காபியை விட டீ நல்லதா?
02 Feb,2016
காபியை விட டீ நல்லதா?
காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காவிட்டால், சிலருக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. காபி குடிப்பதை விட, டீ குடித்தால் தான் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு காபியை விட டீயில் அப்படி என்ன நன்மை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படின்ன இதை படிங்க..
காபி குடித்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலுக்கு பலவிதமான கேடுகளை ஏற்படுத்தும். அதுவே மூலிகை டீக்களான சீமைச்சாமந்தி அல்லது லாவெண்டர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், அது மனதை அமைதிப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். எனவே நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க நினைத்தால், தினத்தை தொடங்கும் முன் ஒரு கப் டீ குடியுங்கள்.
காபி குடிப்பதால் உடல் எடையோ, தொப்பையோ குறையாது. ஆனால் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புச் செல்களின் அளவு குறைந்து, உடல் எடை குறையும். க்ரீன் டீயில் உள்ள EGCG எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலைத் தாக்கி இருமல் மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.
Show Thumbnail காப்ஃபைன் அதிகம் நிறைந்த காபியைக் குடித்தால், அது உடலினுள் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் மற்றும் இதர இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி டீ, புதினா டீ போன்றவற்றை குடித்தால், அது உடலில் அல்கலைன் அளவை அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெற உதவும்.
க்ரீன் டீ, ப்ளாக் டீ போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் அது புற்றுநோயைத் தடுக்கும். அதிலும் க்ரீன் டீயில் பாலிஃபீனாலும், ப்ளாக் டீயில் தியாப்ளாவின்கள் மற்றும் தியாரூபின்களும் உள்ளன. அதற்காக டீயை அதிக அளவில் குடிக்க வேண்டாம். இதனால் கடுமையான பக்க விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும்