவிர்ப்பதுடன் பால் சுரப்பையும் தொடர்ச்சியாகப் பேணலாம்.
*பிள்ளைக்குப் பால் கொடுக்கும்முறை, பால் குடித்த பின் பிள்ளைக்கு வாயு வெளியேற்றல் மற்றும் குழந்தைக்கு பால் கொடுத்த பின் நித்திரையாக்கும் முறை என்பனவற்றை அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியரிடம் உங்கள் பிரசவம் நடைபெற்ற பின் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
*குழந்தை பிறந்து ஆறு மாதம் முடியும்வரை தனித் தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது. ஆனால் குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்காதவிடத்து தற்போது வைத்திய ஆலோசனையுடன் ஏனைய முறைகளில் (போத்தல்) பாலூட்ட அறிவுறுத்தப்படுகின்றது.
குழந்தைக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பால் கொடுப்பது சிறந்தது. குழந்தையின் பசியை சைகை மூலம் அறிந்து அது அழும்வரை காத்திருக்காமல் பால் கொடுப்பது சிறந்தது.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்:
*தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், சூலகப்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறையும்.
*பிரசவத்திற்கு பின் தாயின் உடல் நிறை குறைவடையும். *தாய்க்கும் பிள்ளைக்குமான ஒட்டுறவு அதிகரிக்கும். தாய்க்கு உள ரீதியான ஆறுதல் கிடைக்கும்.எனவே நேயர்களே பிரசவமானது சுகப் பிரசவமோ அல்லது சிசேரியன் பிரசவமோ எதுவாயினும் அதன் பின் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் முக்கிய பிரசவத்தின் பின் குழந்தைக்குப் பால் கொடுப்பது தொடர்பான அறிவுரைகளை அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியரிடம் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தரிடம் கேட்டு தெரிந்து கொள்வது சிறந்தது
குழந்தையில்லா பிரச்சினைக்கு ஆண்கள் காரணமானவர்களா?
குழந்தையில்லா பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்பதையும் அதற்கா ஆரம்ப கட்ட சடவடிக்கைகளையும் கடந்த இதழில் பார்த்தோம். இதில் ஒன்றாக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்தால் பிள்ளை பேறு கிடைக்குமா? வைத்தியரின் ஆலோசனை படி மருந்து வகைகளை உட்கொண்டால் குறிப்பிட்ட நில நாட்களில் உரிய பயனைப்பெறக்கூடியதாக இருக்கும். பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள் மாத்திரைகளை ஒரு மாதம் மாத்திரம் உட்கொண்டால் பயன் கிடைக்கும் என நினைக்கின்றார்கள். அது முற்றிலும் தவறான விடயம். வைத்தியர்கள் கொடுக்கும் இவ்வாறான மருந்து வகைகளை உரியவர்கள் கருத்தரிப்பு ஏற்படும் வரை உட்கொள்ளுவதுவே சிறந்தது. சில சயமங்களில் ஒருமாதம் வரையில் மருந்துகளை எடுத்துவிட்டு பலன் கிட்டாத பட்சத்தில் நிறுத்தி விடுகின்றனர்.
இங்கு யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனின், ஒரு விரைப்பையில் உருவாகக்கூடிய உயிரணுக்களும் சினைப்பையில் உருவாகக்கூடிய முட்டைகளும் நமக்கு கருத்தரிக்கும் சூழ்நிலையானது மூன்று மாதங்களுக்கு தான் ஏற்படுகிறது. எப்படி ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் கரு உருவாகி பத்து மாதம் கழித்து குழந்தையாக வெளிவருகிறதோ அதே போன்று தான் சினைப்பையிலும் விரைப்பையிலும் ஒரு உயிரணுக்களும் முட்டைகளும் உருவாகினால் மூன்று மாதம் கழித்து தான் அது வெளிவந்து கருத்தரிக்க பயன்படுகிறது. அதனால் நாம் எடுக்கக்கூடிய நல்ல முயற்சிகள் நல்ல மாற்றங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைகள் இவையனைத்துமே குறைந்தது ஒரு மூன்று மாதங்களின் பின்னரே அதனுடைய முன்னேற்றங்களை அறியக்கூடியதாக இருக்கும்.
மருந்துகளை தவிர்த்து வேறெதுமுண்டா எனக்கேட்டால் ஆம்! நிச்சயமுண்டு நம்முடைய நியூற்றியன்ஸ், மினரல்ஸ் ,விற்றமின்களை நமது உடலுக்குத் தேவையான அளவு உட்கொள்ள வேண்டும். .நம்முடைய உடம்பில் தற்போது எதிர்ப்பு சக்திக்குறைப்பாடுகள் அதிகம் ஏற்படுகின்றன. நம்முடைய உடலில் நமக்கே தெரியாமல் பல மாற்றங்கள் நிகழ்கிறது. சில சமயங்களில் நாம் நேரத்திற்கு உண்பது, உறங்குவது இல்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. காரணம், வேலை பளு. இதனை ஈடு செய்வதற்கு ஆன்டீஆக்ஸிஜன் எமக்கு தேவைப்படுகின்றது. இவற்றை நாம் கொடுக்கும் போது வயது அதிகரித்தவர்களின வயதை திரும்ப பெறமுடியாவிடினும், கூட உயிரனுக்களின் செயற்பாட்டினை சற்று அதிகரிக்க முடிகிறது.. இதற்கு மல்டி விற்றமின்ஸ், மினரல்ஸ், ஆன்டீ ஆக்ஸிஜன் ஆகியவை உயிரணுக்களின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்கின்றன.
இவற்றை கணவன் மனைவிக்கு கொடுத்து மூன்று மாதத்திற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் போது இயற்கையாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இம்மருந்துகளினால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இதனை நோய்க்கு மருந்து உண்பதாக எடுத்துக்கொள்ளவே தேவையில்லை ஆகையால் கருத்தரிப்பதற்குரிய நிலைப்பாட்டை ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே தேவையான ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்வது சிறந்தது.
ஆண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் அதிகரிக்குமா?
2000 ஆம் ஆண்டுகளில் குழந்தையின்மை பிரச்சினை 3 சதவீதத்தில் இருந்து 20 வீதமாக அதிகரித்துள்ளது. இன்றும் 10 வருடங்களில் இப்பிரச்சினை 7 மடங்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கே இவ்வாறான பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கே அதிகளவிலான சமூக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெண்களை விட ஆண்களே பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட பெரும் எண்ணிக்கையிலான ஆண்களே இன்று வேலைக்குச் செல்கின்றனர். வேலைப்பளு அதிகரிப்பு வீட்டுச் சுமை என பலதரப்பட்ட அழுத்த விடயங்களில் ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் தற்போது வேலைக்குச் செல்லும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் இருசக்கர வாகனங்களையே (மோட்டார் சைக்கிள்) பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இருசக்கர வாகன பயன்பாட்டின் போது ஆண்களின் உடலில் வெப்பம் மேலும் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
எப்போதும் ஆண்களின் விரைப்பிலிருக்கக்கூடிய தோல் அமைப்பானது வித்தியாசமாக இருக்கும். உடற்தோற் பகுதியை விட சற்று வித்தியாசமாக இருக்கும். ஆகையால் குறிப்பிட்ட அப்பகுதிக்கு அதிகளவான காற்றோட்டம் தேவைப்படுகின்றது. இவ்வாறு இரு சக்கரங்கள் மற்றும் தொடர்ச்சியாக இருக்கையில் அமர்ந்தவாறே வாகனத்தை செலுத்திச் செல்லுதல் போன்ற காரணங்களால் காற்றோட்டம் இல்லாது போகின்றது.
ஒரு பெண் கருவில் ஆண் குழந்தையை சுமக்கும் போது விறையானது வயிற்றில் இருக்கும் அதுவே குழந்தை பிறந்த பின் விரை கிழிறங்கிவிடும். அது அவ்வாறு இறங்கவில்லையாயின் அதனுள் வளர்ச்சியை எதிர்ப்பார்க்க முடியாது. விரை வயிற்றுக்குள் இருக்கும் போது சிறிதாக இருக்கும் கீழிறங்கிய பின் தான் அது வளர்ச்சியடையவே ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது இது முதலாவது விடயம்.
இரண்டாவது விடயம் என்னவெனில், நம்முடைய உடலில் உள்ள உடல் டெம்பரஜியினை பார்த்தோமானால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், பிற இடங்களை விட அவ்விடத்தில் 1 டிகிரி குறைவாகவிருக்கும். இந்த விரைக்கு ஒரு குளிர்ச்சி தேவை . அதனுடைய செயற்பாடுகள் திறமாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு குளிர்ச்சி தன்மை வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் எரிசக்கர வாகனத்தை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவர்களின் உடல் வெப்பநிலை அதிகமாகிறது. இதனால் விரையில்அதிக நரம்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்கள் தான் அதிகமாக உடனடி ( கயளவ கடிடின ) உணவுகளை உட்கொள்கின்றனர். அதனால் அதனாலும் எடை ரீதியாக கூட பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அத்துடன் மதுபாவனை மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பல பிரச்சினைகளும் குழந்தையில்லாப் பிரச்சினைக்கு காரணமாகின்றது. அதிகமாக பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்கள் இவை அனைத்தும் பெண்களை விட ஆண்களுக்கே அதிகரித்த பிரச்சினைகளை ஏற்படுத்திவருகிறது. இவையும் குழந்தையின்மைக்கு பிரதான காரணமாகிவிடுகின்றது.... கால சூழலுக்கேற்ப மாறுதல்கள் ஆண்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா